search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tractor hit"

    • வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் வெங்கடேசன் (வயது 39) இவர் நேற்று சொந்த வேலை காரணமாக தனது மனைவி நிவாஷினி மற்றும் குழந்தை பிரகதீஸ்வரன் ஆகியோருடன் எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது தியாகை பெரியநாயகி அம்மன் கோவில் அருகே சென்றபோது தனக்கு முன்னாள் சென்ற டிராக்டரை முந்தி சென்றார். அப்போது டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி நிவாஷினி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தியாகதுருகத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கண்டாச்சிமங்கலம்:

    புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ரவிக்குமார் (வயது 35). இவர் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தியேட்டரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று ரவிக்குமார் தியேட்டரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு சென்றார்.

    அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து செங்கற்கள் ஏற்றிக்கொண்டு தியாகதுருகத்துக்கு வந்த டிராக்டர், ரவிக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய ரவிக்குமார், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான ரவிக்குமார் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரவிக்குமாரின் தம்பி செல்வராஜ்(24) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் கள்ளக்குறிச்சி அருகே மோ.வன்னஞ்சூரை சேர்ந்த வேலு(26) என்பவரை தேடி வருகின்றனர்.     
    அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். கடந்த ஆண்டு நடந்த விபத்தில் மகன் இறந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    சிங்கை:

    அம்பையை சேர்ந்தவர் குருசாமி (வயது 52). இவர் வீட்டில் வைத்து போட்டோவுக்கு பிரேம் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லெட்சுமி (48). நேற்று குருசாமி, மனைவியுடன் தனது மோட்டார் சைக்கிளில் அம்பை அருகே உள்ள வாகை குளத்தில் உள்ள வாகைபதி கோவிலுக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பினார். அவர் வாகைகுளம் விலக்கு பகுதியில் வந்த போது எதிரே வந்த டிராக்டர் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் குருசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. லெட்சுமிக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. உடனடியாக அங்கிருந்தவர்கள் குருசாமியை மீட்டு அம்பை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான குருசாமியின் மகன் ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த ஆண்டு சேரன்மகாதேவியில் நடந்த விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஏற்கனவே விபத்தில் மகன் இறந்த நிலையில் தற்போது குருசாமி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    போச்சம்பள்ளியில் டிராக்டர் மோதி கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி வயது (45), கூலி தொழிலாளி. இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக போச்சம்பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது தருமபுரியில் இருந்து போச்சம்பள்ளி சாலையான கொள்ளம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் ஒன்று எடை நிலையத்தில் இருந்து எடை பார்த்துவிட்டு திருப்புவதற்காக பின்னே வந்த நிலையில் எதிர்பாராத விதமாக வீராசாமியின் மீது மோதியது. 

    இதில் சம்பவ இடத்திலேயே வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து டிராக்டர் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். 

    இந்த விசாரணையில் டிராக்டர் உரிமையாளர் போச்சம்பள்ளியை அடுத்துள்ள மடத்தானூரை சேர்ந்த பாலு என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் திருப்புறம்பியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 50). பம்பு பிட்டர். இவர் இன்று காலை கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருப்புறம்பியம் கடைவீதியில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டர் துரைராஜ் மீது மோதியது. 

    இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட டிராக்டர் டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரைராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். பலியான துரைராஜிக்கு விஜயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் திருப்புறம்பியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொண்டி அருகே பள்ளி மாணவி விபத்தில் பலியான சம்பவம் எஸ்.பி.பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் மேல தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகீம். இவரது மகள் சுபைலாபானு (வயது7). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை மாணவி சுபைலாபானு வீட்டில் இருந்து வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டார். அவர் தெருவில் நடந்தபோது அங்கு நின்ற டிராக்டர் பின்னோக்கி வந்தது.

    டிராக்டர் டிரைவர் மாணவியை கவனிக்காததால் அவர் மீது டிராக்டர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபைலாபானு உடல் நசுங்கி பலியானார்.

    விபத்து குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பள்ளி மாணவி விபத்தில் பலியான சம்பவம் எஸ்.பி.பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆத்தூர் அருகே டிராக்டர் மோதி 2½ வயது குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது உப்பு ஓடை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவர். இவரது மனைவி ராதிகா (வயது 27). இவர்களுக்கு தீபிகா(4) என்ற மகளும், நவீன்(2½) என்ற மகனும் உள்ளனர்.

    இன்று காலை நவீன் வீட்டின் அருகே மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது டிரைவர் பிரகாஷ் என்பவர் உப்புஓடை வழியாக டிராக்டரை ஓட்டிக் கொண்டு வந்தார்.

    வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நவீன், திடீரென பக்கத்தில் உள்ள உப்புஓடை சாலையில் நடந்து சென்றான். மகன் ரோட்டில் நடந்து செல்வதையும், எதிரே டிராக்டர் வருவதையும் பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே ராதிகா, மகனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக டிராக்டரை நிறுத்துங்கள் என சத்தம் போட்டப்படி வேகமாக சாலையில் ஓடினார்.

    அதற்குள் டிராக்டர், ராதிகாவின் கண் முன்பு பயங்கரமாக நவீன் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நவீன் பரிதாபமாக இறந்தான். மகன் தன் கண்முன் துடித்துடித்து இறந்ததை கண்டு ராதிகா கதறி அழுதார்.

    சிறிது நேரத்திற்கு முன்பாக பார்த்து இருந்தால் மகனை காப்பாற்றி இருப்பேனே என கண்ணீர் மல்க கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. டிராக்டர் மோதி 2½ வயது குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி துறையூர் அருகே இன்று காலை டிராக்டர் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்க முடையான்பட்டியை சேர்ந்தவர் மதி. இவரது மனைவி காயத்திரி. இவர்களது மகள் அஹ்சிதா (வயது 4). இன்று காலை இவள் வீட்டின் அருகே சாலை யோரத்தில் விளையாடி கொண்டிருந்தாள்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்ற சென்று கொண்டிருந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் விளையாடி கொண்டிருந்த அஹ்சிதா மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அஹ்சிதா சம்பவ இடத்திலேயே பலியானர்.

    விபத்து நடந்ததும் டிரைவர், டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்தி டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். 

    ×