என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "truck accident"

    • திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
    • சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரெயிலும் கண்டைனர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அயோத்தியா - ராய்பரேலி ரெயில்வே கிராஸிங் அருகே இன்று அதிகாலை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.  

    அதிகாலை 2.30 மணியளவில் அந்த தடத்தில் சரக்கு ரெயிலானது வந்துகொண்டிருந்தது. அப்போது திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.

    இதில் படுகாயமடைந்த  லாரியின் ஓட்டுநர் சோனு சவுத்ரி (28), மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.

    மேலும் சம்பவத்தின்போது கேட் மேன் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக சேதமடைந்தது. சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    மேலும் ரெயில் பாதை மற்றும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அவ்வழியாக ரெயில் இயக்கம் தடைபட்டுள்ளது. ரெயில் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் வடக்கு ரெயில்வேவின் லக்னோ பிரிவின் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சீந்தர் மோகன் சர்மா தெரிவித்தார்.  

    • மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தது.
    • ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    மகாராஷ்டிராவின் மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை பயணித்துக்கொண்டிருந்தது.

    ஜல்கான் மாவட்டத்தில் உள்ள போட்வாட் ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் ரெயில் வந்துகொண்டிருந்தபோது கோதுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.

    அப்போது ரெயில் லாரி மீது மோதி சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அதை இழுத்துச் சென்றது. இதில் லாரி இரண்டாக உடைந்தது. ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினரும் ரெயில்வே நிர்வாகமும் தேடி வருகின்றனர்.

    லாரி ரெயில்வே தடுப்பை உடைத்து சட்டவிரோதமாக ரெயில் பாதையில் வந்தது தெரியவந்தது. இந்த திடீர் விபத்தால் ரெயிலில் பயணித்த பயணிகள் பீதியடைந்தனர். மேலும் இந்த விபத்தால் சில மணி நேரங்களாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தாண்டவத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • பைக் நொறுங்கியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் வாகனங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் நேற்றிரவு வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது ராஜ்குமார் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரியாபட்டி அருகே லாரி மோதி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவரது மகன் வர்கீஸ் நவீன் (16). அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் லாவண்யா (15).

    இவர்கள் இருவரும் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக 2 பேரும் ஆவியூர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கிரஷர் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக 2 பேர் மீது மோதியது. இதில் வர்கீஸ்நவீன், லாவண்யா ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந் தோஷ். இவர் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் பர் கூரில் இருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு நாட்டறம்பள்ளி வழியாக பச் சூர் நோக்கி சென்றுள்ளார்.

    பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் சந்தோஷ் சிறிய காயங்களுடன் அதிர்ஷ் டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்க் கொடுங்காலூர் வினோபா நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள் ளனர்.

    நேற்று முன்தினம் இரவு ஜெயராமன் வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கீழ்க்கொடுங்காலூர் அம்பேத்கர் நகர் அருகே செல்லும்போது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயராமனின் சட லத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மகன் நாகரா ஜன் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த தூசி நத்த கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 80). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வந்தவாசி- காஞ்சிபுரம் மெயின் ரோட்டை கடந்து சென்றார்.

    அப்போது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அங்கு உள்ளவர்கள் முருகேசனை மீட்டு ஆம்புலன்சில் காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார். இதுகுறித்து தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பனப்பாக்கம் அடுத்த தென் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் (வயது70) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரண த்தினால் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு தனது பைக்கில் மருத்துவமனைக்கு சென்று பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த கல்கத்தா காளியம்மன் கோவில் அருகே வரும்போது பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கங்காதரன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் கங்காதரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆற்காட்டை சேர்ந்தவர்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆம்பூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சென்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). லாரி டிரைவர்.

    இவர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து லாரியில் கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை குமுடிபூண்டி பகுதிக்கு செல்வதற்காக ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது நொண்டி குப்பம் அருகே வரும்போது சேலம் அடுத்த மேட்டூர் பகுதியில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றி க்கொண்டு சென்னை செல்வதற்காக முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது சிவகுமார் ஓட்டி வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு ள்ளானது.

    இதில் சிவகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் கிரானைட் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 பேர் காயம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    பெங்களூரில் இருந்து நேற்று முன் தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு, வேலுார் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    வாலாஜா பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெயபிரகாஷ் (42) என் பவர் பஸ்சை ஓட்டி வந்தார். லட்சுமிபுரம் அருகே 6 வழிச்சாலையில் சென்ற போது, முன்னாள் வேகமாக சென்று கொண்டிருந்த மினிலாரி, தடுப்புச்சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

    அதேநேரம், பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மினிலாரி மீது மோதியது. இதில், பெங்களூர் பகுதியைச் சேர்ந்த மினிலாரி டிரைவர் வேலன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராஜேந்திரன், சுந்தரி, குமார், சந்தோஷ் முருகன் உட்பட 8 பேர் காய மடைந்தனர். அதே நேரம், பஸ்சிலிருந்த 25-க்கும் அதிகமான பயணிகள் காயமின்றி தப்பினர்.

    விபத்து பற்றி தகவலறிந்த நாட்றம் பள்ளி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, விசாரித்த னர். பின்னர், விபத்தில் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுப்பாட்டை இழந்து விபரீதம்
    • அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று ஏலகிரி மலை அழைக்கப்படுகிறது.

    இந்த பகுதியில் உள்ள ஓட்டல்களில் தண்ணீர் சப்ளை செய்யும் லாரி நேற்று வழக்கம் போல் அத்தனாவூர் அருகே முருகன் கோவிலில் இருந்து பாடனூர் பகுதியில் தண்ணீர் ஏற்றிச் செல்வ தற்காக அத்தனாவூர் நிலாவூர் செல்லும் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

    இதனால் உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தினர். நிலாவூர் செல்லும் சாலை மிகவும் குறுகிய வளைவு சாலையாக உள்ளது.

    இது போன்ற விபத்து அடிக்கடி ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    மேலும் நேற்று முன்தினம் ஏலகிரி மலையில் கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து ஜெனரேட்டர் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்னை துறைமுகத்திற்கு சென்று கொண்டு இருந்தது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்தபோது கலெக்டர் அலுவலகம் அருகே பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த ஜெனரேட்டர் கீழே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்து கிரேன் மூலம் லாரி மற்றும் ஜெனரேட்டரை மீட்டு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×