என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "union budget"
- நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனையானது.
- வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுங்க வரி குறைப்பு காரணமாக சில நாட்கள் தங்கம் விலை குறைந்து விற்பனையானது. இருப்பினும் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனையானது.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,430-க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 70 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 91.70-க்கும் கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து பார் வெள்ளி ரூ.91,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.
- பார் வெள்ளி ரூ.91ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை பெரும்பாலும் குறைந்து விற்பனையானது. ஆனால் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
இன்று தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,420-க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 51,360-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 91 ரூபாய்க்கு கிலோவுக்கு 2 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.91ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை பெரும்பாலும் குறைந்து விற்பனையாகி வருகிறது.
அந்த வகையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.51,080-க்கும் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
- கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாநிதி மாறன் எம்.பி. தலைமை தாங்கினார்.
- தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே? வெள்ள நிவாரண நிதி, மெட்ரோ ரெயில் நிதி ஒதுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மத்திய அரசின் செயலை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தை நடத்தினர். அனைத்து மாவட்ட செயலாளர்களும் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் தி.மு.க.வின் பிற அணி நிர்வாகிகள் தீவிரமாக கலந்து கொண்டு மத்திய அரசின் போக்கை கண்டித்து கோஷமிட்டனர்.
சென்னையில் கலெக்டர் அலுவலகம், சைதாப்பேட்டை சின்னமலை, தாம்பரம், ஆவடி ஆகிய 4 இடங்களில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாநிதி மாறன் எம்.பி. தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி. எம்.எல்.ஏக்கள், ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, வெற்றியழகன், பரந்தாமன், எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், மண்டல தலைவர் நேதாஜி, கணேசன், இலக்கிய அணி செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க பாரபட்சம் காட்டாதே, ஒன்றிய அரசே தமிழ்நாட்டை புறக்கணிக்காதே! தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே? வெள்ள நிவாரண நிதி, மெட்ரோ ரெயில் நிதி ஒதுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
சைதாப்பேட்டை சின்னமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமை தாங்கினார். இதில் தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., துணை மேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள், மயிலை த.வேலு, எழிலரசன், காரப்பாக்கம் கணபதி மற்றும் பூச்சி முருகன், அன்பகம் கலை, காசிமுத்து மாணிக்கம், தனசேகரன், கண்ணன், தி.நகர் பி.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தலைமை தீர்மான குழு செயலாளர் மீ.அ. வைத்தியலிங்கம், மாவட்ட ஒன்றிய குழு தலைவர் படப்பை மனோகரன், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ஏ.கே.கருணாகரன், செம்பாக்கம் இரா.சுரேஷ், இ.எஸ்.பெர்னாட், கவுன்சிலர்கள் பெருங்களத்தூர் சேகர், சிட்லபாக்கம் சுரேஷ், ஜோதி குமார், புகழேந்தி, நரேஷ் கண்ணா, பெரியநாயகம், நிர்வாகிகள் ரஞ்சன், இரா.செல்வகுமார், எஸ்.ஜி.கருணாகரன், வேல்மணி பி.ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆவடி மாநகராட்சி அருகில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., ஆவடி மேயர் உதயகுமார், மாநகர செயலாளர் சண் பிரகாஷ் உள்பட ஏராள மானவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- தி.மு.க. நினைத்திருந்தால் அப்போதே கச்சத்தீவை மீட்டெடுத்திருக்கலாம்.
- தி.மு.க. அரசு அனைத்து தர மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது.
மதுரை:
மதுரை பழங்காநத்தத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ரேஷன் கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். மத்திய அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டம் செய்கிறது. இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக தான் நடத்தப்படுகிறது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு வந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கப்படவில்லை. அப்போது தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தார்களா?
தி.மு.க. நினைத்திருந்தால் அப்போதே கச்சத்தீவை மீட்டெடுத்திருக்கலாம். காவிரியை மீட்டெடுத்திருக்கலாம். மக்கள் பிரச்சனையை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் செங்கோலை பற்றி பேசுகிறார் மதுரை எம்.பி. வெங்கடேசன். எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ திட்டத்தைப் பற்றி ஏன் பேசவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக தி.மு.க. நடத்தும் நாடகம் வெகுநாள் எடுபடாது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
மதுரையில் 2 வாரத்தில் மட்டும் 16 கொலைகள் நடந்துள்ளது. தி.மு.க. அரசு அனைத்து தர மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்றனர்.
- கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி:
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
சென்னை கிண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
சேலம் மாவட்டம் கோட்டை மைதானம் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் ஒருங்கிணைந்த திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
- மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேயர் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஐ.லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக பங்கேற்றுள்ளனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை :
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,465-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,720-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- ஆர்ப்பாட்டத்தில் சென்னைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் இணைந்து பங்கேற்கிறார்கள்.
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்ட தி.மு.க.விலும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த இப்போதே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு உள்ளன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் கலெக்டர் அலுவலகம், சைதாப்பேட்டை சின்னமலை, தாம்பரம், ஆவடி ஆகிய 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், சென்னை வடக்கு மாவட்டம், சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் இணைந்து பங்கேற்கிறார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, வெற்றியழகன், பரந்தாமன், எபினேசர், ஐட்ரீமூஸ் மூர்த்தி, கே.பி.சங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள், கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இதே போல் காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் சண்முகம் சாலையில் கழக பொருளாளர் கழக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறி உள்ளார்.
இதில் தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட கழக துணை செயலாளர்கள் பல்லாவரம், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், திரளாக பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார்.
சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னை தெற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம், சென்னை தென் மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மாவட்டக் கழக செயலாளர்கள் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், தி.நகர் ஜெ.கருணாநிதி, கணபதி, எழிலன், பிரபாகரராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் ஆவடி மாநகராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதேபோல் திருவள்ளூரில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று முழக்கமிட உள்ளனர்.
- பிரதமர் மோடி அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.
- கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாய் 12,210 கோடி.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 59,000 கோடியும், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூபாய் 15,000 கோடியும் வழங்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாய் 12,210 கோடி. ஆனால், தமிழகத்திற்கு சல்லிக்காசு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.
பா.ஜ.க. கட்சியின் சார்பாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பதவியேற்ற பிறகு அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக அவர் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஒன்றிய அரசின் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
- சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. மத்திய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை கடந்த 2 தினங்களாக குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்தது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ6,430-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 89 ரூபாய்க்கும் கிலோவுக்கு ரூ.3000 குறைந்து பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3160 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்