என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vaccination Camp"
- செங்கம் வட்டத்தில் தடுப்பூசி முகாம்
- மாடுகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை
புதுப்பாளையம்:
செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் பசு மாடுகள் அதிக அளவில் கிராமப்புறங்களில் விவசாயிகள் வளர்த்து பராமரித்தும் துணை தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவி மாடுகள் உயிரிழப்பதால் மாடுகள் வளர்ப்போர் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் செங்கம் வட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தற்போது ஒவ்வொரு கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கரிய மங்கலம் அண்டப்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் கோமாரிநோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் செங்கம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சிவரஞ்சனி தலைமையில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- கால்நடை காணை நோய் தடுப்பூசி முகாம் 6-ந் தேதி முதல் 21 நாட்கள் நடக்கிறது.
- தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்காணை மற்றும் வாய்காணை நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்நோயினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவைமாடுகளின் சினைப்பிடிப்பு தடை படுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.
எனவே, கால்நடைகளை தாக்கும் கால்காணை மற்றும் வாய்காணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்காணை மற்றும் வாய்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 4-வது சுற்று வருகிற 6-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 21 நாள்களும், விடுபட்ட கால்நடைகளுக்கு டிசம்பர் 10-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதுகுளத்தூர் அருகே வெறிேநாய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் கீரனூர் கால்நடை மருந்தகம் சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. நல்லூர் ஊராட்சி தலைவர் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் நல்லூர், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வெறிநாய் கடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கீரனூர் கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வெறிநாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
- ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. மேயர் இந்திராணி தலைமை வகித்தார். ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் மண்டலம் 3-க்கு உட்பட்ட56, 57, 58 ஆகிய வார்டுகளில் திரியும் 111 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தெருக்களில் பொது மக்களை அச்சு றுத்தும் வகையிலும், போக்குவரத்து இடையூ றாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.
பல்வேறு இடங்களில் பொதுமக்களை நாய்கள் கடித்தாக புகார்கள் வந்தன. இதையடுத்து ''நாய்கடி ரேபிஸ்" தடுப்பு நடவடிக்கையாக மாநக ராட்சி சார்பில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 18.9.2023 முதல் 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்த அந்த பகுதிகளில் வரும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
இம்முகாமில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் வினோத் குமார், உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேசு வரன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா, கால்நடை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- இம்முகாமில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட னர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் ரோட்டரி சங்கம் ராமநாதபுரம் சுகாதாரப்பி–ரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் ரோட்டரி சங்க தலைவர் கபிர் தலைமையில் நடை–பெற்றது.
செயலாளர் எபன் வர வேற்றார். தட்டம்மையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடுப்பூசியால் போடு வதால்ஏற்படும் நன்மைகள் பற்றிய கருத்துக்களை கீழக் கரை தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் பேசினார். திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசிக் தீன் தலைமை உரையாற்றி னார்.
கருத்தரங்கின் நோக் கத்தை குழந்தை நல மருத்து வர் அய்சத்துல் நசிதா எடுத்துரைத்தனர். இம்முகா மில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தலைமையாசிரி யர் மேபல் ஜஸ்டஸ், மாவட்ட தாய் சேய் நல அலு வலர் ரஹ்மத் நிஷா, மருத்துவர் ராம்பாபு, ரோட் டரி சங்கம் முன்னாள் தலை வர்கள் சுப்பிரமணியன், டாக்டர் சுந்தரம், மற்றும் நூகு, சிவகார்த்திக், சபிக்,
பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் செவிலியர்கள், மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இம்மு காமில் ஏராளமான மாண வர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட னர்.
- விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.
- கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார்.
உடுமலை:
உடுமலை கோட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.
அதில் பெரும் சவாலாக இருப்பது தொற்று நோய்களாகும்.அவற்றில் இலம்பி தோல் அலற்சி நோய் என்று அழைக்கக்கூடிய பெரியம்மை நோயை உடுமலை கோட்டத்தில் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவுரையின்படி பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 8- ந் தேதி முதல் தொடங்கி உள்ளது. கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்,
ஒவ்வொரு குக்கிராமங்கள் தோறும் கால்நடை மருத்துவர் குழுவினரால் முகாம் அமைத்து பெரியம்மை நோய் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ளது.கால்நடை வளர்ப்போர் முகாமினை பயன்படுத்தி கால்நடைகளை பெரியம்மை நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
பெரியமை நோய் வைரஸ் கிருமியினால் பரவும் நோயாகும்.இந்த நோய் கொசுக்கள்,உண்ணிகள், ஈக்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு மாட்டிலிருந்து மற்றொரு மாட்டிற்கு பரவக் கூடியதாகும். அதைத் தடுத்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசியே சிறந்த வழியாகும்.
உடுமலை கோட்டத்தில் ஜல்லிபட்டி, மடத்துக்குளம், குடிமங்கலம்,துங்காவி ஆகிய 4 பகுதிகளில் முகாம்கள் நடத்த ஏதுவாக 57 ஆயிரம் டோஸ் மருந்துகள் இறப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
- பழைய நீடாமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
- வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பழைய நீடாமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி ெதாடங்கி வைத்தார்.
முகாமில் 5 வயதிற்கு கீழ் உள்ள விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த தடுப்பூசி பணியை கிராம சுகாதார செவிலியர் மரியம்மாள் மேற்கொண்டார்.
இந்த முகாம் நேற்று தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.
எனவே முகாமை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
- மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- 56 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பூா் :
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும்முழு உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மாவட்டத் தலைநகரங்களில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம் அவிநாசி சாலையில் பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தாய் சேய் நல விடுதியில் தொடங்கியது.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் ஜெகதீஷ்குமாா் மேற்பாா்வையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 56 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் முகாமில் 62 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹஜ் சா்வீஸ் சொசைட்டியின் திருப்பூா் மாவட்ட உறுப்பினா்கள் சபியுல்லா, சையது ஆதில், சைபுதீன், முகமது ஆரிப் உள்ளிடடோா் செய்திருந்தனா்.
- சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர்.
- செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கோளப்பாறை கிராமத்தில் நேற்று தெருவில் சுற்றித் திரிந்த சில நாய்கள் திடீரென பொதுமக்களை கடித்துக் குதற ஆரம்பித்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கோளப்பாறை கிராமத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை ஏற்பாடு செய்தார். அதன்படி கோளப்பாறை கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வெறி நோய் விழிப்புணர்வு மற்றும் செல்லப்பி ராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் தலைமையில் டாக்டர் மகேஸ்ராம், டாக்டர் ஆலமரத்தான் மற்றும் குழுவினர் கிராமத்தில் சுற்றித்திரிந்த மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணிகளுக்கும் தெரு நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி போட்டனர் . அத்துடன் கோளப்பாறை கிராம பொதுமக்களுக்கு வெறிநோய் அறிகுறிகள், தடுப்பூசியின் அவசியம் ,மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட டாக்டர்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறை யினருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நன்றி கூறினார். மேலும் விழுப்புரம் கா ல்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரனின் அறிவுரைப்படி கோள ப்பாறை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை உதவி டாக்டர்கள் தலைமை யில் குழுக்கள் அமைத்து தினசரி தொடர் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
- துணை சுகாதார மையம் மூலம் நடந்தது
- அதிகாரி பார்வையிட்டார்
வாணியம்பாடி:
கிராமங்களில் உள்ள துணை சுகாதார மையம் மூலம் குழந் தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வாணியம்பாடி அடுத்த அம்பலூர் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதே போல் ஆலங்காயம் துணை சுகாதார நிலையத்தின் மூலம் நிம்மியம்பட்டு வெள்ளைகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இப்பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பார்வையிட்டார்.
- கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
- இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடி பேரூராட்சியில் சேர்மன் மாரியப்பன் தலைைமையில் செயல் அலுவலர் சேகர் முன்னிலையில் செல்ல பிராணிகளுக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பேரூராட்சி தலைவர் மாரியப்பன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் நேரு குமார், கால்நடை மருத்துவர் அரவிந்தன், மணி, கால்நடை ஆய்வாளர்கள் இளமதி, கோதை நாயகி கால்நடை பராமரிப்பு உதவியாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- வேலம்பட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- மாா்ச் 1-ந் தேதி முதல் மாா்ச் 21ந் தேதி வரை நடைபெறுகிறது.
திருப்பூர் :
பொங்கலூா் ஒன்றியம் வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி வேலம்பட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் வினீத் பேசியதாவது:-
தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி மாா்ச் 1-ந் தேதி முதல் மாா்ச் 21ந் தேதி வரை நடைபெறுகிறது.கோமாரி நோய் தாக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் இந்த முகாமில் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.அதைத்தொடா்ந்து மேய்க்கால் நில புனரமைப்பு திட்டத்தின் கீழ் தீவன மரம் மற்றும் தீவனப்பயிா் நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் (பொறுப்பு) குமாரரத்தினம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்