என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaccination Camp"

    • விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.
    • கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார்.

    உடுமலை:

    உடுமலை கோட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.

    அதில் பெரும் சவாலாக இருப்பது தொற்று நோய்களாகும்.அவற்றில் இலம்பி தோல் அலற்சி நோய் என்று அழைக்கக்கூடிய பெரியம்மை நோயை உடுமலை கோட்டத்தில் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவுரையின்படி பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 8- ந் தேதி முதல் தொடங்கி உள்ளது. கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்,

    ஒவ்வொரு குக்கிராமங்கள் தோறும் கால்நடை மருத்துவர் குழுவினரால் முகாம் அமைத்து பெரியம்மை நோய் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ளது.கால்நடை வளர்ப்போர் முகாமினை பயன்படுத்தி கால்நடைகளை பெரியம்மை நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    பெரியமை நோய் வைரஸ் கிருமியினால் பரவும் நோயாகும்.இந்த நோய் கொசுக்கள்,உண்ணிகள், ஈக்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு மாட்டிலிருந்து மற்றொரு மாட்டிற்கு பரவக் கூடியதாகும். அதைத் தடுத்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசியே சிறந்த வழியாகும்.

    உடுமலை கோட்டத்தில் ஜல்லிபட்டி, மடத்துக்குளம், குடிமங்கலம்,துங்காவி ஆகிய 4 பகுதிகளில் முகாம்கள் நடத்த ஏதுவாக 57 ஆயிரம் டோஸ் மருந்துகள் இறப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • இம்முகாமில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட னர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் ரோட்டரி சங்கம் ராமநாதபுரம் சுகாதாரப்பி–ரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் ரோட்டரி சங்க தலைவர் கபிர் தலைமையில் நடை–பெற்றது.

    செயலாளர் எபன் வர வேற்றார். தட்டம்மையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடுப்பூசியால் போடு வதால்ஏற்படும் நன்மைகள் பற்றிய கருத்துக்களை கீழக் கரை தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் பேசினார். திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசிக் தீன் தலைமை உரையாற்றி னார்.

    கருத்தரங்கின் நோக் கத்தை குழந்தை நல மருத்து வர் அய்சத்துல் நசிதா எடுத்துரைத்தனர். இம்முகா மில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தலைமையாசிரி யர் மேபல் ஜஸ்டஸ், மாவட்ட தாய் சேய் நல அலு வலர் ரஹ்மத் நிஷா, மருத்துவர் ராம்பாபு, ரோட் டரி சங்கம் முன்னாள் தலை வர்கள் சுப்பிரமணியன், டாக்டர் சுந்தரம், மற்றும் நூகு, சிவகார்த்திக், சபிக்,

    பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் செவிலியர்கள், மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இம்மு காமில் ஏராளமான மாண வர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட னர்.

    • வெறிநாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. மேயர் இந்திராணி தலைமை வகித்தார். ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் மண்டலம் 3-க்கு உட்பட்ட56, 57, 58 ஆகிய வார்டுகளில் திரியும் 111 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தெருக்களில் பொது மக்களை அச்சு றுத்தும் வகையிலும், போக்குவரத்து இடையூ றாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.

    பல்வேறு இடங்களில் பொதுமக்களை நாய்கள் கடித்தாக புகார்கள் வந்தன. இதையடுத்து ''நாய்கடி ரேபிஸ்" தடுப்பு நடவடிக்கையாக மாநக ராட்சி சார்பில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 18.9.2023 முதல் 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்த அந்த பகுதிகளில் வரும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

    இம்முகாமில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் வினோத் குமார், உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேசு வரன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா, கால்நடை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் அருகே வெறிேநாய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் கீரனூர் கால்நடை மருந்தகம் சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. நல்லூர் ஊராட்சி தலைவர் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் நல்லூர், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வெறிநாய் கடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கீரனூர் கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கால்நடை காணை நோய் தடுப்பூசி முகாம் 6-ந் தேதி முதல் 21 நாட்கள் நடக்கிறது.
    • தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கால்காணை மற்றும் வாய்காணை நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்நோயினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவைமாடுகளின் சினைப்பிடிப்பு தடை படுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.

    எனவே, கால்நடைகளை தாக்கும் கால்காணை மற்றும் வாய்காணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்காணை மற்றும் வாய்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 4-வது சுற்று வருகிற 6-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 21 நாள்களும், விடுபட்ட கால்நடைகளுக்கு டிசம்பர் 10-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கம் வட்டத்தில் தடுப்பூசி முகாம்
    • மாடுகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

    புதுப்பாளையம்:

    செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் பசு மாடுகள் அதிக அளவில் கிராமப்புறங்களில் விவசாயிகள் வளர்த்து பராமரித்தும் துணை தொழிலாக செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவி மாடுகள் உயிரிழப்பதால் மாடுகள் வளர்ப்போர் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.

    இந்நிலையில் செங்கம் வட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தற்போது ஒவ்வொரு கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கரிய மங்கலம் அண்டப்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் கோமாரிநோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் செங்கம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சிவரஞ்சனி தலைமையில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கால்நடை மருத்துவமனையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சக்திவேல் பாண்டி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் பரிமள்ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் திருப்பூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் கெளசல்யா, கால்நடை முதுநிலை மேற்பார்வையாளர் ரபீக் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இதே போல பல்லடம்அருகே உள்ள கரடிவாவி அரசு கால்நடை மருத்துவமனையில் வெறிநோய் தின தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர் அர்ஜுனன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

    • சுகாதார பணிகள் துணை இயக்குனர் திடீர் ஆய்வு
    • அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆணைக்கிணங்க, ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இம்முகாமை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.டி.ஆர். செந்தில் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

    உடன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதி மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

    • தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில்1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    ஈரோடு, செப். 17-

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை (ஞாயிற்று க்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்படுகிறது. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவ சமாக போடப்படுகிறது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுப்படுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

    • மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 37-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மையங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 256 பேர் - (ஊரக பகுதிகளில் 107498 மாநகர பகுதிகளில் - 112758) உள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் முடிவுற்றவர்கள் 11 லட்சத்து 63 ஆயிரத்து 107 பேர் (ஊரக பகுதிகளில் 590374 மாநகர பகுதிகளில் -572733) உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது.
    • அனைவருக்கும் இலவசமாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொது மக்களை பாதிக்காமல் தடுக்கும் வகையில் சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமார் 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 2-வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது. குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடை வெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் வருகிற 30-ந் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் முழு மையாக செலுத்தப் பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் தற்போது 12,78,000 பய னாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.
    • பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

    காங்கயம்:

    முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.

    முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு வருகிற 18- ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

    ×