என் மலர்
நீங்கள் தேடியது "Van"
- கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர்.
- லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
வெள்ளகோவில் :
கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். காங்கேயம் அடுத்து கொழிஞ்சி காட்டு வலசு பிரிவு என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரில் திருச்சியில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி வந்த லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனை ஓட்டி வந்த பிரதாப் (வயது 22) மற்றும் வேனில் பயணம் செய்த செரில் (14) ,மேரி (70), ஷருண்(14),மேஜோ (59), கில்சர் (49) ஆகியோர் காயமடைந்தனர்.
உடனே அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வந்த வேன் டிரைவர் மாயமானார்.
- கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.
சேலம்:
சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 45). இவருடைய மனைவி சங்கீதா (40). இந்த தம்பதிக்கு பிரகாஷ் (23) என்ற மகனும், பிரதிஷா(21) என்ற மகளும் உள்ளனர்.
வேன் டிரைவர் சிவகுமார் சன்னியாசி குண்டு அருகில் சொந்தமாக பந்தல் அமைக்கும் கடை வைத்தும், வேன் வைத்தும் டிரைவராக தொழில் செய்து வந்தார். இந்த வேன் வாங்குவதற்கும் பிள்ளை–களை படிக்க வைப்பதற்கும் சில வருடங்களுக்கு முன்பு அவர், வட்டிக்கு பணம் 7 லட்சம் வரை கடன் வாங்கினார். பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர்.
இந்த நிலையில் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் சிவகுமார் கவலை அடைந்து புலம்பிக் கொண்டிருந்தார். கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.
நாளை வீட்டிற்கு வந்து விடுகிறேன் என கூறினார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிவகுமாரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.
'இது குறித்து சங்கீதா கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிவகுமார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிவகுமார் கடனுக்கு பயந்து தலைம–றைவாக உள்ளாரா? அல்லது கந்து வட்டி கும்பல், சிவகுமாரை கடத்தினார்களா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவையில் முகாமிட்டு சிவகுமாரை தேடி வருகின்றனர்.
- கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
- ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.
வெள்ளக்கோவில் :
கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது. வெள்ளக்கோவில் அருகேயுள்ள வெள்ளமடை திருச்சி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.
இதில் ஆம்னி வேனில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற வெள்ளக்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர்கள் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த பிரமிளா (வயது 45), அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் லோகேஸ்வரன் (வயது26) என்பது தெரியவந்தது. மேலும் 4 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கோவில் கொடைவிழாவுக்கு தீர்தம் எடுப்பதற்காக அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 15 பேர் கன்னியாகுமரிக்கு இன்று அதிகாலை வேனில் புறப்பட்டனர்.
- வேன் பாளையை அடுத்த டக்கரம்மாள்புரம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்த போது லேசான புகை மூட்டம் வேனில் இருந்து எழுந்துள்ளது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் இருந்து கோவில் கொடைவிழாவுக்கு தீர்தம் எடுப்பதற்காக அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 15 பேர் கன்னியாகுமரிக்கு இன்று அதிகாலை வேனில் புறப்பட்டனர்.
பற்றி எரிந்த வேன்
வேனை வாசுதேவ நல்லூர் சேனையர் நாட்டாமை தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டிச்சென்றார். வேன் பாளையை அடுத்த டக்கரம்மாள்புரம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்த போது லேசான புகை மூட்டம் வேனில் இருந்து எழுந்துள்ளது.
உடனடியாக சுதா ரித்துக்கொண்ட டிரைவர் கணேசன் வேனை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு அதில் இருந்த பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். அவர்கள் அனைவரும் வேனை விட்டு இறங்கி சற்று தொலைவில் சென்றனர். சிறிது நேரத்திலேயே வேன் தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கியது.
எலும்பு கூடானது
இதனால் அதிர்ச்சி யடைந்த கணேசன் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
ஆனால் அதற்குள் வேன் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
- ஒரு மாணவனுக்கும், ஒரு ஆசிரியருக்கு மட்டும் லேசான காயம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அடுத்து ஆக்கூரில் ஒரு தனியார் பள்ளி செயல் பட்டு வருகிறது.
இந்த பள்ளிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வேன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சின்னங்குடியில் இருந்து மாணவ மாணவிகளை பள்ளிக்கு வேனில் அழைத்து சென்றனர்.
வேன் மயிலாடுதுறை அருகே கிடங்கள் என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு, ஒரு ஆசிரியருக்கு மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளனர்.
அவர்களுக்கு ஆக்கூரில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவிகள் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேனில் சென்ற மற்ற மாணவர்கள் யாரும் காயம் அடைய வில்லை.
இது குறித்து தகவல் அறிந்ததும் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
- ஆட்டோ மீது வேன் மோதி 2 பெண்கள் பலியானார்கள்.
- திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வடிவுக்கரசி(வயது33). சம்பவத்தன்று தோப்பூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கணவன்-மனைவி ஆட்டோவில் சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மகமாயி(63), கனிமொழி(40) ஆகியோரும் சென்றனர்.
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தங்க பாண்டி தோப்பூர் பிரிவு சாலையில் திரும்பாமல் தொடர்ந்து சென்றார். கூத்தியார்குண்டு அருகே சென்றபோது வழிதவறி வந்ததை உணர்ந்த தங்கபாண்டி உடனே ஆட்டோவை நான்கு வழிச்சாலையில் நிறுத்தியதாக தெரிகிறது.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து விருதுநகருக்கு வந்து கொண்டிருந்த மினிவேன் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ முழுவதுமாக சேத மடைந்தது. ஆட்டோவில் இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
உடனே அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வடிவுக்கரசி, மகமாயி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தங்கபாண்டி, கனிமொழி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.
- மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
திருப்பூர் :
திருப்பூர் பல்லடம் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இன்று பகல் 12 மணியளவில் வாகனங்கள் இடைவிடாமல் இயங்கி கொண்டிருந்தன. இந்தநிலையில் திருப்பூரில் உள்ள டையிங் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு வேன் ஒன்று பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் பல்லடம் சாலை தபால் நிலையம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க சரக்கு வேன் டிரைவர் வேனை ஓரமாக திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் ேமாதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உயிர் தப்பினர். டிரைவர் சுதாரித்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனிடையே விபத்து நிகழ்ந்த போது மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது. காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் கார் மற்றும் வேனின் முன்பகுதி லேசான சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் அவசர வேலையாக சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
திருப்பூர் பல்லடம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் வாகனங்கள் மேம்பாலத்தில் இருந்து கீழ் இறங்கும் போது பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. விபத்துகள் நிகழாமல் தடுக்க அங்குள்ள தனியார் ஓட்டல் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார்.
- ஓட்டுனர்கள் காயமின்றி தப்பினர்.
அவினாசி :
கோவையிலிருந்து அவினாசி நோக்கி ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை டிரைவர் குமரேசன் (வயது 35) ஓட்டி வந்தார். அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையம் அருகே வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார். குமரேசன் வேன் தொடர்பாக பைனான்ஸ் தவணை செலுத்த வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிதிநிறுவனத்தை சேர்ந்த முருகேசன் (32) என்பவர் அந்த வேனை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது எதிரே அன்னூரிலிருந்து சேலம் நோக்கி வந்த மற்றொரு வேன் மீது மோதியது.
இதில் இரண்டு வேன்களும் பலத்த சேதம் அடைந்தன. ஓட்டுனர்கள் காயமின்றி தப்பினர். இதனால் ஆட்டையாம்பாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மின் கம்பத்தின் கீழ் பகுதி உடைந்ததால் சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டது.
- 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.
பல்லடம் :
பல்லடம் மங்கலம் ரோடு அரசு கல்லூரி எதிரே உள்ள ரோட்டில் நேற்று சரக்கு வேன் ஒன்று மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பத்தின் கீழ் பகுதி உடைந்ததால் சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் - பக்கத்தினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், அந்த பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி, ஊழியர்கள் மூலம் மின்கம்பத்தை மாற்றி அமைத்து சரி செய்தனர். இதனால் மங்கலம் ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. கோடை வெயிலால் ஏற்கனவே அவதியில் இருந்த மக்கள், மின்தடையால் மேலும் அவதிப்பட்டனர்.
- 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது
கடலூர்:
திருவாரூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர். இந்த வேனை அதே ஊரை சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது 25) ஓட்டி வந்தார். இந்த வேன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு பண்ருட்டி-கும்பகோணம் சாலை அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் வேன் டயர் வெடித்து சிதறியது. இதனால் தாறுமாறாக சிறிது தூரம் ஓடிய வேன் மீண்டும் தடுப்பு கட்டையில் மோதி இதில் வேனில் பயணம் செய்த செவ்வாடை பத்தர்கள் லேசான காயத்து டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனால் பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் இருந்த வேன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி கும்பகோணம் சாலையிலுள்ள சென்டர் மீடியனில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பண்ருட்டி போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்
- எர்ணாகுளத்தில் இருந்து நேற்று ஒரு மினி வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.
மன்னார்குடி:
கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 13 நபர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மினி வேன் மூலமாக புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விக்கிரபாண்டியம் காவல் நிலையம் அருகில் வேன் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் 10அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததுமு விக்கிர பாண்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணம் அடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விக்கிர பாண்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளமடை அருகே வரும்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேனை முந்தி செல்லும் போது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- வேனை ஓட்டிச் சென்ற நவீன் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். வேன் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
வெள்ளகோவில்:
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் பழுதாகி நின்றுள்ளது. அந்த வாகனத்திற்கு டூல்ஸ் எடுத்துக்கொண்டு வெள்ளகோவில் ஓலப்பாளையத்தில் இருந்து நவீன் (வயது 23) என்பவர் வேனில் சென்றார்.
வெள்ளமடை அருகே வரும்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேனை முந்தி செல்லும் போது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனை ஓட்டிச் சென்ற நவீன் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். வேன் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.