என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle"

    • கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகள் மற்றும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான காவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் சாக்கில் மறைத்து வைத்து கடத்தி வந்த சாராய 110 லிட்டர், 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகளையும் வாகனத்தையும்பரிமுதல் செய்து விசாரனை செய்தனர்.

    காரைக்கால் நெடுங்காடு தெருமாங்வி லங்கை சிவன்கோயில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வீரமணி (வயது 26) என்பது தெரியவந்தது.

    அவரை சாராய கடத்தல் வழக்கில் கைது செய்து பொறையார்கிளை சிறையில் அடைத்தனர்.

    • கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி தஞ்சை மாநகரம் முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    இதில் பஸ் நிலையங்கள், ரெயிலடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவீன வசதியுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

    மற்ற இடங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

    இதில் பதிவாகும் காட்சிகளை பார்க்க தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறை மற்றும் போலீசார் கண்காணிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே 2 இடங்களில் பதிவாகும் காட்சிகள் பார்க்கபட்டன.

    தற்போது நடமாடும் வாகனம் மூலமும் காட்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் காட்சிகள் பார்க்கப்பட்டன.

    இந்த வாகனத்தை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் இந்த நடமாடும் வாகனத்தில் தெரிந்ததை பார்வையிட்டனர்.

    இந்நிகழ்வில் பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், மாநகர் நல அலுவலர் (பொ) அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விதி மீறிய 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • மேலும் அவர்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    உசிலம்பட்டி

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.மூர்த்தி தேவர் கட்சியை சேர்ந்த 19 பேர் விதிமுறை மீறி வாகனத்தின் மீது ஏறி உசிலம்பட்டி வழியாக மதுரை சென்றனர்.

    இவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் மேல் இருந்தவர்களை கீழே இறங்கி வாகனத்தில் செல்லுமாறும் வாகனத்தின் மேல் ஏறக்கூடாது எனவும் கூறினர்.

    இதில் வாகனத்தில் வந்தவர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் போலீசார் வாகனத்தில் வந்தவர்களை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவர்கள் மீது தேவர் ஜெயந்தி விழாவிற்கு விதிமுறை மீறி வாகனத்தில் வந்ததாகவும், போலீசாருடன் தகராறு செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.
    • 17 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் பறிமுதல்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் படி, கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) ராஜ்குமார் மேற்பார்வையில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், பார்த்திபன்நாதன், நாடிமுத்து , செந்தில், ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் என்பவரை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து விக்னேஷ் கண்ணனை கைது செய்து 17 பவுன் நகைகளையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவிநாசி பாளையம் சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன.
    • குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சையின் மையப்பகு தியில் காமராஜர் மா ர்க்கெட் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை புதுப்பித்து பல்வேறு வசதிகளுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதனால் இங்கிருந்த கடைகள் தஞ்சை மாதாக்கேட்டை சாலை காவேரி நகருக்கு தற்காலிமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    அங்கு தற்காலிகமாக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வந்தன.இந்த நிலையில்பணிகள் அனைத்தும் முடிவடை ந்ததால் முறைப்படி இன்று காமராஜர் மார்க்கெட் திறக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து காணொளி வழியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார், மண்டல குழு தலைவர் மேத்தா , மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரூ.20 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட்ட காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன. மேலும் மழைநீர் வடிகால் வசதி, வாகனம் நிறுத்துமிடம், திடக்கழிவுகளை கையாளும் வசதி, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி, மின் வசதி, தீயணைப்பு வசதி, குடிநீர் வசதி கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

    • நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள்.
    • இதனையடுத்து கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி சோதனை சாவடியில், வன காப்பா ளர்கள், ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். அவர்கள் அங்குள்ள இயற்கை அழகை பார்த்து ரசிப்பதுடன் அருவிகளிலும் குளித்து மகிழ்வார்கள்.

    சமீப காலமாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்கள் மலை பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்துவதாக புகார் எழுந்தது. மேலும் காலி மது பாட்டில்களை அவர்கள் வீசி எறியும்போது, அதனை எடுத்து செல்லும் குரங்குகள் மீதம் இருக்கும் மதுவையும் பருகி உடல் உபாதைக்கு ஆளாகி வந்தன.

    இதனையடுத்து கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள

    காரவள்ளி சோதனை சாவடியில், வன காப்பா ளர்கள், ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தினர். அப்போது வாகனங்களில் பதுக்கி எடுத்துச் செல்ல முயன்ற மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், மதுவை கீழே ஊற்றி அதனை அழித்தனர்.

    கொல்லிமலைக்கு செல்வோரும், இங்கிருந்து

    அடிவாரப் பகுதிக்கு வருவோரும் விலங்குக ளின் நலன் கருதி மது பாட்டில்களை கொண்டு செல்ல வேண்டாம். தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்த வேண்டாம். சாலையில் காலி பாட்டில்களை உடைத்து சேதப்படுத்த கூடாது. வனத்துறையின் சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
    • வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.

    இதனை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு ரூபாய் 7.05 லட்சம் மதிப்பிலான (நகரும் பொருட்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி) யை வழங்கினார்.

    இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.

    இதன் மூலம் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    • இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், நடைபெற்றது. அப்போது அவர் ேபசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில், தலையில் அடிப்பட்டு அதனால் ஏற்படும் உயிழப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தலைக்கவசத்தின் பயன் குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். மேற்படி விழிப்புணர்வினை அரசு அலுவலகங்களிலிருந்து அரசு அலுவலர்கள் மூலமாக முதற்கட்டமாக ஏற்படுத்த வேண்டும்.

    அதன்படி, வருகிற 5-ந் தேதி அரசு அலுவலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் வருகிற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து, விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

    இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியும் விழிப்புணர்வினை படிப்படியாக பொது மக்களிடமும் கொண்டு சென்று, பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டுவதை ஊக்குவிக்க காவல்துறையினர் மூலமாக அறிவுறுத்த வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரசார வாகனத்தை பரமத்தி வட்டார அட்மா தலைவர் தனராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பரமத்தி வட்டாரத்தில் 24 வருவாய் கிராமங்களில் இந்த பிரசார வாகனங்கள் செல்ல உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரசார வாகனத்தை பரமத்தி வட்டார அட்மா தலைவர் தனராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமத்தி வட்டாரத்தில் 24 வருவாய் கிராமங்களில் இந்த பிரசார வாகனங்கள் செல்ல உள்ளது.

    மக்களிடம் சிறு தானியங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பிரசார வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்நிகழ்வில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • மேலும் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உட்பட 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் மற்றும் சேளூர் பகுதியில் தனியார் வாகனங்கள் வாடகை ஒப்பந்த வாகனமாக இயக்கப்பட்டு வருவதை தடுக்கும் நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் நடத்திய சோதனையில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 3 கார்கள், வாடகைக்கு இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உட்பட 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    மேலும் அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த 2 இருசக்கர வாகன ஓட்டிகள், செல்போன் பேசிக்கொண்டும், சீட் பெல்ட் அணியாமலும் வந்த கார் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வாகன சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். 

    • சாலையின் குறுக்கே கம்புகளை ஊன்றி
    • பேரூராட்சி வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி சாலையானது செரியலூர் இணைப்புச்சாலையாக உள்ளது. இங்கு புதிய சாலை அமைக்க கடந்த ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணிகள் எதுவும் நடைபெறாததால் அப்பகுதியைசேர்ந்த பொது மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தனர்.

    ஆனாலும் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை பர்மா காலனி மக்கள் சாலையின் நடுவில் கற்களை குவித்தும், கம்புகளை ஊன்றியும் அடைப்பு ஏற்படுத்தியதோடு, பேரூராட்சி பணியாளர்களையும், வாகனத்தையும் சிறைப்பிடித்தனர்

    பேரூராட்சி பணியாளர்கள் வாகனத்தில் சென்று அப்பகுதியில் உள்ள குப்பைகளை எடுத்து வெளியில் வர முடியாமல் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    ×