என் மலர்
நீங்கள் தேடியது "Viduthalai chiruthaigal katchi"
- பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைவிட்டனர்.
- மும்மொழிக்கொள்கை என்பதை அரசின் கொள்கையாக, இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிப்பது கூடாது.
- இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இருமொழிக்கொள்கையே போதுமானது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருமொழிக் கொள்கையில் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும்.
ஆகவே, மும்மொழிக்கொள்கை என்பதை அரசின் கொள்கையாக, இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிப்பது கூடாது என்பது தான் நம்முடைய தமிழ்நாட்டு அரசின், தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு ஆகும்.
ஆனால், பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் இந்தியை படித்தால் உடனே வேலைவாய்ப்பு கிடைத்துவிடும், இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.
இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தி பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே மொழி என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குகிற உள்நோக்கத்தோடு பா.ஜ.க.வினர், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் செய்வதை அம்பலப்படுத்துகிறோம். அதை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
- வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கானாத்தூர் பகுதியில் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்தவ பெருவிழா இன்று மாலை நடக்கிறது.
விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்க செல்லும் திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதில் வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், வி.ஜி.சந்தோசம் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
- நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது இயலாது.
- அ.தி.மு.க. கட்சி சின்னத்தினை இழந்து நிற்பதோடு, மட்டுமல்லாமல் அந்த கட்சி 2 பிரிவுகளாக உள்ளது. எனவே வெற்றி பெறுவது கடினம்.
தூத்துக்குடி:
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் நடைபெற்ற குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இது போன்ற தவறுகளை தடுக்க கியூ பிரிவு போல் தனி உளவுப்பிரிவு அமைக்க வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கின்றேன். இரட்டை குவளை முறை அதிகமாக உள்ளது. எனவே அதனை ஒழிக்க சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். அதற்கு கூட்டணி கட்சிகள் வலுவாக பாடுபடுவோம்.
நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது இயலாது. ஏனெனில் அந்த கட்சி சின்னத்தினை இழந்து நிற்பதோடு, மட்டுமல்லாமல் அந்த கட்சி 2 பிரிவுகளாக உள்ளது. எனவே வெற்றி பெறுவது கடினம்.
தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு தாட்கோ லோன்கள் கொடுப்பதற்கு தேசிய வங்கிகள் முன்வராத நிலை தமிழகத்தில் உள்ளது.
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது. மத்திய அரசுதான் அது ராமர் பாலம் இல்லை என்று சொன்னது. இப்போது இப்படி சொல்வது அதிர்ச்சியாக உள்ளது.
சேது சமுத்திர திட்டத்தில் மீனவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.
- சிஎஸ்ஆர் என்கிற பொதுநிதி அந்த பகுதியை சார்ந்த கிராமங்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசியதாவது:
என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணியில் ஈடுபட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் இதனால் இடம் பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எனது தொகுதியில் காட்டு மன்னார்குடி வரையில் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு போதிய இழப்பீடு தருவதற்கு தயாராக இல்லை. என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதுமட்டுமில்லாமல் சிஎஸ்ஆர் என்கிற பொதுநிதி அந்த பகுதியை சார்ந்த கிராமங்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் என்எல்சி நிர்வாகத்தினுடைய சிஎஸ்ஆர் நிதி என்பது வடஇந்திய மாநிலங்களில் குறிப்பாக பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பயன்படுத்தபடுவது நிறுத்தப்படவேண்டும்.
தமிழகத்தை சாராதவர்கள் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலையும் இருக்கிறது. இந்த அவலத்தை போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிஎஸ்ஆர் நிதியை அந்த பகுதியை மேம்படுத்துவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.
- காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
சென்னை :
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, ரவிக்குமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், வி.கோ.ஆதவன், ந.செல்லத்துரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.ஐ. (எம்.எல்.) மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன.
தி.மு.க. ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் (கூட்டணியில்) நாங்கள் (வி.சி.க.) இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை தி.மு.க. ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறோம். தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.
அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வரும் போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போன்று தமிழகத்திலும் தேர்தல் நெருங்க நெருங்க என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. காரணம், அது நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தில் இருந்து தான் முடிவு செய்யப்படும்.
இந்த ஆபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டத் தான் நாங்கள் இங்கு (வள்ளுவர்கோட்டம்) கூடி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அணைக்கட்டு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
- அணைக்கட்டு பகுதியில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இந்த திடீர் மோதல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார். இவருக்கும் அணைக்கட்டு தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ஏரி புதூர் வெங்கடேசன் கெங்கநல்லூர் கவுன்சிலர் மகாலிங்கம் அணைக்கட்டு மத்திய ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த 13-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான வெங்கடேசன், மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் நீர்நிலை ஏரியில் மணல் எடுத்தனர்.
இதை எதிர்த்ததால் கொன்று ஏரியில் புதைப்பதாக மிரட்டல் விடுத்தனர். மேலும் சாதி பெயரை சொல்லி திட்டினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அணைக்கட்டு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் களமிறங்கியுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கெங்கநல்லூர் கிராம பஞ்சாயத்து தலைவர் என்.செந்தில் குமாரை, சாதி பெயரை சொல்லி திட்டிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
எஸ்.சி, எஸ்.டி, சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிய அந்த போஸ்டரில், தி.மு.க.வினர் செந்தில் குமாருக்கு எதிராக பயன்படுத்திய அதே தகாத வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த ஒரு நாள் கழித்து, கலெக்டர் கெங்கநல்லூருக்கு வந்து, கிராமம் மற்றும் ஏரியை ஆய்வு செய்தார். இதையடுத்து 3 பேரும் என்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர் என்றார்.
அணைக்கட்டு பகுதியில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இந்த திடீர் மோதல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செயலாளர்கள் பொறுப்பு வழங்க உள்ள மாவட்டங்களில் முதல்கட்டமாக 17 மாவட்டங்களின் பெயர்களையும் திருமாவளவன் அறிவித்தார்.
- கட்சியின் பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி விரைவில் மறுசீரமைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையொட்டி, கட்சி பொறுப்புகளுக்கு விருப்பமனுக்கள் பெறப்பட்டன.
மாவட்டச்செயலாளர் பொறுப்பில் 25 சதவீதம் இளைஞர்கள், தலா 10 சதவீதம் பெண்கள், பட்டியலினத்தைச் சாராதவர்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி செயலாளர்கள் பொறுப்பு வழங்க உள்ள மாவட்டங்களில் முதல்கட்டமாக 17 மாவட்டங்களின் பெயர்களையும் திருமாவளவன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து மீதமுள்ள மாவட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த கட்சியின் உயர்நிலைகுழு கூட்டம், சென்னை, அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் நேற்று நடந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் புதிய பொறுப்புகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று ஆலோசிக்கப்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது.
- “அம்பேத்கர் சுடர்” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு வழங்கப்படுகிறது.
சென்னை:
விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
அந்த வரிசையில் 2023-ம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி- விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா-வுக்கும், "பெரியார் ஒளி" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் து.ராஜாவுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
2023-ஆண்டுக்கான வி.சி.க.-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் வருமாறு:-
1. அம்பேத்கர் சுடர்-திபங்கர் பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர், சி.பி.ஐ. (எம்.எல்).
2. பெரியார் ஒளி-து.ராஜா, பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
3. காமராசர் கதிர்-மு.அப்பாவு, தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை.
4. அயோத்திதாசர் ஆதவன்-ராஜேந்திரபால் கவுதம், முன்னாள் அமைச்சர், டெல்லி மாநில அரசு.
5. மார்க்ஸ் மாமணி-கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.(எம்)
6. காயிதேமில்லத் பிறை-முனைவர் மோகன் கோபால், முன்னாள் துணைவேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர்.
7. செம்மொழி ஞாயிறு-தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர்.
விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
- கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க.வின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் வி.சி.க. சார்பில் பிரசாரத்தை மேற்கொண்டோம். பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை தூக்கிச் சுமந்து வரும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க.வுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.
- பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.
சென்னை:
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வீரவணக்கப் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் நாளை நடைபெறுகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று பேசுகிறார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.
பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.
ஈழத்தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டமாகட்டும், பிரபாகரன் தலைமையிலான ஆயுதவழி அறப்போராட்டமாகட்டும் எல்லாமே மக்களுக்கான விடுதலைப் போராட்டமே!
ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை தீவிரவாதமாக பார்த்து தடை செய்தது. தடைகளை மீறி போராட்டங்கள் தொடரத்தான் செய்கிறது.
2010-ம் ஆண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசும் போது,
"கடைசி விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் வரை, ஈழவிடுதலைக்காக போராடுவோம்-ஈழ விடுதலைப் போரை முன்னெடுப்போம்" என பிரகடனப்படுத்தினார்.
எத்தனையோ அவதூறுகள், எத்தனையோ சாதிவெறித் தாக்குதல்கள்
அத்தனையையும் முறியடித்து மக்களுக்காக நின்று களமாடி வருகிறோம்.
இனப்படு கொலைகளுக்கு எதிரான களத்தில், எந்த சோர்வும் இல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளை வழிநடத்தி வரும். தமிழ்த்தேசியப் பெருந்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், நாளை மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் நடைபெறுகிறது.
இனப்படுகொலைகளுக்கு எதிராக களமாட உறுதி ஏற்போம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.
- விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் அம்பேத்கர் சுடர் என்னும் விருது 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளுடன் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் சான்றோருக்கு பாராட்டுப் பட்டயம், நினைவு கேடயம் ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.
2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி என்னும் விருது வழங்கப்படுகிறது. இவ்விழா ஆண்டு தோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.
விழாவிற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ.எம்.எல்-விடுதலை பொதுச்செயலாளர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும் வழங்கப்படுகிறது.
மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு மார்க்ஸ் மாமணி விருது, டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமிற்கு அயோத்தி தாசன் விருது, காயிதே மில்லத் பிறை விருது பெங்களூரு சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.
விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உஞ்சை அரசன், வன்னிய அரசு, பாவரசு, பாலசிங்கம், தயாளன், பாவலன், வீர.ராஜேந்திரன், சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, வி.கோ.ஆதவன், அம்பேத்வளவன் விசங்கர், கவுன்சிலர்கள் யாழினி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.