என் மலர்
நீங்கள் தேடியது "Village council meeting"
- கலெக்டர் உத்தரவு
- உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
திருப்பத்தூர்:
நவம்பர் மாதம் 1-ந்தேதி உள் ளாட்சிகள் தினம் கொண் டாட தெரிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி அன்று கிராம சபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனவே திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிக ளிலும் வருகிற 1-ந் தேதி பகல் 11 மணிக்கு தவறாமல் கிராம சபை கூட்டப்பட வேண்டும். கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப் பாக பணிபுரிந்த ஊ ஊழியர் களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக் கும் மகளிர் சுய உதவிக் குழுக் களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழக் கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், வடகி ழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடி யிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக் கப்பட வேண்டும்.
கிராமசபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையா ளர்களாகவும், கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அள வில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.
- இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
திருப்பூர்,அக்.30-
மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியபடி பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் செயலியில் (TNSED Parent App) வருகை பதிவு, பள்ளிகளில் திட்டமிடுதல் சார்ந்த விவரங்களை பதிவேற்றினர்.
இதன்மூலமே பள்ளி வளர்ச்சிக்கு விவாதிக்கப்பட்ட பொருள், தீர்மானங்கள் பெற்றோர்களுக்கு பகிரப்பட்டன. மேலும் பெற்றோர்களிடம் காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரங்களை பகிர்ந்து கற்றல் அடைவு சார்ந்த கலந்தாலோசனை நடைபெற்றது.
கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்த ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு உதவ வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து, அதற்கான தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே பிளஸ் 2 முடித்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களில் உயர்கல்வி முகாமில் பங்கேற்ற 47 பேர் உயர்கல்வி சேர முன்வந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா, என்று பள்ளி கல்வித்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவ்வகையில் திருப்பூரில் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் 150 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்வியை தொடரவில்லை.
இவர்கள் உயர் கல்வியை தொடர உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களில், 47 பேர் உயர்கல்வி சேர்வதற்கான வாய்ப்புகளை கேட்டறிந்தனர். இதில் 8 பேர் ஐ.டி.ஐ., தொழிற்கல்வியில் சேரவும், 3 பேர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கை நீட்டிப்பு செய்தால், விண்ணப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.பலர் நீட், வேளாண் படிப்பு கலந்தாய்வு முடிவுக்கு காத்திருப்பதாகவும், நிச்சயம் உயர்கல்வி தொடர்வதாக உறுதியளித்தனர். இவ்வாறு மொத்தம் 47 பேர் உயர்கல்வி தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தேர்ச்சியடையாத மாணவர்கள் பலர் பியூட்டிஷியன், டெய்லரிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். 2 கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டறிந்தனர்.கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி முகாமில் பங்கேற்க தவறியவர்கள் வெள்ளிக்கிழமை நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுள்ளனர்.
- மதுரையில் கிராம- நகர சபை கூட்டம் நடந்தது.
- இதில் கலெக்டர், மேயர் பங்கேற்றனர்.
மதுரை
தமிழகத்தில் உள்ளாட்சி தினம் இன்று கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் இன்று கிராம சபை மற்றும் நகர சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன.
இங்கு குடிநீர் வினி யோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டி டங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எடுத்துக் கூறி நிவாரணம் பெற இயலும். இதில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
கிராம- நகர சபை கூட்டங்களில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மட்டுமின்றி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளலூர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அனீஸ் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாநகர உள்ளாட்சி களிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆரப்பாளையம் மந்தை (வார்டு-57), சுந்தரராஜபுரம் ஜே.ஆர்.ரோடு (வார்டு-75), திடீர் நகர் சமுதாயக்கூடம் (வார்டு-76) ஆகிய பகுதி களில் நடத்தப்பட்ட நகர சபை கூட்டங்களில் மேயர் இந்திராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இங்கு பொதுமக்களின் கோரிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
தமிழகத்தில் குடியரசு தினம் (ஜனவரி 26-ம் தேதி), உழைப்பாளர் தினம் (மே 1-ம் தேதி), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15-ம் தேதி), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2-ம் தேதி) ஆகிய நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
- நகராட்சிகளில் பகுதி சபா கூட்டம் முதன்முதலாக நடந்தது
- உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்தது
வேலூர்:
கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இன்று நவம்பர் மாதம் 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் 247 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. வேலூர் அருகே உள்ள வெங்கடாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.
நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர் குப்பம் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. வாலாஜா ஒன்றியம் முகுந்தராயபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு ,ஆரணி ஆகிய நகராட்சிகளில் பகுதி சபா கூட்டங்கள் முதன் முதலாக இன்று நடந்தன.
திருவண்ணாமலை நகராட்சி 1-வது வார்டு பச்சையம்மன் கோவில் பகுதியில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு மனு வாங்கினார்.
இதேபோல வேலூர் மாநகராட்சி மற்றும் குடியாத்தம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நகராட்சிகளிலும் தற்போது பகுதி சபாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் இன்று முதன் முதலாக பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றன.
- கல்குவாரி மூட வலியுறுத்தல்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் அடுத்த பெருமுகை கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.இதனை அப்பகுதி மக்கள் புறக்கணித்தனர்.
இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டும் கூட்டம் நடந்த இடத்தில் இருந்தனர்.
கடந்த முறை கிராம சபை கூட்டம் நடந்தபோது பெருமுகை கல் குவாரியை மூட வேண்டும், மக்கள் வசிக்கும் பகுதியில் தொழிற்சாலை அமைத்து கனரக வாகனங்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றபட்டன.
ஆனால் இதுவரை கல்குவாரி மூடப்படவில்லை. வாகனங்கள் அந்த பகுதி வழியாக செல்வது நிறுத்தப்படவில்லை.
ஊராட்சியின் வரவு செலவு கணக்கை கேட்டதற்க்கு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை என்பதால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ராம சபை கூட்டத்தில் தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார் கலந்து கொண்டார்.
- கிராம சபை கூட்டத்தில் தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார் கலந்து கொண்டார்.
தாராபுரம்:
தாராபுரம் வட்டம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு சம்பத் நகர் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார் கலந்து கொண்டார் .ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாச்சிமுத்து மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கே. கே. ஜீவானந்தம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் மற்றும் நீதித்துறை கிராம அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை மகளிர் சுய உதவி குழுக்கள், அங்கன்வாடி உறுப்பினர்கள் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வேளாண்துறை மற்றும் மருத்துவத்துறை, மின்சார வாரியம், கால்நடை மருத்துவர்கள் ஆகிய துறைகளில் இருந்து பலர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நவம்பர் 1ந் தேதியை தமிழகத்தின் உள்ளாட்சி தினமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஊராட்சி மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ,இணைய வழி வீட்டு வரி, சொத்துவரி, பண்ணை சார்ந்த தொழில்கள், மக்கள் நல ஆய்வு மற்றும் இதர பொருள்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை கவுண்டச்சிபுதூர் ஊராட்சி செயலர் பெரியசாமி செய்திருந்தார்.
- மாவட்ட முன்னோடி வாங்கி மேலாளா் அலெக்ஸ்சாண்டா், புஞ்சைத்தலையூா் ஊராட்சித் தலைவா் சிவராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- கிராம ஊராட்சிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மூலனூர்:
மூலனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புஞ்சைத்தலையூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பாா்வையாளராக கலந்து கொண்டாா். இந்த கூட்டத்தில் அனைத்து கிராம மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கிராம ஊராட்சிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் 13 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவி, தோட்டக்கலைத் துறை மூலம் வெங்காய பரப்பு விரிவாக்கத்துக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மதுமிதா, மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் மதுமிதா, மாவட்ட முன்னோடி வாங்கி மேலாளா் அலெக்ஸ்சாண்டா், புஞ்சைத்தலையூா் ஊராட்சித் தலைவா் சிவராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- கீழக்கரை நகராட்சியில் கிராம சபை கூட்டம் கண்துடைப்பாக நடந்தது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கீழக்கரை
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் நகர் மன்ற தலைவர் தலைமையில் துணைத்தலைவர் ஹமீது சுல்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு வார்டுக்கும் குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதால் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 3,17,18 ஆகிய வார்டுகளில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்கப்பட்டது.
பொதுமக்கள் அளித்த மனுக்களை 3-வது வார்டு கவுன்சிலரும், நகர்மன்ற துணைத் தலைவருமான ஹமீது சுல்தான் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இருப்பினும் நகராட்சி தரப்பில் கூட்டம் குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் பெரும்பாலான வார்டுகளில் மக்கள் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் தலைவர் பாசித் இலியாஸ் கூறுகையில், இந்த கிராம சபை கூட்டத்தில் சில வார்டுகளில் மட்டுமே மக்களின் குறைகள் கேட்கப்பட்டது. பெரும்பாலான வார்டுகளில் கூட்டம் கண்துடைப்பாக நடத்தப்பட்டு உடனடியாக முடிக்கப்பட்டது, இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. முதலமைச்சர் அறிவித்த இந்த கூட்டத்தை கீழக்கரையில் முறையாக நடத்தப்படவில்லை. பல கவுன்சிலர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. நகராட்சி ஆணையளர், துறை அதிகாரிகள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது என்றார்.
- ராஜபாளையம் தொகுதியில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
- பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு செட்டியார்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு பிள்ளைமார் சமூக மண்டபத்திலும், சேத்தூர் பேரூராட்சி கோட்டைவிநாயகர் கோவில் அருகிலுள்ள மண்டபத்திலும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மக்களின் குறைகளை கண்டறிய முதல்வர் சென்னையில் பகுதி சபை கூட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
இன்று கிராமங்களில் நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நகர் பகுதிகளில் நடைபெறும் இந்த கூட்டம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.
புத்தூர் ஊராட்சியிலும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு எம்.எல்.ஏ. பதிலளிக்கையில், பி.டி.ஓ. மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சந்திரகலா, வெங்கிடகோபு, பேரூர் செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி துணை தலைவர் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், கிளார்க் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கெஜல்நாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம் நடந்தது
- தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
திருப்பத்தூர்:
கந்திலி ஒன்றியம் கெஜல் நாயக்கன்பட்டி ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை விரைந்து மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, துரை கலந்து கொண்டு பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள் இறுதியில் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
- தூய்மை காவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள சு. பள்ளிப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சைனாம்பாள் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் சிந்து காந்தி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவதை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்வது.
மேலும் ஊராட்சியில் சாலை வசதி தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மண்டல வட்டாட்சியர் உட்பட பல கலந்துகொண்டு தூய்மை காவலர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கி பேசினார்கள். இறுதியில் ஊராட்சி செயலாளர் துரைமுருகன் நன்றி கூறினார்.
- ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.
- பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றுவோம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் பிச்சை மூப்பன்வலசை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.
இதில் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஏர்வாடியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், ஏர்வாடி பகுதியில் சிறந்த சேவை செய்த மகளிர் சுயஉதவிக்குழுவினரை பாராட்டுவது, பேரிடர் காலத்தில் விழிப்பு ணர்வுடன் செயல்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சி செயலாளர ஜெயராம கிருஷ்ணன் நன்றி கூறினர். ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் கூறுகையில், ஏர்வாடி ஊராட்சியில் 15 கிராமங்கள் உள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணி செய்வதில் மிகுந்த சிரமத்துடன் செய்து வருகிறோம்.
துப்புரவு பணிக்கு டிராக்டர் வாங்க அனுமதி அளிக்க வேண்டும். ஏர்வாடியை பேரூராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். பள்ளி அருகில் அமைந்துள்ள மதுக்கடையையும், மனநல காப்பகம் அருகில் அமைந்த மதுக்கடையையும் மூடிவிட்டு நகருக்கு வெளிப்புறத்தில் அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.