என் மலர்
நீங்கள் தேடியது "viral"
- அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
- அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.
- 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
- தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.
சொந்த வீடு வாங்குவது பலரின் கனவாக இருக்கும். ஆனால் அந்த கனவுக்காக ஒருவர் எந்த எல்லையையும் கடக்கலாம் என்பதற்கு உதாரணமாக சீன பெண் ஒருவர் திகழ்ந்து வருகிறார்.
சீனாவில் யாங் என்ற 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். அதிகரித்து வரும் வாடகை செலவுகளையும் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மாதம் ரூ.34,570 சம்பாதிக்கும் யாங் வாடகையாக ரூ.545 மட்டுமே செலுத்துகிறார். குளிப்பது, சமைப்பது, துணிகளை துவைப்பது, உறங்குவது என அனைத்து வேலைகளையும் அந்த சிறிய இடத்திலேயே அவர் செய்து கொள்கிறார்.
பணிநேரங்களில் மற்றவர்கள் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தனது உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றி விடுகிறார்.

ஆரம்பத்தில், யாங் மாதத்திற்கு ரூ. 2,290 வாடகை செலுத்த முன்வந்தார். ஆனால் அவரது முதலாளி அதற்கு மறுத்துவிட்டார். தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.
கடையில் தங்குவதற்கு அலுவலக இடம் வழங்கப்பட்டாலும், கதவு இல்லாததால் யாங் சங்கடமாக உணர்ந்தார். எனவே தற்போது ஓய்வறையில் வசிக்கும் யாங், கதவில் துணியை தொங்கவிட்டு, தனது வீடாக அதை பாவிக்கிறார்.
மேலும் இரவில் மடிப்பு படுக்கையை உபயோகிக்கிறார். தனது ரூ.34,570 மாத சம்பளத்தில் யாங் தனது செலவுகளை வெறும் ரூ. 4,500 ஆகக் குறைத்து கடும் சிக்கனத்துடன் வாழ்ந்து வருகிறார்.
- மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் பிரபலமானவை.
- இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டாஸ் ஆகியோர் உருவாக்கினார்.
எக்ஸ், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரண்டிங்கில் இருப்பதை காணலாம்.
கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
1985 ஆம் ஆண்டு இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா, தயாரிப்பாளர் தோஷியோ சுசுகி ஆகியோரால் ஜிப்லி ஸ்டூடியோ நிறுவப்பட்டது.
ஸ்பிரிட்டட் அவே (SPIRITED AWAY), மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் ஜிப்லி ஸ்டுடியோவால் உருவாக்கி வெளியிடப்பட்டன.
இந்த படங்களில் ஜிப்லி ஸ்டூடியோவுக்கென தனி பாணி அனிமேஷன் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜப்பான் அனிமே ரசிகர்களுக்கு பரீட்சயமான பாணி இது.

இயக்குநர் ஹயாவோ மியாசாகி
இந்நிலையில் இந்த பாணி தற்போது உலகளவில் டிரண்ட் ஆக தொடங்கியுள்ளது. பிரபலங்கள், அவர்களின் முகிக்யமான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஜிப்லி பாணி அனிமேஷனாக மாற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பிரபலங்களே தங்கள் அனிமேஷன் புகைப்படங்களை பகிர்ந்து டிரண்ட்டில் இணைந்து வருகின்றனர்.
- முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக சென்றார்.
- பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 6 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து பயணமானார்.
தற்போது லண்டனில் உள்ள மம்தா பானர்ஜி காலையில் தனது பாதுகாலவர்களுடன் ஜாகிங் மற்றும் பேக் வாக் செய்து உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது. இந்த வீடியோக்களை பகிர்ந்த திரிணாமுல் காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம், 'நடைப்பயிற்சி அல்ல, வெறும் வார்ம்-அப் என்று கேப்ஷன் இட்டுள்ளது.
மேலும் அவர் பின்னோக்கி நடக்கும் பேக் வாக் எனப்படும் பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே லண்டன் இந்தியா ஹவுசில் நடந்த தேநீர் விருந்திலும் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
- இக்கோழி சீனாவின் பாரம்பரிய இசை கேட்டு வளர்ந்தது என்றும் நீருக்கு பதிலாக பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
- அந்த கோழி சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷாங்காய் உணவகம் ஒன்றில் சமைக்கப்பட்ட பாதி கோழிக்கறியை ரூ.5,500 க்கு விற்பனை செய்து வருகிறது. அதற்கு அந்த உணவகம் அதிவிநோதமான காரணம் ஒன்றை வைத்துள்ளது.
ஷாங்காய் நகரிலுள்ள அந்த உணவகத்தில் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் சமைத்த அரை கோழிக் கறியை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதற்கான ரசீதில் அதன் விலை 480 யுவான் (இந்திய ரூபாய் மதிப்பில் 5,500) என இருந்துள்ளது. ஏன் அவ்வளவு விலை என்றும் அந்தக் கோழி இசை கேட்டு வளர்ந்ததா? தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்து வளர்த்தீர்களா? என்றும் தொழிலதிபர் உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ஆமாம் என்று பதிலளித்த ஊழியர், இக்கோழி சீனாவின் பாரம்பரிய இசை கேட்டு வளர்ந்தது என்றும் நீருக்கு பதிலாக பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த கோழி சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
உணவகத்தின் இந்த பதிலை தொழிலதிபர் தனது சமூக ஊடகத்தில் பதிவிடவே அது வைரலாகி வருகிறது.

உண்மையில் சன்ஃபிளவர் சிக்கன் வகை கோழிகள் அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு பதிலாக சூரியகாந்தி தண்டின் சாறு மற்றும் இதழ்களை உணவாக கொடுத்து வளர்க்கப்டுகின்றன. இந்த வகை கோழிகள் பாரம்பரிய இசைக்கு மத்தியில் வளர்க்கப்படுவதாக பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் நீருக்கு பதில் பால் கொடுத்து வளர்க்கப்படுவது என்பது உண்மை அல்ல. எம்பரர் சிக்கன் என்றும் அழைக்கப்படும் இவ்வகை கோழிகள் அதன் தனித்துவமான சுவை காரணமாக ஓட்டல்கள், உணவகங்களில் பரவலாக சமைக்கப்டுகின்றன. சன்ஃபிளவர் சிக்கன் கோழிகள் ஒரு கிலோ 200 யுவான் (ரூ. 2,300), முழு கோழி 1000 யுவான் (ரூ. 11,500) வரை விற்கப்படுகிறது.
- ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை
- கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.
அமெரிக்காவில் 57 வயது பெண் ஒருவர் தனது நாயை விமானத்தில் ஏற்றிச் செல்ல அனுமதிக்காததால், அதை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தி இன்டிபென்டன்ட் செய்தியின்படி, இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது. அங்கு துப்புரவு ஊழியர்கள் பணியின்போது கழிப்பறையில் ஒரு இறந்த நாயினைக் கண்டனர்.
விசாரணையில், அலிசன் அகதா லாரன்ஸ் என்ற அந்த 57 வயது பெண் தனது வளர்ப்பு நாயுடன் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, அவர் தனது நாயை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.
சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் கைது வாரண்டைப் பிறப்பித்தனர். சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 18 அன்று, விலங்குகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் லாரன்ஸ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் 5,000 டாலர் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார். சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கண்டனங்களை குவித்து வருகிறது.
- இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
- அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக அரசு வெற்றி பெற்றது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி பாஜக சார்பில் டெல்லியில் ரம்ஜான் மாத இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பல பாஜக தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுக்கு ரேகா குப்தா பேட்டி அளித்தார். அப்போது, இஸ்லாமியர் பண்டிகையான ரம்ஜான் (RAMZAN) என்பதில் ராம் (RAM) என்ற இந்து பெயரும், இந்துக்கள் பண்டிகையான தீபாவளி(DIWALI) என்பதில் அலி (ALI இஸ்லாமிய பெயரும் இருப்பதாக ரேகா குப்தா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே இப்தார் நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரேகா குப்தா, "இப்தார் நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளுடனும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
நமது கலாச்சாரம், பரஸ்பர மரியாதை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாகும். இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
- நாய் சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது
- தீயணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அண்ணா சத்யா தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதற்கிடையே அந்த நாய் நேற்று இரவு தண்ணீர் குடிப்பதற்காக அவரது வீட்டு தோட்டத்தில் இருந்த சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது.
பின்னர் நாயின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கோபாலகிருஷ்ணன் இது குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீய ணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர். நாயை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.
- லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது.
- நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நேட்டோ குழுவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில் 2-வது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த படத்தில் பச்சை நிற ராணுவ உடையில் ஜெலன்ஸ்கி தனியாகவும், அதே நேரம் முகத்தில் கடுமையாக எதையோ யோசிப்பது போன்றும் காட்சிகள் இருந்தன.
இதனை தொடர்ந்து நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் அழைப்பு இல்லாமல் கூட உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு வரும் போது இதுபோன்று நடக்கும் என கிண்டல் செய்துள்ளார். இதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சந்தர்ப்ப சூழல் காரணமாகவே அந்த தருணத்தில் ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- 60 வயதான ஏரண்ணா அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.
- ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார்.
பெங்களூரு:
சமீபகாலமாக வயதான தொழிலதிபர்கள், பிரபலங்கள் சிலர் இளம் வயதுடைய பெண்களை திருமணம் செய்யும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது.
அந்த வகையில் கர்நாடகத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் 30 வயது பெண்ணை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகாவில் உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏரண்ணா. 60 வயதான இவர் அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.
இந்நிலையில் ஏரண்ணாவின் மகனும், மகளும் அவரை கவனிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-வது திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி ஏரண்ணா, தனக்கான வரனை தேடினார். அப்போது மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த அனுஸ்ரீ (30) என்ற பெண்ணை அவருக்கு பிடித்து போனது. அனுஸ்ரீ தனது கணவரை பிரிந்த நிலையில் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதையறிந்த ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார். அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பே கவுடனஹள்ளி பகுதியில் உள்ள கோவிலில் வைத்து ஏரண்ணா-அனுஸ்ரீ திருமணம் எளிமையாக நடந்தது. இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர், வயதை காரணம் காட்டி இந்த திருமணத்தை தவிர்த்திருக்கலாம் எனவும், சிலர் ஏரண்ணா தனது வயதிற்கேற்ப வேறு பெண்ணை மணம் முடித்திருக்கலாம் எனவும் கூறி உள்ளனர்.
இதுபோன்ற பல கருத்துக்களால் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
- கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.
மலையாள சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்லஸி இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
'தி கோட்ஸ் லைஃப்'என இப்படத்திற்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ப்ரித்திவிராஜ் 'நஜீப்' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.
சுனில் கே. எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் ப்ரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகியுள்ளது.
- தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
- இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.
அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.
அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்வை விவாகரத்து செய்தார்.அதன்பின்னர் சமந்தா கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து குத்தாட்டம் டான்ஸ் ஆடினார்.அதன்பின் 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.