என் மலர்
நீங்கள் தேடியது "wall"
- 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
- புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உடுமலை :
உடுமலை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். கட்டட வசதி இல்லாத நிலையில் கொழுமம் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வந்தது.
இந்நிலையில் புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ. 5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு கலைக்கல்லூரி எதிரில் இடம் தேர்வு செய்யப்பட்டு வகுப்பறைகள், ஆய்வகம் ,தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டது. ஆனால் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் விஷமிகள் சிலர் மது அருந்தி பாட்டில்களை வீசி செல்கின்றனர். பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகி வருகிறது. எனவே மாணவர்களின் நலன் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்பவும் பாதுகாவலரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார்.
அவினாசி :
ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை சுப்பிரமணியம் (வயது 49) ஓட்டி சென்றார்.ரவிச்சந்திரன்(55) நடத்துனராக இருந்தார். பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில் பஸ் நேற்று இரவு 9.45 மணி அளவில் அவினாசியை அடுத்து வெள்ளியம் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார். எனவே அவர்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பஸ்சை திருப்பியுள்ளார். எதிர்பாராதவிதமாக பஸ் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. இதனால் வீட்டின் சுவர் இடிந்தது. வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதில் பஸ்டிரைவர், ஒட்டுனர் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (40) ஆகிய மூவருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவினாசி போலீசார் சம்பவ இடம் வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பள்ளிக்கூட சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டிருந்தது.
- தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன்அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரையாண்டு விடுமுறை காரணமாக அப்பள்ளியில் மைதா னத்தில் மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது பந்து பள்ளிக்கூட கட்டிடம் அருகில் விழுந்தது. பந்தை மாணவர்கள் எடுக்க சென்ற போது பள்ளிக்கூடத்தின் சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டு இருந்தது.
இது குறித்து மாணவர்கள் உடனடியாக தங்களது பெற்றோர்களிடம் கூறியு ள்ளனர்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர் தீயணைப்பு துறையி னருக்கு தக வல் தெரிவிக்க ப்பட்டது.
உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாரூர் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.
இரவு நேரம் என்பதால் ஒற்றை டார்ச் லைட் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணைய தளங்க ளில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பண்ருட்டி அருகே மதில் சுவரில் மோதி முதியவர் பலியானார்.
- தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:
பண்ருட்டி தாலுகா காடாம்புலியூர் பி.ஆண்டிகுப்பத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 57). இவர் நேற்றிரவு 10 மணிக்கு மாம்பட்டு வினித் கார்டன் எதிரே மெயின் ரோட்டில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி வினித் கார்டன் எதிரே உள்ள பள்ளத்தில் விழுந்து, மதில் சுவரில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது பற்றி தகவலறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
- சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்கப்படும்.
- கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதும், நாகூர் கீழப் பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கைகள்.
சட்டமன்றத்தில் இது குறித்து நான் பலமுறை பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன். முதலமைச்சரிடமும் கோரிக்கை கடிதம் அளித்தேன்.
நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 05-04-2023 அன்று நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் மற்றும் நாகூர் பட்டினச்சேரி - கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.
இதற்காக நாகை தொகுதி மக்களின் சார்பில் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
- ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது.
- இதனால் குடியிருப்பு பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஊட்டி,
குன்னூர் மேட்டுப்பா ளையம் சாலையில் பர்லியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். பர்லியார் குடியிருப்பு பகுதி பர்லியார் ஊராட்சியின் 9-வது வார்டிற்கு உட்பட்டது ஆகும். இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதில் மழை காலங்களில் வீடுகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதன்படி ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது. தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்ததால் பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பின்புறம் கற்கள் மற்றும் மண் விழுந்து உள்ளது. எதிர்வ ரும் நாட்களில் குன்னூர் பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்தால் மழைத் தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. இதனால் வீடுகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தடுப்பு சுவர் கட்டி 10 நாட்கள் ஆன நிலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தரமற்ற கட்டுமான பணியே இடிந்து விழ காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் தடுப்புச்சுவர் விரைவில் அமைத்துத்தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்
- சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.
- மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையம்:
கடையம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட மைலப்பபுரம் கிராமத்தில் பேராமணி குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில் குளக்கரையின் கீழ்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த சுற்றுச்சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.
தற்பொழுது கீழ்ப்பகுதியில் மொத்தமாக சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால் மைலப்பபுரம், மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பதாலும் ஊருக்குள் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் அருகில் இருந்து அதிகளவில் மாணவ- மாணவிகள் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், தொடர்ந்து குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையும் வலுவிழந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பேராமணி குளத்தில் இடிந்து விழுந்துள்ள சுற்று சுவரை மீண்டும் புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது
- கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவ ரத்திற்கு பயன்படுத்தப்படும் சாலைகளில் அமைந்துள்ள தரைமட்ட கிணறுகளால் பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் கிணறு தெரியாமல் விபத்து நடக்கிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே இதை தடுக்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான நிலங்கள், வீட்டுமனைகள் ஆகியவற்றில் போக்குவரத்துக்கு இடையூராக சாலைகளுக்கு ஓரமாக உள்ள அனைத்து தரைமட்ட கிணறுகளுக்கு தரைமட்டத்திலிருந்து குறைந்தபட்சம் சுமார் 3 அடி உயரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், இந்த தடுப்புச்சுவரை ஒரு மாத காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பள்ளி வளாகத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
- நுழைவுப் பகுதியில் கேட்டுடன் பொருத்தப்பட்ட சுற்றுசுவர் சேதம் அடைந்து உள்ளதை குழந்தைகள் அறிய மாட்டார்கள்.
உடுமலை:
உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னக் குமாரபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சின்ன குமாரபாளையம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அப்போது அடித்தளம் வலுவற்றதாக அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் நுழைவு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் விரிசல் விட்டு சேதமடைந்து உள்ளது.
இதனால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொடக்கப்பள்ளி என்பதால் சுட்டித்தனம் நிறைந்த குழந்தைகளே இங்கு அதிக அளவில் வருகை தருவார்கள். நுழைவுப் பகுதியில் கேட்டுடன் பொருத்தப்பட்ட சுற்றுசுவர் சேதம் அடைந்து உள்ளதை குழந்தைகள் அறிய மாட்டார்கள்.
அந்த சுவர் கேட்டை இயக்கும் போது அசைந்து கொடுத்து மரத்துடன் சாய்ந்து நின்று கொள்கிறது. எப்போது கீழே விழும் என்று தெரியவில்லை. எனவே சின்ன குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சேதம் அடைந்த சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.21 ஆயிரம் மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது.
- மூடை மூடையா கட்டி திருடி சென்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ேபாலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொருசுபட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம்(வயது41) என்பவர் மேற்பார்வை யாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் அங்கிருந்த பின்புற சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்தனர்.
அங்கு கல்லாபெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணமில்லை. இதனால் அதிருப்தியடைந்த திருடர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்களை மூடை மூடையா கட்டி திருடி சென்றனர். மறுநாள் மதியம் மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை திறந்து பார்த்தபோது சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாணிக்கம் ஒத்தகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் திருடிய நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன மதுபாட்டில்களின் ரூ.21 ஆயிரம் ஆகும்.
- பெரியசாமி அவரது மனைவி மற்றும் மகனுடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார்.
- சுவர் மழைச்சாரலில் ஊறி கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கடலூர்:
திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட தர்மகுடிக்காடு கிராமத்து சாலையோரம் சில கூரை வீடுகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இதில் பெரியசாமி (வயது 75) என்பவர் அவரது மனைவி மற்றும் மகனுடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் கூரை வீட்டின் 2 பக்க மதில் சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தது. இதில் யாரும் காயம் இன்றி உயிர் தப்பினர். கடந்த 2 தினங்களாக திட்டக்குடி பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்வதால், சுவர் மழைச்சாரலில் ஊறி கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறைனர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
கடலூர்:
சென்னையை சேர்ந்தவர் கலியபெருமாள் இவரது மனைவி மீனா (65) இவர் பண்ருட்டி ஒன்றியம் குடுமியான்குப்பத்திலுள்ள இவரது தங்கை கமலா வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10.00 மணி அளவில் மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.இதனால் சம்பவ இடத்திலே மீனா பரிதாபமாக இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.