என் மலர்
நீங்கள் தேடியது "water supply"
- திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாநகரில் 2-வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் நாளை 30-ந்தேதி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் மின்சார வாரியத்தின் மூலம் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1, 13, 14, 3வது மண்டலத்துக்கு உள்பட்ட 44, 45, 50, 51, மற்றும் 4வது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், வரும் திங்கள்கிழமைமுதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையால் ஓரளவு மழை பொழிவு பெறும் பகுதியாக உள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
உடுமலை:
தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையானது தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் நீர் மட்டம் 2 அடி உயர்ந்து 83 அடியாக உள்ளது.
மழை மறைவு பகுதியாக உள்ள திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை 630 மி.மீ முதல் 680 மி.மீட்டராகும். மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகள் சாரல் மழை மூலம் சற்று அதிக மழை பொழிவு பெற்று வரும் பகுதியாகவும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையால் ஓரளவு மழை பொழிவு பெறும் பகுதியாக உள்ளது.
இதன் காரணமாக ஒரே சீரான மழை பொழிவு இரு பருவ மழையின் போதும் கிடைக்காத ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக மழை பெறும் பகுதிகளில் இருந்து வரும் ஆறுகளை நம்பி அமைந்துள்ள அணைகளில் இருந்து கால்வாய் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பாசனம் பெற்று வருகிறது. இதற்கு பிஏபி, எல்பிபி பாசனங்கள் எடுத்துக் காட்டாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது. அணையின் மொத்த நீர் தேங்கும் உயரம் 90 அடியாகவும், கொள்ளளவு 4 டிஎம்சி.யாகவும் உள்ளது. மேலும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 83அடியை தாண்டியுள்ளது. அணைக்கு 2078 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஒரேநாளில் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இதனால் பாசனப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
- திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அருகே திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு சர்க்கார் பதியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக 43 கிலோமீட்டர் பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. இதன் மூலம் அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு மேல் பகுதியில் திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும் .பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை யின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றிலும் ஓடும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். தற்போது திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- வீட்டு குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு வரி வசூல் முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில்வரி, குத்தகை இனம் நிலுவையை வசூலிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சொத்துவரி, குடிநீர் கட்டணம் நீண்டகாலமாக செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி வரி பாக்கி வைத்திருந்ததால் 4-வது மண்டலத்தில் 8 குடிநீர் இணைப்புகளையும், 1-வது மண்டலத்தில் 7 குடிநீர் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஒரேநாளில் ரூ.51 லட்சத்து 11 ஆயிரத்து 977 வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு வரி வசூல் முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார்.
- வரி இனங்களை செலுத்தாதோருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
- குடிநீா் வரி செலுத்தாத 12 கட்டிடங்களின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது
ஊட்டி,
கூடலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போா் வரி இனங்களை சரியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் கூறி வந்தது. வரி இனங்களை செலுத்தாதோருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ராஜகோபாலபுரம் மற்றும் ஓ.வி.எச்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத 12 கட்டிடங்களின் குடிநீா் இணைப்புகளை ஆணையா் உத்தரவின் பேரில் நகராட்சி குடிநீா் விநியோகப் பணியாளா்கள் துண்டித்தனா்.
- யானை மடுவு உள்ளிட்ட 2 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது.
- இரவு நேரங்களில் தண்ணீருக்காக ஊருக்குள் வன விலங்குகள் புகுவது தற்போது குறைந்து உள்ளது.
வடவள்ளி,
கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவார பகுதியில் மருதமலை , ஓணாப்பாளையம், அட்டுக்கல், வெள்ளருக்கம்பாளையம், நரசீபுரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் போதிய மழை இன்றி வனப்பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.
வனப்பகுதியில் யானை, மயில், புள்ளி மான்கள், சிறுத்தை, காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்டவை மேற்கு மலைத்தொடர்ச்சி வனப்பகுதியில் வசித்து வருகின்றன. கோடை காலத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க ஆங்காங்கே வனப்பகுதியில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டி அவற்றில் சோலார் மூலம் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளன.
அதிலும் யானைகள் ஒன்று கூடும் இடமான கோவை வனச்சரகத்தில் யானை மடுவு உள்ளிட்ட 2 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது. அங்கு வனவிலங்குகள் தாகம் தீர்க்கும் வகையில் எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது தொட்டிகளை பார்வையிட்டு நீர் நிரப்ப ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உப்புக்கட்டிகள் அருகில் வைக்கப்படட்டு உள்ளது.கோவை வனத்துறை கோடைக்காலத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் இரவு நேரங்களில் தண்ணீருக்காக ஊருக்குள் வன விலங்குகள் புகுவது தற்போது குறைந்து உள்ளது.
- கலெக்டர் நடவடிக்கை
- குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த சுண்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு கடந்த 15 ஆண்டு காலமாக தண்ணீர் ஏற்றாத நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கலெக்டர் தண்ணீர் குழாய்களை இணைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டது. பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.
அதன் பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி பாறையூர் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8.57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 94 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.
மேலும் பச்சூர் ஊராட்சி சுண்டம்பட்டியில் ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் 94 குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 860 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் அவதி
- தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி அருகே ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும் பங்களுக்கு 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீருக்காக பயன் படும் கிணறுகளை சுத்தம் செய்யப்படாமலும், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதும் பாசி மற்றும் தூசு துகள்கள் படிந்து சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் வினியோகம் செய்யும்போது தண்ணீர் கருப்பாகவும், அதிகளவில் பாசி, தூசு துகள்கள் கலந்து வரு வதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
மேலும் இந்த குடிநீர் குடிக்கும்போது உடல் உபா தைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்ற னர்.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து கிணறு மற்றும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உடன்குடி பஜார் பகுதியில் அனைத்து இடங்களிலும் மத்திய அரசின் கேபிள் லைன் பதிக்கும் பணிக்காக ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் தோண்டப்பட்டு வருகிறது.
- இதனால் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
உடன்குடி:
உடன்குடி பஜார் பகுதியில் அனைத்து இடங்களிலும் கிராமத்திற்காக வேண்டி மத்திய அரசின் கேபிள் லைன் பதிக்கும் பணிக்காக ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் தோண்டப்பட்டு வருகிறது. இவ்வாறு தோண்டுகின்ற போது அனைத்து இடங்களிலும் 18 வார்டுகளுக்கு செல்லக்கூடிய மெயின் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் குடிதண்ணீர் வீணாகிறது. இதனால் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 நாட்களாக நகரம் முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடப்பது மற்றும் தண்ணீர் தேங்கி வீணாக செல்வதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். அனைத்து வார்டுகளில் உள்ள பொதுமக்கள் வெயில் காலத்தில் தண்ணீர் வினியோகம் இல்லாத காரணத்தினால் அவதிப்படுவதாக புகார் கூறுகிறார்கள்.
- பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
- கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக்கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு வருகிறது. ஆங்காங்கே மண் திட்டுக்களாக தோற்றம் அளித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து உள்ளனர்.
- பொதுப்பணித்துறை சுகாதார கோட்டம் எச்சரிக்கை
- மீண்டும் இணைப்பு கொடுக்கும் போது மறு இணைப்புக்கான கட்டண மாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப் பணித்துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுப்பணித்துறை சார்பில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு குடிநீர் அளவு குறித்து கணக்கீட்டாளர் கணக் கெடுத்து கட்டண ரசீது கொடுக்கப்படுகிறது. அவ்வாறு ரசீது கொடுக்கப் பட்டு 30 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணத்தை செலுத்த தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் மீண்டும் இணைப்பு கொடுக்கும் போது மறு இணைப்புக்கான கட்டண மாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது.
- நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. நொய்யல் ஆற்றுக்கு ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம், சபரி ஓடை, மந்திரி வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக நீர் வந்து சேர்கிறது. இதில் ஜம்மனை ஓடை மங்கலம் ரோட்டிலும், சபரி ஓடை காங்கயம் ரோட்டிலும், சங்கிலிப்பள்ளம் தாராபுரம் ரோடு மற்றும் காங்கயம் ரோட்டிலும் கடந்து சென்று நொய்யல் ஆற்றில் சேர்கிறது.
தற்போது தென் மேற்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் இந்த ஓடைகள் வாயிலாக நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக தற்போது மண் மேடுகளும், முட்செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கும் ஓடைகளை தூர்வாரி நீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சங்கிலிப் பள்ளம் ஓடையில் நிரம்பியுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் எந்திர வாகனம் மூலம் தூர்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.