என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wife killed"
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் ( வயது 30). பேண்ட் வாத்திய இசை கலைஞர். இவருடைய மனைவி சின்னபாப்பா (28). தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
முருகன் தினமும் குடித்துவிட்டு வந்து சின்ன பாப்பாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்றிரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்து, முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னபாப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிட்டோமே என்று அதிர்ச்சியடைந்த முருகன் தானும் வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பிணத்தின் மீது அவரது உடலும் கிடந்தது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன், மனைவி பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனாதையான 2 குழந்தைகளும் தாய், தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மனைவியை வெட்டி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை:
பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் வசித்தவர் முனியப்பன் (வயது 28) இவரது மனைவி நிவேதா(19), இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மேட்டுக்கடையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து 2 பேருமே வேலைக்கு போய் வந்தனர்.
இளம்பெண் நிவேதாவுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் செல்போனில் அவர்களுடன் பேசி வந்தார். இதைகண்ட கணவர் முனியப்பன் ஆத்திரம் அடைந்தார். “நமக்கு திருமணமாகிவிட்டது. மற்ற ஆண்களுடன் பேசுவதை பழகுவதை விட்டுவிடு” என்று சத்தமும் போட்டார். ஆனால் நிவேதா இதை கேட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நிவேதா ஒன்றாக இருந்ததை நேரில்கண்டு முனியப்பன் கடும் ஆத்திரம் அடைந்தார். இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது.
இந்த வீட்டில் இருந்தால் மனைவியின் கள்ளக் காதலர்கள் மீண்டும் வரக் கூடும் என எண்ணிய முனியப்பன் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு குடியிருக்க திட்டமிட்டார்.
இதனால் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீடுபார்க்க சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த முனியப்பன் மனைவியை அடித்து உதைத்தார். இருவரும் மாறி... மாறி... தாக்கினர். பிறகு முனியப்பன் ஆத்திரத்தில் கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்து துண்டித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
மனைவியின் பிணத்தை மறைக்க மோட்டார் சைக்கிளில் துண்டித்த தலை மற்றும் உடலை எடுத்து சென்ற போது பொதுமக்களிடம் சிக்கினார். பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் அவரை கைது செய்தார்.
போலீசாரிடம் கொலையாளி முனியப்பன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதில் “நானும் நிவேதாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம். சந்தோஷமாகத்தான் வாழ்ந்தோம். அப்போதுதான் என் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் இருந்ததை கண்டேன். மேலும் பல ஆண்களுடன் போனில் பேசியதையும் கண்டேன்.
இதனால் அவளை பல தடவை கண்டித்தேன். ஆனால் அவள் என்பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டாள். அவளை நான் மிரட்டியும் பார்த்தேன். அப்படியும் கேட்டகவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். தப்ப முயன்ற போது சிக்கி கொண்டேன்” என்று கூறினார்.
கன்னிவாடி:
கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி (45). இவர்களுக்கு கார்த்திக் ராஜா என்ற மகன் உள்ளார். இவர் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள சுக்காம் பட்டியில் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார். கருப்பாயிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருப்பாயி தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சுக்காம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அதன் பின் கணவர் பல முறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் வரவில்லை.
நேற்று இரவு மனைவியை பார்ப்பதற்காக முருகன் சுக்காம்பட்டிக்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இன்று காலை கருப்பாயிகுளத்து வேலைக்கு செல்வதற்காக அங்கிருந்த பெண்களுடன் சென்றார்.
அப்போது மறைந்திருந்த முருகன் மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றார். உயிருக்கு பயந்து அவர் ஓட முயன்றும் முருகன் விடாமல் விரட்டிச் சென்று வெட்டி சாய்த்தார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்பாயி உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் ரெட்டியார் சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கருப்பாயி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் வடக்குஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 40). இவரது மனைவி மகாலட்சுமி (36) . இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். பாலசந்தர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த போது, பாலசந்தர் அவரது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார். ஊருக்கு திரும்பியதும் அந்த பணத்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அவர் 2 மகன்களின் கல்விக்கு செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்தர், இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகாலட்சுமியின் நடத்தையில் பாலசந்தர் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் கொலை செய்தாரா? என்றும் பாலசந்தரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிவனேசன் (வயது 45). இவருக்கும் விருதுநகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் உமா தேவி (வயது 40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கூலித் தொழிலாளியான சிவனேசன் அடிக்கடி வேலை விஷயமாக பல ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். நேற்று உமா தேவி வீட்டின் மாடி பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது மனைவிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் அதனால் இறந்து விட்டதாக சிவனேசன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் போலீசார் விசாரணையில் சிவனேசன் முன்ணுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார். எனவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தனது மனைவியை அடித்துக் கொன்றதை சிவனேசன் ஒப்புக் கொண்டார்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று கோபமடைந்த சிவனேசன் உமா தேவியை அடித்து தாக்கியுள்ளார். மேலும் படியில் இருந்து விழுந்த அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சிவனேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே திருப்பயத்தாங்குடி பி.எஸ்.ஆர். காலனி தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி அனுராதா(30). இவர்களுக்கு விக்னேஷ் (14), ஆகாஷ்(7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அனுராதா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனுராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் அனுராதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பரசுராமனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தனது மனைவி அனுராதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை தூக்கில் தொங்க விட்டதும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடியதை பரசுராமன் ஒப்புக்கொண்டார்.
பரசுராமனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை மனைவி அனுராதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பரசுராமன், அனுராதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார். மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பரசுராமனை போலீசார் கைது செய்தனர்.
பெண் சாவில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொன்னகாட்டுபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 35). இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
லதா விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். வேலுச்சாமி விராலிமலை பஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதியில் வெற்றிலை வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் லதாவின் நடத்தையில் வேலுச்சாமி சந்தேகப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் பலமுறை அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.
இன்று காலை லதா, விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். கடையில் வியாபாரத்தை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வேலுச்சாமி திடீரென லதாவிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லதாவின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கடைக்குள்ளேயே துடிதுடித்து இறந்தார்.
இதைப்பார்த்த பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மனைவியை கொலை செய்த வேலுச்சாமி நேராக விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த லதாவின் தாய் கதறி அழுதார். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விராலிமலை பஸ் நிலையத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள பெரிய கள்ளியூர் காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 47). விவசாயி டிப்பர் லாரி வைத்தும் ஓட்டி வருகிறார்.
இவரது மனைவி விஜயசாந்தி (24). கடந்த 1 ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஒரு கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் தர்மன் சந்தேகப்பட்டார். மனைவி விஜயசாந்தி அடிக்கடி தனது செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதனால் சந்தேகத்தை உறுதிபடுத்திய கணவர் மனைவியை கண்டித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர்களிடையே தகராறு இருந்து வந்தது. அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு வெளியே சென்று விட்டு இன்று அதிகாலை தர்மன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி விஜயசாந்தி செல்போனில் பேசி கொண்டிருந்தாராம்.
இதனால் கடும் கோபம் அடைந்த தர்மன் மனைவியை திட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.
ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தர்மன் வீட்டில் உள்ள தோட்டத்தில் களை எடுக்கும் சிறிய மண்வெட்டியால் தலை மற்றும் கழுத்தில் ஓங்கி வெட்டினார்.
இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே விஜயசாந்தி பரிதாபமாக இறந்தார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் போலீசார் கொலையாளி தர்மனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
விஜயசாந்தி எதற்காக கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையம் கண்டியூர் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு 6 வயதில் பிரதீக் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியா கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள தாய் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். கார்த்திக் அன்னை இந்திரா நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கார்த்திக் தனது மகனை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கடந்த 16-ந் தேதி மகனை அழைத்துக்கொண்டு பிரியாவிடம் விடுவதற்காக வந்தார். அப்போது திடீரென சிறுவன் வாந்தி எடுத்தான். இதனால் மனவேதனை அடைந்த பிரியா எதற்காக அவன் வாந்தி எடுக்கிறான் என்று கார்த்திக்கிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பிரியாவின் வயிறு, நெஞ்சிசு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த பிரியாவின் தாய் ஜெயந்தி, தந்தை மணி ஆகியோர் சேர்ந்து அரிவாள் மனையால் கார்த்திக்கின் தலையில் வெட்டினர். இதில் கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பிரியா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 12.15 மணியளவில் பிரியா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கார்த்திக் மீது கொலை வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கார்த்திக் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி பெரியார்நகர் சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 60). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரது மனைவி வனஜா(50). இவர்களுக்கு வெங்கடேஸ்வரி, ஹேமலதா, தீபாவதி(23) என 3 மகள்கள் உள்ளனர். இதில் வெங்கடேஸ்வரி, ஹேமலதா ஆகிய 2 பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
தீபாவதி மாலத்தீவில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் புதுவை திரும்பினார். தற்போது புதுவை மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தனர்.
அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் பாலகிருஷ்ணன் சண்டை போடுவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இதனை வழக்கமான சண்டை தான் என அருகில் இருந்தவர்கள் கருதினர். நேற்று காலை வெகுநேரமாகியும் பாலகிருஷ்ணன் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன், வீட்டுக்குள் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தொங்கியதை பார்த்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கதவின் பூட்டை உடைந்து உள்ளே சென்று பார்த்ததில் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பூட்டப்பட்டு கிடந்த மற்றொரு அறையின் கதவின் அடிப்பகுதி வழியாக ரத்தம் வெளியே வந்து உறைந்து கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த கதவை திறந்து பார்த்தனர். அங்கு வனஜாவும், தீபாவதியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கட்டையால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் அந்த வீட்டின் முன் கூடினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு காணப்பட்டது.
போலீஸ் விசாரணையில் மகள் தீபாவதிக்கு அடுத்த மாதம் நடைபெற இருந்த திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதும், இதனால் ஆத்திரமடைந்து மனைவி, மகளை கொலை செய்துவிட்டு பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
மனைவி, மகளை கொலை செய்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசி (வயது 64). இவரது மனைவி எலிசி (62). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமகளுக்கு வளைகாப்பு முடித்து தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று இரவு இன்னாசி சாப்பிட வந்துள்ளார். அப்போது எலிசி அவருக்கு தண்ணீர் மற்றும் சாப்பாடு வைத்துள்ளார். காய்கறி, குழம்பு இல்லாததால் இன்னாசி எலிசியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இன்னாசி அருகில் இருந்த பருப்பு கடையும் மத்தால் எலிசியின் தலையில் கடுமையாக தாக்கினார். வலியால் அலறி துடித்த எலிசி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து எலிசியின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்னாசியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாப்பாடு பிரச்சினையில் கணவன் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்