என் மலர்
நீங்கள் தேடியது "woman suicide"
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
- பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் தினேஷ் (வயது 32).
இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இவரை அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.
பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.
தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் உடனே விடுவிக்க வேண்டும் எனக் கூறி அவரது தங்கைகள் மேனகா (31), கீர்த்திகா (29) போலீசாரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர்களை போலீசார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மேனகா , கீர்த்திகா ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் துணை போலீஸ் பிரண்டு சோமசுந்தரம் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தொடர்ந்து இன்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- பாலா,பேச்சியம்மாள் சங்கர்நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளனர்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேச்சியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் பாலா. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
மாரடைப்பால் இறப்பு
பாலா லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்கள் சங்கர்நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளனர்.
அதன்பின்னர் ஒரு வாரத்திலேயே மாரடைப்பு காரணமாக பாலா இறந்துவிட்டார். இதனால் பேச்சியம்மாள் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சமீப காலமாக கணவரை நினைத்து கொண்டே அழுது கொண்டு இருந்த அவர், வீட்டில் இருந்த ஒரு பெரிய பொம்மைக்கு தனது கணவரின் ஆடை களை எடுத்து உடுத்தி வைத்துள்ளார்.
தற்கொலை
மேலும் அவரது ஆடைகளை தினமும் தூங்கும்போது அருகிலேயே வைத்துக்கொண்டு இருந்துள்ளார். ஆனாலும் கணவரின் பிரிவு அவரை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேச்சியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விசாரணை
அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
- களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 45)
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி குமார் இறந்துவிட்டார். இதனால் தமிழ்செல்வி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்தவர் குமார். இவருக்கு தமிழ்செல்வி(வயது 45) என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
தற்கொலை
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி குமார் இறந்துவிட்டார். இதனால் தமிழ்செல்வி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். கணவரை நினைத்து மிகவும் துக்கம் அடைந்த அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ்செல்வி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் தீயை அணைத்துவிட்டு அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- போலீசார் விசாரணையில் பெர்த்தோஸ் குடும்ப பிரச்சினை காரணமா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- செஞ்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்எடையாளம் கிராம பஞ்சாயத்துக்குட்ட கடக்கால்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா. அவரது மனைவி பெர்த்தோஸ் (வயது 22). இவர் இன்று காலை தனது கைக்குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பெர்த்தோஸ் தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்தார். சிறிது நேரத்தில் 2 பேரின் உடல்கள் கிணற்றில் மிதந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெர்த்தோஸ் குடும்ப பிரச்சினை காரணமா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- மகளின் பிறந்த நாளை கொண்டாட முருகன் வராததால் மனைவி கீதா மனவேதனை அடைந்தார்.
- கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
போரூர்:
ராமாபுரம், பூத்தப்பேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் டிரைவர். இவரது மனைவி கீதா (வயது35). கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் சொந்த ஊரான வந்தவாசிக்கு சென்று விட்டார்.
இதன் காரணமாக நேற்று முன்தினம் மகளின் பிறந்தநாளை கொண்டாடவில்லை. இந்த நிலையில் மகளின் பிறந்த நாளை கொண்டாட முருகன் வராததால் மனைவி கீதா மனவேதனை அடைந்தார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கீதா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்காதலி தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என சலீமுக்கு பயம் ஏற்பட்டது.
- சலீமும் தற்கொலை செய்ய முடிவு செய்து ஆசிட்டை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
குனியமுத்தூர்:
கோவை போத்தனூர் அருகே உள்ள சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் காமிலா பானு (வயது 34). வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
வெள்ளலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சலீம்(49). பெயிண்டரான இவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காமிலா பானுவுக்கு சலீமுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்ததாகவும், இதனை சலீம் தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் காமிலா பானு, சலீமுடன் பேசுவதை தவிர்த்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சலீம், பெண்ணுடன் ஜாலியாக இருந்த புகைப்படங்களை காட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். உடனடியாக அவர் கரும்பு கடைக்கு சென்று, பெண்ணின் அக்காவை சந்தித்து, தங்களுக்குள்ளான உறவு குறித்து கூறியதுடன், வீடியோக்களையும் காண்பித்தார். மேலும் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என கேட்டு விட்டு அங்கிருந்து சென்றார்.
இதை கேட்டு அதிர்ச்சியான அவர் தனது தங்கையை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கேட்டார். அவர் பேசி கொண்டிருந்த போது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
தனது கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் என நினைத்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியான அவரது உறவினர்கள் சம்பவம் குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது காமிலா பானுவின் உறவினர்கள், சலீம் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக பணம் கேட்டு மிரட்டியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
எனவே அவரது சாவுக்கு காரணமான சலீம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட காமிலா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போத்தனூர் போலீசார் கள்ளக்காதலன் சலீம் மீது தற்கொலைக்கு துண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கள்ளக்காதலி தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என சலீமுக்கு பயம் ஏற்பட்டது. இதனால் சலீமும் தற்கொலை செய்ய முடிவு செய்து ஆசிட்டை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சலீம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்தும் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடன் பிரச்சினையால் ஜெயந்தி தற்கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
- தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 31). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயித்து இருந்தனர். அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. இதையடுத்து திருமண அழைப்பிதழ்களை ஜெயந்தியின் பெற்றோர் உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் ஜெயந்தியின் பெற்றோர் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றனர். வீட்டில் ஜெயந்தி மட்டும் தனியாக இருந்தார். பெற்றோர் திரும்பி வந்தபோது வீட்டில் மகள் ஜெயந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடன் பிரச்சினையால் ஜெயந்தி தற்கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செல்போன் உபயோகி ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என கண்டித்துள்ளார்.
- மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம்:
பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்குமார் மனைவி நந்தினி (வயது27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெகதீஸ்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் செல்போனில் அதிக நேரம் பேசுவதாக நந்தினியின் தாயாரிடம் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார். எனவே செல்போன் உபயோகி ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என நந்தினியிடம் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி அருகே மதுராபுரியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (61). இவர் ஷோரூமில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் கஜேந்திரன் ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 வருடமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றித்திரிந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான ரவிச்சந்திரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரிடையே துயரத்தை ஏற்படுத்தியது.
- திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவகர் நகரை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம். இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது 2-வது மகள் வினோதினி (வயது 26). பட்டதாரியான இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார்.
சில மாதங்களாக இவருக்கு மூட்டுவலி இருந்ததாக கூறப்படுகிறது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாக வில்லை. இந்த நிலையில் வினோதினிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது.
இதற்காக மாப்பிள்ளை பார்த்து நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. ஆனால் வினோதினி தனக்கு திருமணம் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. குடும்பத்தினர் அவரை சமரசம் செய்து வந்தனர்.
இதற்கிடையில் நாளை (25-ந் தேதி) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக வினோதினி விரக்தியுடன் இருந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பெற்றோர் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெளியே சென்று விட்டனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோதினி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரிடையே துயரத்தை ஏற்படுத்தியது.
- கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவர் மணிகண்டன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
- மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி காவ்யா (வயது21). இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமானது. கணவன்-மனைவி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவர் மணிகண்டன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
இதையடுத்து காவ்யாபட்டிபுலம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். கணவர் இறந்த துக்கத்தில் விரக்தியில் இருந்து வந்த காவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் இறந்த துக்கம் தாளாத விஜயலட்சுமி, கணவருக்கு ஈம சடங்குகள் முடிந்தவுடன் தனது 2 மகள்களுடன் அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
- ரெயில் நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் பயணிகள் தாய், மகள்களை காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் சூரிய நாராயணா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55). மகள்கள் சந்திரகலா (33). எம்.பி.ஏ. பட்டதாரி. சவுஜன்யா (29). மாற்றுத்திறனாளி. மகள்கள் இருவருக்கும் திருமணமாகாததால் தனது பெற்றோருடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சூரிய நாராயணாவிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். படுத்த படுக்கையாக இருந்ததால் வீட்டிற்கு வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி சூரிய நாராயணா இறந்தார்.
கணவர் இறந்த துக்கம் தாளாத விஜயலட்சுமி, கணவருக்கு ஈம சடங்குகள் முடிந்தவுடன் தனது 2 மகள்களுடன் அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றார். அந்த வழியாக சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தனர்.
ரெயில் நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் பயணிகள் தாய், மகள்களை காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமி மற்றும் அவரது மகள்கள் வீட்டில் உள்ள அறைகளில் தனித்தனியாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது விஜயலட்சுமி மற்றும் அவரது 2 மகள்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விஜயலட்சுமியின் அறையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. போலீசார் கடிதத்தை பறிமுதல் செய்தனர்.
அதில் எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கணவர் இறந்து விட்டதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோமளா குளியல் அறைக்கு சென்றார்.
- கோமளா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மேல் தெரு பி.வி.களத்தூரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் கோமளா என்ற அஸ்வினி (வயது22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது அங்கு அஸ்வினி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.