search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women arrested"

    • போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ் பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகில் மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த வடசிறு வள்ளூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (75), குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்மின் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.

    • பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார் குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வினிதா (வயது 28) என்பவர், அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர். இதேபோன்று, லாலா பேட்டையில் மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா (42) என்பவரையும், கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • மதுரை அருகே வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    மதுரை

    மதுரை வளர் நகர் அம்பலக்காரன் பெட்டியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு வண்டியூரைச்சேர்ந்த லெட்சுமி எனபவரும் வியாபாரம் செய்கிறார். கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர் களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் லட்சுமி யின் உறவினர்களான வண்டியூர் செம்மண் சாலையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் மனைவி மேனகா (37) , ராமசாமி மனைவி சாந்தி (50),சோனை மகள் ரேணுகா (39) ஆகிய 3 பேரும் ராமனை ஆபாச மாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து ராமன் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.

    மதுரை தென்னோ லைக் காரத் தெருவை தெருவை சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி பூர்ணிமா (38).இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தெற்கு வாசலில் உள்ள அரிசி கடைக்கு பூர்ணிமா சென்றிருந்தார். அப்போது அவரு க்கும் அங்கு வந்த ஆரப் பாளையம் ராஜேந்திரா மெயின்ரோடு கணேசன் மனைவி நிஷா காந்தி (45) என்பவருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நிஷா காந்தி, பூர்ணிமாவை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பூர்ணிமா தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து நிஷா காந்தியை கைது செய்தனர்.

    • கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா்.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா்.

    காங்கயம்:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (வயது 25). காா் டிரைவரான இவா் காங்கயத்தை அடுத்த மடவிளாகம் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா். அப்போது கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பிரவீன்குமாா், கூட்டத்தில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 3 பெண்கள் குறித்து காங்கயம் போலீசாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

    இதையடுத்து மகளிா் காவல் நிலைய போலீசாா், 3 பெண்களையும் பிடித்து விசாரித்தனா். அதில் அந்த 3 பெண்களும் நாகா்கோவில், ஒழுவஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுப்புதாய் (30), அட்சயா (28), மரியா (33) என்பதும், இவா்கள் 3 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு சென்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா். 

    • சிவகங்கை அருகே 150 கிலோ மின் கம்பிகள் திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ அலுமினிய கம்பிகளை 3 பெண்கள் திருடிக்கொண்டு சென்றனர். இதை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் அவர்களை பிடித்து திருப்பத்தூர்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்சி கீரைக்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அய்யம்மாள் (37), ஜெயராஜ் மனைவி குருவம்மாள் (55), வீராச்சாமி மனைவி கலா (55) என தெரியவந்தது.

    மின் கம்பிகள் திருட்டு தொடர்பாக மின்பாதை ஆய்வாளர் செந்தில்வேல் கொடுத்த புகாரின்பேரில் 3 பெண்களையும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.

    • கடந்த மாதம் 7-ந் தேதி பெண்டுருத்தி பிருந்தாவனம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே இரவு நல்லம்மா (50), அவரது மகன் வரலையா (19) ஆகியோர் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.
    • ராம்பாபு இரும்பு ராடால் இருவரையும் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் காயமடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெண்டுருத்தி பகுதியில் ஒரே வாரத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட 2 பெண்கள், 1 ஆண் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொலையாளி யார் எதற்காக கொலை செய்தார் என கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். கொலை நடந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு முட்புதரில் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அங்கப்பள்ளி மாவட்டம் தர்மசாஸ்திரம் பகுதியை சேர்ந்த சந்தக ராம்பாபு (வயது 49) என தெரியவந்தது. இவரது பெற்றோர் இளம் வயதிலேயே இறந்து விட்டதால் 18 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது மனைவியுடன் ராஜ் முந்திரி சென்ற சந்தக ராம்பாபு அங்கு கொத்தனார் வேலை செய்து வந்தார்.

    மேலும் ஆட்டோ ஓட்டி வந்தார். இதில் போதுமான வருமானம் கிடைக்காததால் கடந்த 2006-ல் ஐதராபாத் வந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தார்.

    இதையடுத்து கடந்த 2013ல் விசாகப்பட்டினத்திற்கு வந்து அங்குள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்தார். இந்த நிலையில் 2016-ல் மீண்டும் ஐதராபாத் வந்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு 27 வயதில் மகனும், 26 வயதில் மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் வேலையில் இருந்து வீட்டிற்கு சென்றபோது மனைவி வேறு ஒருவருடன் படுக்கையில் உல்லாசமாக இருப்பதை சந்தக ராம்பாபு நேரில் பார்த்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை விவாகரத்து செய்தார். மனைவி ஏமாற்றியதால் தனிமையில் இருந்த ராம்பாபுவுக்கு பெண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு சைக்கோ நிலைக்கு சென்றார். பெண்களை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

    கடந்த மாதம் 7-ந் தேதி பெண்டுருத்தி பிருந்தாவனம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே இரவு நல்லம்மா (50), அவரது மகன் வரலையா (19) ஆகியோர் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

    அங்கு வந்த ராம்பாபு இரும்பு ராடால் இருவரையும் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் காயமடைந்தனர். வலியால் இருவரும் அலறி துடித்ததால் அருகில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதனை கண்ட ராம்பாபு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதேபோல் கடந்த 6-ந் தேதி சப்தகிரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்யும் சுதாரி அப்பாராவ் (72). மனைவி சுதாரி லட்சுமியை (62) இரும்புராடால் தாக்கி கொலை செய்தார். அப்பாராவ் தடுக்க முயன்றதால் அவரையும் அடித்து கொலை செய்தார்.

    மேலும் கடந்த 14-ந்தேதி சுஜாதா நகரில் அப்பிக்கொண்ட பகுதியில் கட்டுமான தொழிலாளி லட்சுமி என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்த போது போலீசாரிடம் சிக்கினார்.

    சைக்கோவாக மாறி பெண்களை கொலை செய்து வந்த தொழிலாளியால் ஆந்திராவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    குழந்தை விற்பனை சட்ட விரோதம் என்பதால் இடைதரகர்களாக செயல்பட்ட தனம், ஜெயகீதாவை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை

    சென்னை புழல் காவாங்கரையை கே.எஸ். நகரைச் சேர்ந்தவர் யாஸ்மின். இவருக்கும் மோகன் என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் யாஸ்மின் 2-வதாக கர்ப்பம் ஆனார். 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவர் மோகன் பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் 2-வது குழந்தையை பெற்று வளர்க்க முடியாதே என எண்ணிய யாஸ்மின் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தார். இதற்காக ஜெயகீதா என்பவரின் உதவியை நாடினார்.

    அப்போது ஜெயகீதா குழந்தையை பெற்ற பிறகு அதனை நான் விற்பனை செய்து தருகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பி யாஸ்மின் கடந்த 21-ந்தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    பின்னர் 5 நாட்கள் கழித்து ஜெயகீதாவின் உதவியுடன் குழந்தையை புரசைவாக்கத்தில் வைத்து விற்பனை செய்தார்.

    இதற்காக ஜெயகீதா கவரில் போட்டு கொடுத்த பணத்துடன் யாஸ்மின் சென்றபோது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் புளியந்தோப்பில் வைத்து வழிப்பறி செய்து பணத்தை பறித்துச் சென்று விட்டதாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக யாஸ்மின் வேப்பேரி போலீசில் புகார் அளித்து இருந்தார். அவர் மீது சந்தேகம் எழுந்ததால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இதில் துப்பு துலங்கியது. குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக இடைத்தரகராக செயல்பட்ட ஜெயகீதா, தனம், லதா, ஆரோக்கிய மேரி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை ரூ.2½ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    விற்பனை செய்யப்பட்ட யாஸ்மினின் குழந்தை சென்னை மூலக்கொத்தளத்தில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கீழ்ப்பாக்கம் துணை கமி‌ஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் வேப்பேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி குழந்தையை மீட்டனர்.

    இதில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர் யாஸ்மினிடம் குழந்தையை விலைக்கு வாங்கியது தெரிய வந்தது. பின்னர் ஸ்ரீதேவியின் தாய் வீடான மூல கொத்தளத்துக்கு சென்று தங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    ஸ்ரீதேவியின் கணவர் சிவக்குமாரும், இடைத்தரகரான ஆரோக்கிய மேரியும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். சிவகுமாருக்கு கடந்த 13 வருடங்களாக குழந்தை இல்லை. இதனை அறிந்து கொண்டு யாஸ்மினின் குழந்தையை ஆரோக்கியமேரி மூலமாக ஜெயகீதா விலைக்கு வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது.

    இதற்கிடையே ஜெகன் என்பவர் தனது மனைவி சந்தியாவுடன் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவர் குழந்தை விற்கப்பட்டதாக வெளியான செய்தியையும் யாஸ்மின் வழிப்பறி நடைபெற்றதாக கூறியதையும் அறிந்தேன்.

    யாஸ்மின் என்னிடம் பணத்தை கொடுத்து இருந்தார். பின்னர் அவரே வாங்கி சென்று விட்டார் என கூறினார். இதுவும் இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அமைந்து இருந்தது.

    இதனைத் தொடர்ந்து தாய் யாஸ்மினை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குழந்தையை பிரிய மனமின்றி அதுபோன்று நாடகம் ஆடியதாக தெரிவித்தார்.

    இதன் பிறகே குழந்தை விற்பனை விவகாரம் முடிவுக்கு வந்தது. யாஸ்மினையும் குழந்தையையும் அமைந்தகரையில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    குழந்தை விற்பனை சட்ட விரோதம் என்பதால் இடைதரகர்களாக செயல்பட்ட தனம், ஜெயகீதாவை போலீசார் கைது செய்தனர்.

    இதன் பின்னணியில் உள்ள மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் யாஸ்மின் அளித்த வழிப்பறி புகார் பொய்யானது என்பது உறுதியானது. யாஸ்மின் பயணித்த ஓலா ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், தனக்கு சவாரி கட்டணமாக ரூ.110 கொடுத்தாகவும் அவர் தெரிவித்தார்.

    குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகள் ரூ.3½ லட்சம் பணத்தை கொடுத்ததும், இதில் இடைத்தரகர்கள் ரூ.1 லட்சத்தை பங்கு போட்டு கொண்டதும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

    மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று உத்தரபிரதேசத்தில் கோட்சே போன்று காந்தியின் உருவத்தினை சுட்டு போட்டோ எடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். #Gandhiphoto #womanarrested
    அலிகார்:

    உத்தரபிரதேசத்தில்  கடந்த ஜனவரி 30ம் தேதி காந்தியின் நினைவு தினத்தினையொட்டி, அலிகார் பகுதியில் உள்ள தப்பாலுக்கு அருகே காந்தியை அவமதிப்பதை போன்று , உருவப்படத்தை சுட்டும், அவரை கொலை செய்த கோட்சே படத்துக்கு மாலை அணிவித்தும் இந்து அமைப்புகள் கொண்டாடின.



    இந்த செயலைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 4ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி  பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழகத்தில் வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சித்குமார், டி.வி.துரைராஜ், சங்கர் என பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் காந்தியை கோட்சே சுட்டதை நினைவுப்படுத்துவதைப்போல துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பெண் பூஜா பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோரை அலிகார் போலீசார் கைது செய்துள்ளனர். தப்பால் பகுதியைச் சேர்ந்த இவர்கள் இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  #Gandhiphoto #womanarrested
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    வரையறுக்கப்பட்ட ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    போராட்டம் நடைபெற இருந்த ஆஞ்சநேயர் கோவில் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே அங்கு திரண்ட சத்துணவு ஊழியர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுந்தரம்மாள், மாநில செயலாளர் ஆண்டாள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண் சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    அயனாவரம் அருகே மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    அயனாவரம் ராஜிவ்காந்தி நகரில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.சி.எப். போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர்.

    அப்போது மகாராணி (50), சீத்தா (34) ஆகியோர் டாஸ்மாக் பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது. ‘மாவா’ போதை பவுடரும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    வேப்பனபள்ளி அருகே முதாட்டியிடம் தங்க சங்கிலி திருட முயன்ற 2 பெண்களை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(70). இவர் நேற்று வேப்பனப்பள்ளிக்கு சென்றுள்ளார். அங்குள்ள ராமன் என்பவரது மளிகை கடை முன்பு அமர்ந்திருந்த அவரிடம் இரண்டு பெண்கள் வந்து பேச்சு கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் வைத்திருந்த தின்பண்டங்களையும் கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளனர். அப்போது மூதாட்டி கோவிந்தம்மாள் அணிந்திருந்த ரூ. 64 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றுள்ளனர். 

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அந்த இரண்டு பெண்களையும் கையும், களவுமாக பிடித்து வேப்பனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். 

    இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குபதிவு செய்து, அந்த பெண்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்ததுடன்,. விசாரணையில் வேப்பனஹள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி சாந்தம்மாள்(35), நாச்சிக்குப்பம் வெங்கடேஷ் மனைவி நாகரத்தினம்மா(36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×