search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women death"

    • நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது.
    • அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.

    விளாத்திகுளம்:

    மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பவுர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தனர்.

    குலதெய்வத்தை தரிசனம் செய்து விட்டு இன்று காலை 6 மணி அளவில் பெரியசாமிபுரம் கடற்கரைக்கு குளிப்ப தற்காக 20 பேர் சென்றுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்களாக இருந்தனர்.

    நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. அந்த நேரத்தில் 20 பேரும் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

    அதிகமான காற்றுடன் கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில் கடலில் குளித்த மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த இலக்கியா (வயது 21), கன்னியம்மாள் (50), முருக லட்சுமி (38), ஸ்வேதா (22), அனிதா (29) ஆகிய 5 பெண்களும் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர்.

    அப்போது அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் இலக்கியா, கன்னியம்மாள் ஆகிய இருவரும் அலையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேம்பார் போலீசார் அவர்களுக்கு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

    பவுர்ணமியை முன்னிட்டு குலதெய்வம் வழிபாடு செய்வதற்காக வந்த பெண்கள் குளிக்கும்போது கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கஜேந்திரனின் மனைவி புஷ்பா டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கொள்ளப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் கஜேந்திரன் (வயது 40).

    விவசாயியான இவருக்கு திருமணமாகி புஷ்பா (33) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஜோசிகா என்ற மகளும் உள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் விளை நிலத்தில் மாற்று பயிர் பயிரிட கஜேந்திரன் அவரது சொந்த டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கஜேந்திரனின் மனைவி புஷ்பா டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த புஷ்பாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    கணவர் கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அப்போது உறவினர்கள் புஷ்பா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் திடீரென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த் நேரில் வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இறந்த புஷ்பாவின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பா எதிர்பாராத விதமாக டிராக்டரில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது அவரது கணவர் டிராக்டரை ஏற்றி கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் புஷ்பாவின் கணவர் கஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • விபத்தில் காயம் அடைந்த பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருநாவலூர்:

    திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். (வயது 50).இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் தனது மனைவி வள்ளி (43) என்பவருடன் சென்னை நோக்கி புறப்பட்டார்.

    இந்த மோட்டார் சைக்கிள் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலை தனியார் பால்பண்ணை பகுதியில் சென்றது. அப்போது பாலமுருகன் மோட்டார் சைக்கிளுடன் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வேப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதோடு வள்ளியின் உடல் காரில் சிக்கியது. சுமார் 100 மீட்டர் தூரம் அவரது உடல் இழுத்து செல்லப்பட்டது. இதனால் வள்ளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனைபார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பாலமுருகன் உயிருக்கு போராடினார். உடனே அவரைமீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து உள்ளனர். காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வெள்ளகோவிலில் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மூலனூர் ரோட்டை சேர்ந்தவர் திருமூர்த்தி கட்டிடத்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் அங்குள்ள செங்கல்சூளை குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இவரது மகள் முத்துலட்சுமி (வயது 20). இவர் அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். முத்துலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    இந்தநிலையில் இன்று காலை முத்துலட்சுமி மூலனூர் சாலையில் சைக்கிளில் சென்றார். அப்போது பரமகுடியில் இருந்து ஈரோடு சர்க்கரை ஆலைக்கு மரத்தூள் ஏற்றிய லாரி வந்தது.

    எதிர்பாராதவிதமாக லாரி முத்துலட்சுமி ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அதே லாரி முத்துலட்சுமி தலையில் ஏறி இறங்கியது. இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பகுதிமக்கள் அவரை மடக்கிப்பிடித்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    விக்கிரவாண்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தனி கிராமத்தை சேர்ந் தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜெகதீஷ்வரி (வயது 55).

    சம்பவத்தன்று இவர் சித்தனியில் இருந்து விழுப்புரத்துக்கு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பஸ்சுக்காக காத்திருந்த ஜெகதீஷ்வரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ஜெகதீஷ்வரியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு ஜெகதீஷ்வரி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஆம்பூர் அருகே பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 75 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    பேரணாம்பட்டில் இருந்து ஆம்பூர் நோக்கி தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ்சை டிரைவர் சிவநேசன் (வயது 52). ஓட்டி வந்தார். இவர் உள்பட 110 பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர்.

    போச்சம்பட்டு கூட்ரோடு அருகே சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மீது மோதி சாலை அருகே உள்ள புளிமரத்தில் மோதி நின்றது. இதில் டிரைவர் சிவனேசனின் கால்கல் துண்டானது. மேலும் 25 பெண்கள் உள்பட 75 பேர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 45 பேரும், நரியாம்பட்டு அரசு சுகாதார ஆஸ்பத்திரியில் 15 பேரும் அனுமதித்தனர்.

    மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு பேரணாம்பட்டு மசிகம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மனைவி கோவிந்தம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    வேலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவத்தையடுத்து 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #swineflu
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆம்பூர் பெரியாங்குப்பத்தை சேர்ந்த வரதராஜ் மனைவி ருக்மணியம்மாள் (வயது 55). ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கபட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு அவரை சோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமி நகரில் வசிக்கும் சிவக்குமார் என்பவரது மகள் பிரியதர்ஷினி (வயது 4). இவள், கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். இதனையடுத்து அவள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட 30 பேரும், பெண்லெண்ட் ஆஸ்பத்திரியில் 40 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல வாலாஜா, அரக்கோணம், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கபட்ட 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது. காய்ச்சலை கட்டுபடுத்த 60 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தபட்டுள்ளன.

    இந்த குழுவினர் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு சிகிச்சை அளிக்கின்றனர்.

    மேலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிக்கபட்ட பகுதிகளில் 20 விரைவு மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்னர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 2 பேருக்கு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கபடுகிறது.

    மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட 50 பேர் காய்ச்சல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும், மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தண்டராம்பட்டு பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளனர். அங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ##swineflu
    பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் மற்றும் பெண் பலியானார்.
    மாமல்லபுரம்:

    திருப்போரூரை அடுத்த மயிலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). இவர் உறவினரான செங்கல்பட்டு அடுத்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த லாவண்யாவுடன் (25) கோவளம் அடுத்த தெற்குப்பட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். இரவு 8மணியளவில் அவர்கள் தெற்குபட்டு கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றனர்.

    அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தியும், லாவண்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
    ×