search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சரவை பட்டியல்"

    • அமித்ஷாவுக்கு மீண்டும் உள்துறை ஒதுக்கீடு
    • ஜெய்ஷங்கருக்கு மீண்டும் வெளியுறவு துறை ஒதுக்கீடு

    மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

    கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

    நேற்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்றார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர் ஆகியோர் பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்களுக்கு என்னென்ன இலக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் அப்போது வெளியாகவில்லை.

    இன்று கேபினட் அமைச்சர்களுக்கு என்னென்ன இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என விவரங்கள் வெளிவந்துள்ளது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை - கேபினட் அமைச்சர்கள் பட்டியல்

    ▪️ ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு

    ▪️ அமித்ஷா - உள்துறை

    ▪️ ஜே.பி.நட்டா - சுகாதாரம், ரசாயனங்கள்

    ▪️ சிவ்ராஜ் சிங் சவுஹான் - வேளாண், ஊரக வளர்ச்சி

    ▪️ மனோகர் லால் கட்டார் - மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி

    ▪️ நிர்மலா சீதாராமன் - நிதி

    ▪️ ஜெய்ஷங்கர் - வெளியுறவு

    ▪️ அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி

    ▪️ மன்சுக் மாண்ட்வியா - தொழிலாளர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு

    ▪️ ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

    ▪️ ஜித்தன் ராம் மஞ்சி - சிறு குறு நடுத்தர தொழில்கள்

    ▪️ தர்மேந்திர பிரதான் - கல்வி

    ▪️ குமாரசாமி - இரும்பு, கனரக தொழில்கள்

    ▪️ ராம்மோகன் ராயுடு - விமான போக்குவரத்து

    ▪️ பியூஷ் கோயல் - வணிகம் மற்றும் தொழில்துறை

    ▪️ ராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்

    ▪️ சர்பானந்த சோனோவால் - கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள்

    ▪️ வீரேந்திர குமார் - சமூக நீதி

    ▪️ அன்னபூர்ண தேவி - மகளிர், குழந்தைகள் மேம்பாடு

    ▪️ கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் நலன்

    ▪️ சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி

    ▪️ ப்ரகலாத் ஜோஷி - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

    ▪️ கிரிராஜ் சிங் - ஜவுளி

    ▪️ ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நல விவகாரம்

    ▪️ ஜோதிர்த்தியா சிந்தியா - கம்யூனிகேஷன், வடகிழக்கு நலன்

    ▪️ பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம்

    ▪️ கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

    ▪️ கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்

    ▪️ சிராஜ் பஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில்கள்

    ×