என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர்"
- மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.
- தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இன்று (வெள்ளிக்கிழமை) வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு, கண்காட்சியை தமிழக வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.
வடிகால் வாய்க்கால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சரே நேரடியாக ஆய்வு செய்தார். இதனால் மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பயிர்கள் பாதிப்புக்காக ரூ.1,023 கோடி அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழை புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 4 வகையான அளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும்.
மத்திய அரசு நாம் கேட்ட நிவாரணத்தை வழங்கவில்லை.
இருந்தாலும், தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நாம் பாதிப்புக்கு நிதி கேட்டால் அதற்கு மத்திய அரசு இதுபோல் ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹெப்பல்கருக்கு எதிராக சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
- கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.
பெண் அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகள் குறித்து கர்நாடக சட்டசபையில் வாதங்கள் நடைபெற்றது.
சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் ஹெப்பல்கருக்கு எதிராக முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. லட்சுமி ஹெப்பால்கரின் நடத்தை மற்றும் கற்பை குறை கூறும் கடுஞ்சொல்லை சிடி ரவி தனது பேசியதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் புகாரின் பேரில் சி.டி.ரவி மீது சட்டப்பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் சட்டப்பிரிவு79 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.
#BREAKING BJP MLC CT Ravi detained after an FIR was filed for allegedly using derogatory language towards Karnataka Minister Laxmi Hebbalkar in the Legislative Council. Police literally drag him out of premises?? https://t.co/C0knp1VHEN pic.twitter.com/aTP2wO959m
— Nabila Jamal (@nabilajamal_) December 19, 2024
கைது செய்யப்பட்டதற்குப் பின் வெளியான வீடியோ பதிவு ஒன்றில், காங்கிரஸ் அரசு தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், போலீஸ் காவலில் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் சி.டி.ரவி கூறினார்.
சி.டி.ரவி கைது செய்யப்பட்டதற்கு எதிராக பெங்களூரு, சிக்மகளூர், பெலகாவி ஆகிய இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அவருக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வெளியே வந்த அவர், சிறையில் தன்னை பயங்கரவாதி போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் 2431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
- பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது,.
சென்னை:
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பத்திரிகையாளர்களின் நலனைக் காப்பதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 'பத்திரிகையாளர் நலவாரியம்' உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் 3300 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 2431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 446 செய்தியாளர்களுக்கு சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர் நலவாரியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 15.11.2024 முதல் 26.12.2024 வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா.
- இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 15.11.2024 முதல் 26.12.2024 வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா 30.12.2024 முதல் 19.01.2025 வரையும் நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் மையம் 24.01.2025 வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999 மற்றும் 1800 425 1757-ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் ( 044-28339999)
— TN HRCE (@tnhrcedept) November 15, 2024
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் தகவல்.@mkstalin @PKSekarbabu @tntourismoffcl @TNDIPRNEWS #cmmkstalin | #dycmudhay |… pic.twitter.com/3wapV3Vq0Y
- நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம்
- எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் உள்ள ஸ்வீடன் நாட்டின் பாலின சமத்துவம் மற்றும் வொர்க் லைஃப் அமைச்சர் பவுலினா பிராட்பெர்க் [Paulina Brandberg]. இவருக்கு வாழைப்பழங்களைக் கண்டால் பயம் ஏற்படும் போபியா [Phobia] உள்ளது.
உயரமான இடங்களைக் கண்டு பயப்படுவது Acrophobia, ரத்தத்தைக் கண்டு பயப்படுவது Hemophobia என பல போபியாக்கள் இருப்பது போல் வாழைப்பழங்களைக் கண்டு பயப்படுவதற்கு பெயர் bananaphobia ஆகும்.
இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பவுலினா பிராட்பெர்க் தனது அலுவலகத்தில் தான் கலந்து கொள்ளும் மீட்டிங்களில் வாழைப்பழங்கள் தனது கண்ணில் படவே கூடாது என்று ஸ்டிரிக்டாக தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு ஸ்டிரிக்ட்டாக உத்தரவு போட்டுள்ளார்.
அவருக்கும் அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையிலாக பரிமாறிக்கொள்ளப்பட்ட ஈமெயில்கள் லீக் ஆனதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எஸ்பிரசென் [Expressen] செய்தி நிறுவனம் இந்த ஈமெயில்களை பொதுவெளியில் வெளியிட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் தேதியிட்ட ஈமெயில் ஒன்றில், ஸ்வீடன் சபாநாயகர் அலுவலகத்தில் தான் கலந்துகொள்ள உள்ள மீட்டிங்கில் வாழைப்பழகளுக்கான எந்த தடையும் இருக்கக்கூடாது, அவை எனக்கு அதிக அலர்ஜி என்று பவுலினா தெரிவித்துள்ளார்.
பவுலினா கலந்துகொள்ள உள்ள மற்றொரு மீட்டிங் தொடர்பான ஈமயிலில், நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம், எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல ஈமெயில் உரையாடல்கள் வெளியாகி அந்நாட்டில் பேசுபொருளானது.
இதையடுத்து பவுலினாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் [Ulf Kristersson], பவுலினாவின் போபியா அரசு நிர்வாக செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, போபியாக்களால் அவதிப்படும் மனிதர்களையும் அவர்களின் சிரமங்களையும் நான் மதிக்கிறேன், அதை கிண்டல் செய்யக் கூடாது, கடினமாக உழைக்கக்கூடிய ஒரு அமைச்சரை மக்கள் கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
- 'அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்'
- '1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் மஹாராணா பிரதாப்.'
முகலாய மன்னர் அக்பரைக் குறித்து பெருமையாக விவரிக்கும் பாடபுத்தகங்கள் தீயிலிட்டு எரிக்கப்படும் என்று பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தடாலடியாக தெரிவித்துள்ளார். உதய்பூரில் மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அக்பரை அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்.
மஹாராணா பிரதாப் மக்களின் பாதுகாவலராக இருந்தவர். ஆனால் அக்பர் தனது சொந்த நலனுக்காக மக்களை கொலை செய்தவர். அப்படிப்பட்ட அக்பரை சிறந்தவர் என்று பள்ளி பாடப்புத்தகத்தில் பெருமையாக குறிப்பிடுபவர்களை விட பெரிய எதிரி மேவார் ராஜ்யத்திற்கும் ராஜஸ்தானுக்கும் இருக்க முடியாது. [மாநிலத்தின்] எல்லா வகுப்புகளின் பாடப் புத்தகங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம், இதுவரை எந்த புத்தகத்திலும் அப்படி [அக்பரை சிறந்தவர்] குறிப்பிடவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் அந்த புத்தகங்கள் தீயிலிட்டு எரியூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மஹாராணா பிரதாப் சிங் மேவார் ராஜ்யத்தின் போற்றப்படும் அரசர்களுள் ஒருவர் ஆவார். 1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் அவர். இதற்கிடையே, இந்து முஸ்லீம் ஒற்றுமையை அதிகம் வலியுறுத்தி புனித பயண வரி நீக்கம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்பரை குறித்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கூறியுள்ள கருத்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
- சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
- ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் இன்று (30.07.2024) சென்னை தலைமை செயலகத்தில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், ரூ.700 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வெள்ள தடுப்பு திட்டங்கள் மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய தூர்வாரும் பணிகள் மற்றும் RRR திட்டத்தின் கீழ் (செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல்) ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருமழைக்கு முன்பு விரைந்து முடிக்க நீர்வளத்துறை அமைச்சரால் உத்திரவிடப்பட்டது.
இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், கூடுதல் செயலாளர் எஸ்.மலர்விழி, மன்மதன், முதன்மை தலைமைப் பொறியாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது). கண்காணிப்பு பொறியாளர்கள், மற்றும் அனைத்து நீர்வளத்துறை செயற்பொறியாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்ல இருக்கிறார்.
- தொழில்நுட்பத்திற்கு நமக்கு ஒரு ஆண்டுக்கு 100 முதல் 120 கோடி தான்.
தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் ராஜா கூறியது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்ல இருக்கிறார். தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், தலைவர்கள், தொழில் நுட்பத்தை உருவாக்குபவர்கள் என அந்த துறையில் உள்ளவர்களை சந்திக்க உள்ளார்.
நான் சட்டசபையில் கூறியது போல் 100 சதுர அடியில் கட்டிடமும், இணையதள வசதியோ, மின்சாரமும் இருந்தா தொழில் நுட்பத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரானா முடிந்து 2 வருடங்களில் உலகளாவிய திறன் மையங்கள் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அப்படியென்றால் பல 10,000 வேலைகள் உருவாக்கி உள்ளனர்.
கடந்த ஆண்டு நான் கூறியது போல 40 லட்சம் சதுர அடியில் புதிய ஐடி பார்க் அலுவலகம் குத்தகைக்கு எடுக்கப்படும் என்று சொன்னேன். ஆனால் சென்ற ஆண்டு 110 லட்சம் சதுரஅடி புதிய அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு அதில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் சட்டமன்றத்தில் கூறியது போல் தொழில்நுட்பத்திற்கு நமக்கு ஒரு ஆண்டுக்கு 100 முதல் 120 கோடி தான். ஆனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 800 முதல் ஆயிரம் கோடி ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது.
ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தில் நாம் தான் முதலிடத்தில் "இருந்தோம்.. ஆனால்., இப்போது ஐதராபாத், பெங்களூரு அளவுக்கு நாம் இல்லை என்றே கூற வேண்டும்.
அதேபோல் நாம் மாநிலத்திற்கு வெவ்வேறு தொழில்கள் உள்ளன. அனைத்து துறைகளில் முன்னேறி இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப துறையை பொருத்தவரை கடந்த ஆண்டு என்னால் முடிந்த முன்னேற்றங்களை கொடுத்து வருகிறேன். இன்னும் சிறப்பாக என் துறையை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
- ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.
- கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சென்னை:
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானாவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை நிறுவ அரசு முன்வருமா? என்று பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியாதவது:-
திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானா நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்புதல் பெற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதேபோல். பொது இடத்திலோ சாலைகளிலோ சாலை ஓரத்திலோ சிலை வைப்பதற்கு தடை உள்ள காரணத்தினால் தான் உடனடியாக அனுமதி வழங்கப்பட முடியவில்லை. அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.
- மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்
- யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார். இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 15) கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டினார்.
மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில் தனது கருத்து குறித்து சுரேஷ் கோபி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில், இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்று நான் கூறியது எனது இதயபூர்வமான கருத்து. எனது மனதில் உள்ளதையே நான் பேசினேன். அதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.
யாரும் விரும்பினாலும் விருமாபாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுதந்திரத்துக்கு பின் தனது இறுதி மூச்சுவரை இந்தியாவை கட்டியெழுப்பிய தலைவர் இந்திரா காந்தி. தேசத்துக்காக உழைத்த ஒரு தலைவரை அவர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கவும் மறக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி தான் சென்னை திரும்புகிறார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணத்தால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை டெல்லிக்கு தீடீர் பயணம் மேற்கொள்கிறார்.
நாளை காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஆளுநர் 16ம் தேதி தான் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும்.
மேலும், தமிழக முதலமைச்சரின் பிரந்துரை கடிதத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
- பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிப்பு.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இதைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்ப உள்ளார்.