என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஐஏ"

    • 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.
    • இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்தார்.

    காரில் சிலிண்டர், ஆணி உள்ளிட்ட பொருட்களை நிரப்பி தீபாவளியை முன்னிட்டு கோவையில் நாச வேலையை அரங்கேற்ற முபின் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    தற்போது இந்த வழக்கினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகள் என தமிழகம் முழுவதும் 43 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது பலரது வீடுகளில் இருந்து செல்போன், டிஜிட்டல் கருவிகள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.

    தற்போது கைப்பற்றிய ஆவணங்களில் உள்ள விவரங்களின் முழுமையான தகவல்களை சேகரிக்கும் பணியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக இந்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர்களிடம் இந்த சம்பவத்தில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டார்களா ? வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்கும் அனுமதி கேட்க உள்ளனர்.

    6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.

    அப்போது இந்த வழக்கில் இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

    • சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
    • வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் வாலிபர் முபின் உயிர் இழந்தார்.

    காரில் சிலிண்டர்கள் மற்றும் வெடி பொருட்களை எடுத்துச் சென்று மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு முபின் திட்டமிட்டது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு சம்பவம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

    கார் வெடிப்பு சம்பவத்தின் முழு பின்னணி தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னையிலும் மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 15-ந்தேதி 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தலைமை செயலக காலனி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பி.பிளாக்கில் உள்ள சாகுல் அமீது வீடு, முத்தியால் பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமர் பாரூக் வீடு மற்றும் ஏழு கிணறு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இடம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

    ஓட்டேரியில் அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையிலும், முத்தியால்பேட்டை பகுதியில் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையிலும், சோதனை நடத்தினர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை, விசாரணை ஆகியவற்றில் கிடைத்த தகவலின் பேரிலேயே சென்னையில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே கடந்த 15-ந் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 4 நாட்களில் இன்று மீண்டும் சோதனை நடைபெற்று உள்ளது.

    திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது, சர்புதீன். இவர்கள் இருவருக்கும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை அறிவுறுத்தலின் பேரில் இன்று அவர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் தலைமையில் ராம்ஜிநகர் போலீசார் 50 பேர் இன்று காலை அவர்களின் வீடுகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சாகுல் அமீதுவை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட இருவரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும் அவர்களின் வீடுகளில் ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களின் பின்னணி மற்றும் சர்வதேச தொடர்புகளை கண்டறிவதற்காகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அளிக்கும் தகவலின் பேரில் தொடர் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது
    • பாஸ்டனை தளமாகக் கொண்ட தடயவியல் அமைப்பான அர்செனல் கன்சல்டிங் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பயங்கரவாத தொடர்பு குற்றச்சாட்டில் 2020ல் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி (83), ஜாமீன் மனு விசாரணையில் இருக்கும்போதே 2021ம் ஆண்டு மரணம் அடைந்தார். ஸ்டேன் சுவாமி திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்த நிலையில்தான் இவரை பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து சிறையில் அடைத்தது.

    பீமா கோரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 15 பேருடன் சேர்ந்து அவர் சதியில் ஈடுபட்டதாக என்ஐஏ கூறியது. அவர்களின் கணினிகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்ததாக சுவாமி மற்றும் மற்றவர்கள் குறிப்பாக இடதுசாரி ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள மீது என்ஐஏ குற்றம் சாட்டியது.

    இந்நிலையில் பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கணினியில் பல குற்றவியல் ஆவணங்கள் திணிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தடயவியல் நிறுவனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேன் சுவாமியின் வழக்கறிஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, தடயவியல் அமைப்பான அர்செனல் கன்சல்டிங், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    மாவோயிஸ்ட் கடிதங்கள் என அழைக்கப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள், 2014ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவரை, 5 ஆண்டுகளாக ஸ்டேன் சுவாமியின் கணினியை அணுகிய ஹேக்கர்களால் திணிக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது என்ஐஏவின் குற்றச்சாட்டில் கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் சோதனை நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை தமிழகத்திலும் நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இச்சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மேலும் பல துணை குழுக்கள் இருப்பது தெரியவந்தது.

    இத்துணைக்குழுக்கள் மூலம் இந்த அமைப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர். எனவே கைதானவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதில் பல முக்கிய தகவல்கள் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. அதன்அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு மற்றும் இந்த அமைப்புக்கு தொடர்புடைய துணை குழுக்களின் அலுவலகங்களில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. முடிவு செய்தது.

    அதன்படி முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது. இதுபோல பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் இச்சோதனை நடைபெற்றது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
    • ஆயுதபயிற்சியில் என்னென்ன மாதிரியான பயிற்சிகளை அளித்தனர் என்ற கோணத்திலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    கோட்டைமேட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜமேஷா முபின் மக்கள் கூட்டத்தில் புகுந்து வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜமேஷா முபின், சந்தன கடத்தல் வீரப்பன் பதுங்கிய சத்தியமங்கலம் காடுகளில் ரகசிய கூட்டங்கள் நடத்தியதும், இதில் தீவிரவாதத்திற்கு ஆட்கள் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்ததும் தெரியவந்தது.

    இதில் முகமது தல்கா, சேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

    அதன்படி முகமது தல்கா, ஷேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேரையும் 17-ந் தேதி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம் காட்டில் நடந்த ரகசிய கூட்டத்தில் யார்? யார் எல்லாம் பங்கேற்றனர். அவர்களின் பின்னணி என்ன? ரகசிய கூட்டத்தில் பங்கேற்றவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தது யார்? எனவும் விசாரிக்கின்றனர்.

    மேலும் அந்த ரகசிய கூட்டத்தில் அவர்கள் என்ன திட்டம் திட்டினார்கள். வேறு எங்காவது இதுபோன்ற செயல்களை அரங்கேற்றுவது குறித்து பேசப்பட்டதா? முபின் என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கினார்.

    ஆயுதபயிற்சியில் என்னென்ன மாதிரியான பயிற்சிகளை அளித்தனர் என்ற கோணத்திலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த கூட்டத்தில், வெளிநாட்டு தீவிரவாதிகள் யாராவது கலந்து கொண்டவர்களா? அவர்கள் இவர்களுக்கு பயிற்சி அளித்தனரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    தொடர்ந்து காவலில் எடுத்த 6 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதவிர அவர்கள் ரகசிய கூட்டம் நடத்திய சத்தியமங்கலம் காடுகளுக்கும் 6 பேரை அழைத்து சென்று விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் கோவைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடக்கும் என தெரிகிறது.

    சத்தியமங்கலம் காட்டில் நடந்த கூட்டத்தில் பலர் பங்கேற்று இருப்பதால் இவர்கள் 6 பேரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஹூரியத் மாநாட்டு அலுவலகத்துக்கு இன்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சென்றனர்.
    • ஹூரியத் மாநாட்டின் அலுவலகத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய உத்தரவு.

    காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் நயீம் கான் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஸ்ரீநகரின் ராஜ்பாக்கில் உள்ள அனைத்து கட்சி ஹூரியத் மாநாட்டின் அலுவலகத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய டெல்லி கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இதையடுத்து ஹூரியத் மாநாட்டு அலுவலகத்துக்கு இன்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சென்றனர். அங்கு அலுவலகத்தை சீல் வைத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.

    • மிரட்டல் கடிதம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மும்பை:

    மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) இ-மெயில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

    இக்கடிதத்தை அனுப்பிய நபர், தான் தலிபான் என்றும் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான சிராஜூதீன் ஹக்கானியின் உத்தரவின் பேரில் மும்பையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த போவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    மிரட்டல் கடிதம் குறித்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மும்பை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் தீவிர சோதனையில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    மும்பைக்கு தீவிரவாத மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உஷார் படுத்தப்பட்டன. நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் கேட்டு கொள்ளப்பட்டனர்.

    இதையடுத்து முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

    மேலும் மும்பை போலீசாரும் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே மும்பையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகள் தாக்குதல் ஆகியவை நடந்து உள்ளன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் தான் மும்பைக்கு தலிபான்கள் பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் வீட்டில் இன்று சோதனை நடைபெற்றது.
    • ராஜா முகமது வீட்டுக்கு இன்று காலை உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவர் வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. இவர் தனது தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டுக்கு உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான பி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகியிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது. 

    • மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முபின் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும், கோவையில் நாசவேலையை அரங்கேற்றும் நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் அனைவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஐ.எஸ். தொடர்புடையவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில வாரங்களில், கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை, மயிலாடுதுறை என 40 இடங்களில் சோதனை நடக்கிறது.

    இதில் கோவையில் மட்டும் கோவை கோட்டைமேடு, புல்லுக்காடு, உக்கடம், பிருந்தாவன் நகர், பாரத் நகர், குனியமுத்தூர், டி.கே.செட்டி வீதி, வசந்தா நகர் என 15 இடங்களில் சோதனை நடந்தது.

    இந்த வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் 16 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது.

    சோதனையின் போது வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டின் கதவுகளை பூட்டி கொண்டு வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    இதபோல் பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த சையது ரகுமான் என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது.

    சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. இருப்பினும் சோதனை முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் தெரியவரும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அசாருதீன் உள்பட 7 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் பல தகவல்களையும் கூறியுள்ளனர்.

    அவர்களிடம் பெற்ற ஆதாரங்கள், வீடியோக்களின் அடிப்படையிலேயே இன்று இந்த சோதனையானது நடந்தது.

    சென்னையில் இன்று 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனையின் போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது. டவுன் கரிக்காத்தோப்பைச் சேர்ந்த அன்வர்தீன், ஏர்வாடி கட்டளைத் தெருவைச் சேர்ந்த கமாலுதீன், தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் ஒருவர் வீடு, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஆரீஸ் என்பவர் வீட்டில் இந்த சோதனை நடந்தது.

    ஒரே நேரத்தில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வேர் அறுக்கும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 50 இடங்களில் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத கும்பல்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து நடந்த விசாரணையின் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரகசியமாக இந்தியாவில் உள்ள சமூக விரோத கும்பல்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்வது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் அடுத்தடுத்து பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். உத்தரபிரதேசத்தில் பிலிபிட் நகரில் ஆயுத வியாபாரி ஒருவர் வீட்டில் நடந்த சோதனையில் பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் சமூக விரோத கும்பல்களுக்கு விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் 72 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.

    உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வேர் அறுக்கும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இன்று நடந்து வரும் சோதனையில் பல இடங்களில் ஆயுதங்கள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆயுதங்களை வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.

    இன்று பஞ்சாப்பில் மட்டும் 30 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சமூக விரோத மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக இந்த சோதனையை அதிரடியாக மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரள மாநிலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
    • பாப்புலர் பிரண்ட் அமைப்பு, உடற்கல்வி, யோகா என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிரடி சோதனை நடத்தியது.

    இந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அந்த அமைப்பின் செயல்பாட்டுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

    கேரள மாநிலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தி வந்தது. இதன் முடிவில் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், சுமார் 50 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, உடற்கல்வி, யோகா என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளது.

    அதோடு இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாதத்தை பரப்ப பாப்புலர் பிரண்ட் அமைப்பு முயற்சித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ தெரிவித்து உள்ளது.

    • வெளிமாநிலங்களை சேர்ந்த பல பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதையும் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    • ஷாருக் ஷபி ஒட்டுமொத்த ரெயிலையும் எரிக்க திட்டமிட்டார் என்றும் இதன்மூலம் மிகப்பெரிய நாசவேலையை அரங்கேற்ற அவர் முயற்சி செய்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 2-ந்தேதி ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.

    இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர் நொய்டாவை சேர்ந்த ஷாருக் ஷபி (வயது 24) என தெரியவந்தது. அவர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மகாராஷ்டிரா அதிரடி படையினர் பிடித்து கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கேரள போலீசார் ஷாருக் ஷபியை கோழிக்கோடு அழைத்து வந்தனர். இங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் ரெயிலில் பயணிகள் மீது தீவைக்க அவரது நண்பர் ஒருவர் கூறியதாக தெரிவித்தார். பின்னர் அதனை மறுத்தார். அவர் மாற்றி, மாற்றி கூறியது குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தினர். இதில் ஷாருக் ஷபி பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அவருக்கு வெளிமாநிலங்களை சேர்ந்த பல பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதையும் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    மேலும் ஷாருக் ஷபி ஒட்டுமொத்த ரெயிலையும் எரிக்க திட்டமிட்டார் என்றும் இதன்மூலம் மிகப்பெரிய நாசவேலையை அரங்கேற்ற அவர் முயற்சி செய்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதிதிட்டம் இருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த வழக்கின் பின்னணியில் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது. அதனை கண்டுபிடிக்க விசாரணை நடத்தி வருகிறோம்.

    இந்த சம்பவத்தில் ஷாருக் ஷபி மட்டும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இல்லை. அவருடன் நிச்சயமாக வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கும். அந்த நபர்களை கண்டுபிடித்தால், இதன் பின்னணி தெரியவரும். எனவே இந்த வழக்கு விரைவில் என்.ஐ.ஏ.க்கு மாறும், என்றார்.

    ரெயில் எரிப்பு மற்றும் 3 பயணிகள் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் மேலும் பல பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. கூறியுள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×