என் மலர்
நீங்கள் தேடியது "கண்டன"
- கணவாய்புதூர், கே.என்.புதூர் கிராமங்களில் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு 382 ஏக்கர் நிலம் இருந்தது.
- விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் கணவாய் புதூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காடையாம்பட்டி:
ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி ஒன்றியம் கணவாய் புதூர் ஊராட்சி கணவாய்புதூர், கே.என்.புதூர் கிராமங்களில் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு 382 ஏக்கர் நிலம் இருந்தது. சங்கத்தின் பெயரிலேயே பட்டா இருந்து வந்தது.
அந்த நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்தில் 474 சங்க உறுப்பினர்கள் இந்த நிலத்தை விவசாயம் செய்து அங்கேயே குடியிருந்து வந்தனர். தற்போது 500 குடும்பம் வரை உள்ளன. இந்த சங்கமானது 1986-ம் ஆண்டு கலைக்கப்பட்டது.
அதற்கு முன்பாக கூட்டுறவு சங்கமானது சங்க உறுப்பினர்கள் அவர்களது அனுபவத்தில் உள்ள சங்கத்தின் நிலத்தை அவரவர்கள் பட்டா பெற்றுக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த நிலங்கள் அனைத்தும் தரிசு புறம்போக்கு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. அந்த நிலங்களுக்கு அனுபவத்தில் உள்ள விவசாயிகளின் பெயரில் பட்டா வழங்கக்கோரி நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அந்த நிலத்தை வருவாய்த்துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிலங்களை அளவீடு செய்து வந்து உள்ளனர்.
இதனை கண்டித்து லேண்ட் காலனி நிலங்களை விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் கணவாய் புதூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. தலைவர் டாக்டர். மாணிக்கம் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார் கணவாய் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரத்தினம் ஒன்றிய பா.ம.க. செயலாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர்் சங்க தலைவர் கண்ணையன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்ட வன்னியர்சங்க தலைவர் முருகன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தொழிற்சங்க தலைவர் பழனிசாமி, மாநில வன்னியர் சங்க பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி ராமசாமி, ஒன்றிய பா.ம.க. செயலாளர் வெங்கடேஷ், செல்வம், ராஜாமணி, மாதேஷ், பி எஸ் கே செல்வம் விஜயராகவன், ராஜேந்திரன், நகரச் செயலாளர் சாய் சுஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாமியாரை கண்டிக்கும் வகையில் தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தினர் தாரமங்கலம் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
- கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பேசும்போது சனாதனத்தை ஒழிக்க பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர் வழியில் உதயநிதி ஸ்டாலினும் பேசியுள்ளார்.
தாரமங்கலம்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என அறிவித்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாமியாரை கண்டிக்கும் வகையில் தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தினர் தாரமங்கலம் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உத்திரபிரதேச சாமியாரின் உருவ படத்தை எரித்தனர்.
திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி அஜித்குமார் தலைமையிலும். மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் கே.ஆர் தோப்பூர் கண்ணன் தொடக்க உரை நிகழ்த்தினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பேசும்போது சனாதனத்தை ஒழிக்க பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர் வழியில் உதயநிதி ஸ்டாலினும் பேசியுள்ளார்.
இது பற்றி தவறாக சித்தரிக்கப்பட்ட தகவலைக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து பேசிய உத்திரபிரதேச சாமியாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில் குடந்தை பாலன் நன்றி கூறினர்.
- கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம்உயர்த்தி தரக் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசா யிகள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெயின் கேட் முன்பு தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம்உயர்த்தி தரக் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மணப்பள்ளி பெருமாள் தலைமை வைத்தார். முன்னாள் மாநில விவசா யிகள் சங்கத் தலைவர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்க மாவட்ட செய லாளர் பெருமாள், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு இயக்குனர் தனலட்சுமி பாலசுப்ர மணியம் ,தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ராமநாதன், பாலு, சேகர், நாமக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஜோதி ,சதாசிவம், ராஜேந்திரன், தங்க ரத்தினம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜேடர்பாளையம் கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசா யிகள் கலந்து கொண்டனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க . சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி:
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க . சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் சானல் தூர் வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் இருப்பதை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், தடிக்காரன் கோணத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
குளம் தூர்வாருதலில் முறைகேடு, சாலை பணிகளில் முறைகேடு உள்ளிட்டவற்றுக்கும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் சானல்கள் தூர்வாரப்ப டாமல் உள்ளதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் நெல் பயிர்கள் கருகும் நிலையில் இருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் 40 அல்லது 40 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தான் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது 38 அடி தான் தண்ணீர் உள்ளது. எனினும் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறந்து இருக்கிறார்கள். இதனால் குமரி மாவட்ட மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் சாலைகள் அமைப்பதற்கு 18 சதவீதம் கமிஷன் கேட்பதாக கான்ட்ராக்டர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இப்படி கேட்கும் போது எப்படி தரமான சாலைகள் அமைக்க முடியும்.
தி.மு.க ஆட்சி ஊழல் ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு பகுதி செயலாளர் முருகேஸ்வரன் வர வேற்றார். அமைப்புச் செயலாளர் கே.டி.பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாணவரணி செயலாளர் மனோகரன், மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ண தாஸ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட் தாஸ், சக்கீர் உசேன், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ரவிந்திரவர்சன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட இணைச்செயலாளர் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட பொருளாளர் திலக், பகுதி செயலாளர்கள் ஜெய கோபால், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், ஜீன்ஸ், ஜெயசுதர்சன், பொன் சுந்தரநாத், முன்னாள் நகரச் செயலாளர் சந்துரு, மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், கோபாலசுப்பிரமணியன், சேகர், அனிதா சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் ரபீக், வெங்கடேசன், ரெயிலடி மாதவன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர்கள் ஹரிதாஸ், ஆறுமுகம், பிரசன்னா, சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1.1.2022 முதல் 30.6.2022 முடிய வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான சந்தா தொகை ரூ. 497 ஆக உயர்த்தப்பட்டதை கைவிட வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியின் படி 70 வயதினை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ெரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயண கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.
பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.