என் மலர்
நீங்கள் தேடியது "ஜனநாயகம்"
- அரசியல் சட்டம் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த அவைக்கு வந்திருக்க முடியாது.
- அரசியல் சாசனத்தை அவமதிப்பதற்கான எந்த வாய்ப்புகளையும் காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை.
மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விடுதலைக்கு பிறகும் சில இந்தியர்கள் அடிமை மனநிலையிலேயே சிக்கி உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தியா, ஒரே நாடு என்பதை வலியுறுத்த தான் 370 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டது. நாட்டின் பொருளாதார ஒற்றுமைக்காகவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.
ஒரே நாடு ஒரே வரி என்பது நமது பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது. ஏழைகள் மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது, உணவு தானியம் கிடைப்பதற்காக ஒரேநாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஏழைகள் இலவச சிகிச்சை பெறுவதற்காக, ஒரே நாடு ஒரே சுகாதார என்ற திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் கொண்டு வரப்பட்டது.
ஒரே நாடு ஒரே மின் வழித்தட திட்டத்தால் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
புதிய தேசிய கல்வி கொள்கையால் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரே நாடு ஒற்றுமையை வலியுறுத்த காசி தமிழ் சங்கம் நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வந்து அரசியல் சாசனத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது. எமர்ஜென்சியின்போது ஊடக சுதந்திரமும் நசுக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 25வது ஆண்டின்போது காங்கிரஸ் ஆட்சியில் தான் அந்த எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது.
நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தபோது ஒரு காங்கிரஸ் தலைவர் என்ன அவசியம் என கேட்டார்.
அரசியல் சட்டம் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த அவைக்கு வந்திருக்க முடியாது.
எங்களை தொடர்ந்து 3 முறை மக்கள் தேர்வு அனுப்பி வைத்துள்ளனர். நாட்டு மக்கள் முழு வலிமையுடன் அரசியல் சாசனத்துடன் நிற்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மட்டுமே 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர். ஒரே ஒரு காங்கிரஸ் குடும்பம் தான் இந்திய அரசியல் சாசனத்தை அதிகமாக காயப்படுத்தியது.
1947 முதல் 1952 வரை நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. அரசியல் சாசனத்தை அவமதிப்பதற்கான எந்த வாய்ப்புகளையும் காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது.
உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.
மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் EVM முறைக்கு எதிராக எலான் மஸ்க்கின் கருத்தைப் பகிர்ந்தனர்.
இந்நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி EVM விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது நிறவேற்றப்படுவதுடன் மட்டுமிடின்றி அந்த தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே ஜனநாய நாடு என்று கூறுவதை விட அங்கு ஜனநாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது. நாமும் ஜனநாயகத்தைக் காப்பற்ற அந்த திசையை நோக்கியே பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
- கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.
- இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது.
ஒட்டாவா:
கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்லியது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சுமத்தியபோது ஆதாரமற்றவை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கனடா நாட்டின் ஜனநாயகத்துக்கு இந்தியா இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தலாக உள்ளது. அச்சுறுத்தல் தருவதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அச்சுறுத்தல் தருவதில் 2-வது இடத்தில் இருந்த ரஷியா 3-வது இடத்திற்குச் சென்றுள்ளது. கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம். வெளிநாட்டு தூதர்களுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்
- போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?
பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்; கடந்த 10 ஆண்டுகளில் சாத்தியமற்றதாக கருதப்பட்ட விஷயங்களை சாத்தியமாக்கி இருக்கிறோம். ஊழல்வாதிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில்,
"10 ஆண்டு ஆட்சி ட்ரெயிலர் என்கிறார். போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?
வெற்று கதைகளை பேசுவதற்கு பதிலாக கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டேன் என்று சொல்வாரா மோடி?
20 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினேன் என்று சொல்வாரா மோடி?
நாட்டிலேயே அமித்ஷாவின் உள் துறை தான் ஊழல் மிக்க துறை, இதை வைத்துக்கொண்டு ஊழலை ஒழித்து விட்டேன் என்று சொல்வாரா மோடி?
இந்திய மக்கள் ட்ரெயிலரையும், ப்ரிவ்யூ ஷோவையும் எதிர்பார்க்கவில்லை. வளர்ச்சிக்கான ஆட்சியை தான் எதிர்பார்த்தனர். ஆனால் அதை உங்களால் தரமுடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து தளங்களிலும் இந்தியா தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. ஊழல் தலைவிரித்தாடும் இந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
- டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி அறிவிப்பு.
- தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
அந்த வகையில், "நாட்டில் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி இன்று ஊடக பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக கணக்குகளில் தங்கள் சுயவிவரப் படத்தை மாற்றுவார்கள்.
சுயவிவரப் படத்தில், "மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்" என்ற தலைப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்று உள்ளது.
நாட்டிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக்கூடிய ஒரே தலைவர் கெஜ்ரிவால் மட்டுமே. எனவே, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
கலால் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய போதிலும் "ஒரு பைசா" ஆதாரத்தை கூட சமர்ப்பிக்க முடியவில்லை.
பாஜகவும் மோடியும் கெஜ்ரிவாலை நசுக்க விரும்புகின்றனர். ஆம் ஆத்மி, நாட்டில் "சர்வாதிகாரத்திற்கு" எதிரான போரை நடத்தி வருகிறது.
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவது கெஜ்ரிவாலின் போராட்டம் மட்டுமல்ல, கட்சியின் சமூக ஊடக டிபி பிரச்சாரத்தில் சேரவும் மக்களை அவர் வலியுறுத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
- 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?
விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி ட்வீட்
மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என ராகுல்காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக மாலிக் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4 தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும்.
- எதிர்க்கட்சிகளில் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார்.
பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-
குடியரசுத் தலைவரின் உரை மாபெரும் உண்மைகளை சொல்லியது.
நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை குடியரசுத் தலைவர் உரை வெளிப்படுத்தி உள்ளது.
4 தூண்கள் பற்றி குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 4 தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும். பெண்கள், இளைஞர்கள், ஏழை எளியோர்கள், உழவர்கள் சக்தியே அந்த 4 தூண்கள்.
நாட்டின் பல்வேறு வளர்ச்சியை பற்றி பேசிய குடியரசுத் தலைவர் பொருளாதார வளர்ச்சியையும் குறிப்பிட்டார்.
இந்தியா விடுதலை பெற்றபோது அதற்கு சாட்சியாக விளங்கிய இந்த செங்கோல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
10 ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது போல தற்போது பல ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளீர்கள். பாராளுமன்றத்தில் இருக்கவே எதிர்க்கட்சிகள் தயங்குகின்றனர்.
எதிர்க்கட்சிகளில் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர்.
புதிய பாராளுமன்ற நடைமுறைகளுக்கு செங்கோல் முன்நின்று வழிகாட்டுகிறது.
மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம்.
காங்கிரசுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களும் மேலே வரவில்லை, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள நல்ல தலைவர்களையும் மேலே வரவிடவில்லை.
இளம் எம்பிக்களின் குரலையும் காங்கிரஸ் முடக்குகிறது. இன்னும் எவ்வளவு காலம் தான் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள்?
நாடு எவ்வளவு குடும்ப அரசியலை பார்த்து உள்ளதோ அதில் பெரும் பங்கு காங்கிரசை சாரும்.
எதிர்க்கட்சிகளை திறம்பட வழிநடத்த காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. இந்த அவையில் உள்ள பல உறுப்பினர்கள் அடுத்த முறை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உத்தேசித்து உள்ளனர்.
மல்லிகார்ஜூன கார்கே மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாறிவிட்டார். குலாம் நபி ஆசாத் கட்சியே மாறிவிட்டார்.
ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் கட்சியின் எல்லா பதவிகளிலும் இருப்பதே குடும்ப அரசியல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பியாக ஆவதை நான் வரவேற்கிறேன்.
வாரிசு மற்றும் குடும்ப அரசியல் காரணமாக தேசம் ஏராளமான துயரங்களை அனுபவித்துள்ளது.
ஒரு குடும்பத்தின் அரசியல் தற்போது காணாமல் போய்விட்டது. மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை காங்கிரஸ் ரத்து செய் என்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
- வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும்.
பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பரம்பரை அரசியலுக்கு சவால் விட்டதாகவும், இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, 'முதலில் தேசம்' என்ற சித்தாந்தத்திற்குக் கிடைத்த மரியாதை" என்று கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
எல்.கே. அத்வானி ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பிடியில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடினார். அனைவருக்கும் வழிகாட்டினார். அவர் பரம்பரை அரசியலை சவால் செய்தார். இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டின் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும். மோடியின் உத்தரவாதம் எல்லா நம்பிக்கைகளும் சரியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை.
- பாஜகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என அசோக் கெலாட் விமர்சனம்
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் தகுதிவாய்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை வழங்குவதற்காக 'பணவீக்க நிவாரண முகாம்கள்' நடத்தப்படுகின்றன. மக்களுக்கு நிவாரணம் வழங்க, 10 மக்கள் நலத் திட்டங்களில் ஏழை, எளிய மக்களை இணைக்கவும், உடனடி பலன்களை வழங்கவும் இந்த முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை முதல்வர் அசோக் கெலாட் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.
அவ்வகையில் இன்று ஹனுமன்கர் மாவட்டம் ரவாஸ்தர் நகரில் உள்ள முகாமை பார்வையிட்ட முதல்வர் கெலாட், அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:-
பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் எதையாவது சொல்கிறார், ஆனால் அது ஒருபோதும் நடப்பதில்லை. நாங்கள் இருவரும் முதலமைச்சராக இருந்தபோது, நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் (மோடி) கூறினார். இப்போது நீங்கள் (மோடி) இரண்டு முறை நாட்டின் பிரதமராகிவிட்டீர்கள். ஏன் சட்டம் இயற்றப்படவில்லை?
மோடியின் ஆட்சியில் விமர்சிப்பவர் துரோகி. விமர்சித்தால் சிறைக்கு செல்வீர்கள். அவர்கள் (பாஜக-வினர்) நாட்டில் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை.
நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. வாழ்வின் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. சோனியா காந்தி என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். நான் மூன்று முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளேன். மத்தியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். என் மூச்சு இருக்கும்வரை நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை அவர்கள் பிரிக்கிறார்கள்.
- அனைவரும் ஒன்று கூடி அரசியலமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.
மும்பை:
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது:
இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பிராமண சமூகத்தினருக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். நாம் ஒன்று கூடி நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் அரசியல் சாசனத்தை அழிக்கிறார்கள், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள். நாங்கள் உங்கள் ஆதரவை விரும்புகிறோம், நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்றால் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கும்.
ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் வெறுப்புச் சூழலுக்கு எதிராக போராடும் முயற்சியாகும். கொரோனா காரணமாக பாத யாத்திரை செல்ல கூடாது என்று அவர்கள் (பாஜக) ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ஆனால் பிரதமர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மத்தியில் ஆளும் அரசு பொய்யர்களின் அரசாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.