என் மலர்
நீங்கள் தேடியது "பங்கேற்பு"
- மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .
- துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .
125 அடியில் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் படுகளம் அருகே நாடக கலைஞர்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை காண கீழ்பாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு துரியோதனன் படுகளத்தை கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.
- சட்டப்பணிகள் தனிக்குழு கூட்டம் நடந்தது.
- அந்தந்த துறை களின் சார்பில் மேற் கொள்ளப் பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்ட அளவிலான தனிக்குழு கூட்டம் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அந்தந்த துறை களின் சார்பில் மேற் கொள்ளப் பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த மாதம் குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவில் காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தை கள் உள்பட 62 பேர் கண்டறியப்பட்டு, உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. மாவட்ட சமூகநல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெண்கள் குடும்ப வன்மு றை குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 குடும்ப பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டது.
அதுபோல் மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு உறுப்பி னர்கள் குழந்தை தொழி லாளர்கள் கொத்தடிமை கள் குறித்து தொழிற் சாலைகள், வணிக நிறுவ னங்கள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் கண்ட றியப் பட்டு அவர்களை பள்ளி சேர்த்து தொடர்ந்து படிக்க செய்தல் போன்ற பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப் பட்டது.
- பள்ளி நடைபாதை தளம் திறக்கப்பட்டது.
- அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி-மதுரை ரோட்டில் உள்ள டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியின் நுழைவு வாயில் முதல் வகுப்பறை வரை தனது சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நடைபாதைத்தளம் பி. அய்யப்பன் எம்.எல்.ஏ. அமைத்துக்கொடுத்தார். அதன் திறப்பு விழாவில் பள்ளி நிர்வாகி ப. கேசவன் தலைமையில் தலைமையாசிரியர் ஆக்னஸ் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
வார்டு உறுப்பினர் சந்திரன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி எஸ்.பி.பிரபு நகர செயலாளர் சசிகுமார் ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அழகுமாரி தொகுதி செயலாளர் ராஜா வில்லாணி பாண்டி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.
- மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அமைச்சர்கள்-கலெக்டர் பங்கேற்கின்றனர்.
- மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக சென்னையிலும் தி.மு.க. அரசு சிலை நிறுவி பெருமைபடுத்தியது என்றார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் 222-வது நினைவுநாள் இன்று 24-ந் தேதி கடைப்பிடிக்கபடுகிறது. இதையொட்டி மருது பாண்டியர் வாரிசுதாரர்கள் நினைவு மண்டபத்தின் முன்புறத்தில் சர்க்கரை பொங்கல் வைத்தனர். பின்னர் மருதுபாண்டியர் சிலை முன்பு படையல் இட்டு வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வாரிசு தாரர் ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நினைவு மணி மண்டபம் பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் கொடியேற்றி வைத்து அரசு விழாவை தொடங்கி வைத்தார்.
நினைவு மண்டபம், நினைவிட தூண் பகுதியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்புகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் பாதுகாப்பு பணியில் சுமார் 1400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு அவர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவு தூண்களில் தமிழக அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ்.ராஜாகண்ணப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகை யில், அண்ணா முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சுதந்திர போராட் டத்திற்கு பாடுபட்ட தலைவர்களை யும், தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக பாடு பட்டவர்களின் புகழைப் பரப்புவதில் தி.மு.க. முதல்- அமைச்சர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. மருது சகோத ரர்களின் வீர வரலாற்றை கருணாநிதி அறிந்து அவர்க ளுக்கு சிலை வைத்து நினைவுமண்டபம் கட்டி னார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தி.மு.க. அரசு மூடி மறைப்ப தாக சிலர் நேற்று கூட திருச்சியில் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு வரலாறு தெரியாமல் அவதூறாக பொறுப் பற்றதனமாக யாரோ எழுதிக் கொடுத்ததை பேசியுள்ளார். மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக சென்னையிலும் தி.மு.க. அரசு சிலை நிறுவி பெருமைபடுத்தியது என்றார்.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
- முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பங்கேற்றார்.
மதுரை
அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அ.தி.மு.க. நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஓ.பி.எஸ்.அணி மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கண்ணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட துணைச் செய லாளர் சுசிலா பாண்டி, லதாபாண்டி, தொகுதி செயலாளர் ரகுராமன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், ஐ.டி.விங் திருப்பதி, பகுதி, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 3 நாட்கள் நடந்த மஞ்சுவிரட்டில் 99 காளைகள் பங்கேற்றன.
- மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினர்.
சிவகங்கை
சிவகங்கை காமராஜர் காலனியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் கே.டி.ஆர். கல்யாணி அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்காகவும் வடமாடு மஞ்சுவிரட்டு பேரவை மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை இனைந்து நடத்தும் 3 நாள் தொடர் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
வீரத்தமிழர் வடமாடு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன், மாநில கவுரவ தலைவர் கே.டி.ஆர். தங்க ராஜ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர் அதிகரை வேங்கை, திருப்புவனம் தமிழ்ச் சங்க வழக்கறிஞர், துணை பொதுச்செயலாளர் செல்வம், பொருளாளர் மயில்வாகனம், மாநில கவுரவ ஆலோசகர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சிவ கங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 99 காளைகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினார்.
இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, பீரோ, கட்டில், சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஆயிரக்க ணக்கான பொது மக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
- மதுரை மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வா கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அலங்காநல்லூர்
மதுரை மேற்கு (தெற்கு) ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் 2024 நாடாளு மன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வா கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், சதன் பிரபாகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம்குமார், ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிறுவாலை, அம்பலதாடி, விட்டங்குலம் உள்ளிட்ட பல கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
- ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
- இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ள பிரான்மலை சேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனம் பூசும் விழா மிகவும் பிரசித்தி பெற்ற தாகும்.
பிரான்மலையில் 2500 அடி உச்சியில் அமைந் துள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லா அவர்களின் அடக்கஸ்தலம் மற்றும் பிரான்மலை அடி வாரத்தில் உள்ள தோப்பு தர்காவிலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த வர்களும் நேர்த்திக் கடன் வைத்து தங்கள் பிரார்த்த னைகளை கந்தூரி எனப்படும் சமபந்தி விருந்து அளித்து நிறைவேற்றுவது வழக்கம்.
இந்த தர்ஹாவில் ஆண்டு தோறும் (ரயியுல் அவ்வல் பிறையில்) சந்தனம் பூசும் விழாவிற்காக கொடி யேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா விற்காக மலையடிவாரத்தில் துவா ஓதப்பட்டு கொடி யேற்றம் நடைபெற்றது.
முன்னதாக 2500 அடி உயரத்தில் உள்ள பிரான் மலை உச்சியில் உள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்காவிலும் கொடியேற்றம் நடைபெற்றது.
வருகிற 6-ந் தேதி சந்தனம் பூசும் விழா நடக்கிறது. அன்று இரவு பிரான்மலை 5 ஊர் கிராமத் தார்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் சுற்று வட்டார பெரியோர்கள் முன்னிலையில் சந்தனக் குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 2500 அடி உயரமும் 7 மைல் தூரமுள்ள மலை உச்சியை சென்ற டைந்து 7-ந் தேதி அதிகாலை மலைமீது உள்ள தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனம் பூசும் விழா நடைபெற உள்ளது. இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.
- அங்கக கழிவுகளை நன்றாக மக்க செய்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன.
- குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
திருப்பூர்:
அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பதே ஆகும். அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்க செய்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன.
நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
வேளாண்மைத்துறை மூலம் நடப்பாண்டில், அங்கக வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில்நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் https://www.tnagrisnet.tn.gov.in பதிவுக்கட்டணம்ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
பங்கேற்பதற்கான தகுதிகள்:குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மதிப்பீட்டுக்குழு:-
மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக்குழு மற்றும் மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். பரிசுத் தொகை:-வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில்ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சரால் குடியரசுதினத்தன்று வழங்கப்படும்.
முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10,000மதிப்புடைய பதக்கம், இரண்டாம்பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7,000மதிப்புடைய பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்புடைய பதக்கம். மேலும், நம்மாழ்வார் விருதுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைஅணுகி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- பீக் ஹவா்ஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 25-ந்தேதி உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடைபெறும்
- 430 சதவீதம் உயா்த்திய நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்
திருப்பூர்,செப்.23-
பீக் ஹவா்ஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் உற்பத்தி நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்க சைமா வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அச்சங்கத்தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
தமிழ்நாடு தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் பீக் ஹவா்ஸ் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். 430 சதவீதம் உயா்த்திய நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயா்வை தவிா்க்க கோரி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திருப்பூரில் 25 -ந் தேதி உற்பத்தி நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று சைமா சங்க உறுப்பினா்கள் அனைவரும் ஒருநாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் மேயர், யூனியன் தலைவர்கள் பங்கேற்றனர்.
- 5 கி.மீ. பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகரில் 'உடல்நலம் பேணுவோம், விருதுநகர் நலம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் இன்று காலை நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன் உள்பட நகர் மன்ற தலைவர்கள், ஊராட்சி யூனியன் தலை வர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர், பெண்கள், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் 3 பிரிவுகளாக போட்டி நடந்தது. மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், ஆயுதப்படை மைதானம் வரை சென்று மீண்டும் மருத்துவ கல்லூரி வளாகத்தை வந்தடையும் வகையில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான போட்டியில் வெம்பக் கோட்டை ஊராட்சி உறுப் பினர் முத்துமாரியப்பன் முதல் பரிசும், இடையன் குளம் பாலமுருகன், சிவ ஞானபுரம் ராமச்சந்திரன் ஆகியோர் முதல் 3 பரிசு களை வென்றனர்.
பெண்கள் பிரிவில் இடையன்குளம் பஞ்ச வர்ணம், அத்திகுளம் முனீஸ்வரி, போல்வாரி பட்டி பஞ்சாயத்து தலைவர் பூரணம் ஆகியோர் முதல் 3 பரிசுகளை வென்றனர்.
40 வயதுக்கு மேற்பட் டோர் பிரிவில் சிந்துவம் பட்டி கடற்கரை கொம்பு சின்னம்பட்டி இறையன், நென்மேனி வெற்றிவேல் முதல் 3 இடங்களில் வந்தனர்.
10 கி.மீ பிரிவில் வென்ற வர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 5 கி.மீ. பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
- மருது எஸ்ஸார் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
- அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி ஐடா ஸ்கட்டர் திருமண மண்ட பத்தில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. முக்கிய பிரமுகர் தெய்வத்திரு
பி. நல்ல மருது - மாரீஸ்வரி தம்பதியின் மகன் சூரிய வர்மாவுக்கும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மதுரை மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்து-சித்ரா தம்பதியின் மகள் அபர்ணாவுக்கும் நாளை 13-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்துகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி, வில்லா புரம் பகுதி செயலாளர் கவுன்சிலர் போஸ் முத்தையா, அவனியாபுரம் பகுதி தி.மு.க. செயலாளர் ஈஸ்வரன், பகுதி துணை செயலாளர் பிரபாகர், 84- வது வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிர மணியம், வட்ட துணைச் செயலாளர் வக்கீல் விஜயன் ஆகியோர் செய்து வருகின்ற னர்.