search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அமைச்சர்கள்-கலெக்டர் பங்கேற்பு

    • மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அமைச்சர்கள்-கலெக்டர் பங்கேற்கின்றனர்.
    • மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக சென்னையிலும் தி.மு.க. அரசு சிலை நிறுவி பெருமைபடுத்தியது என்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் 222-வது நினைவுநாள் இன்று 24-ந் தேதி கடைப்பிடிக்கபடுகிறது. இதையொட்டி மருது பாண்டியர் வாரிசுதாரர்கள் நினைவு மண்டபத்தின் முன்புறத்தில் சர்க்கரை பொங்கல் வைத்தனர். பின்னர் மருதுபாண்டியர் சிலை முன்பு படையல் இட்டு வழிபாடு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வாரிசு தாரர் ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நினைவு மணி மண்டபம் பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் கொடியேற்றி வைத்து அரசு விழாவை தொடங்கி வைத்தார்.

    நினைவு மண்டபம், நினைவிட தூண் பகுதியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்புகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் பாதுகாப்பு பணியில் சுமார் 1400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு அவர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவு தூண்களில் தமிழக அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ்.ராஜாகண்ணப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகை யில், அண்ணா முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சுதந்திர போராட் டத்திற்கு பாடுபட்ட தலைவர்களை யும், தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக பாடு பட்டவர்களின் புகழைப் பரப்புவதில் தி.மு.க. முதல்- அமைச்சர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. மருது சகோத ரர்களின் வீர வரலாற்றை கருணாநிதி அறிந்து அவர்க ளுக்கு சிலை வைத்து நினைவுமண்டபம் கட்டி னார்.

    சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தி.மு.க. அரசு மூடி மறைப்ப தாக சிலர் நேற்று கூட திருச்சியில் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு வரலாறு தெரியாமல் அவதூறாக பொறுப் பற்றதனமாக யாரோ எழுதிக் கொடுத்ததை பேசியுள்ளார். மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக சென்னையிலும் தி.மு.க. அரசு சிலை நிறுவி பெருமைபடுத்தியது என்றார்.

    Next Story
    ×