என் மலர்
நீங்கள் தேடியது "படகுகள்"
- கொள்ளிடத்தில் 107 மி. மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
- பூம்புகார் பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
சீர்காழி:
வடகிழக்கு பருவமழை மூன்றாவது சுற்று தொடங்கியுள்ள நிலையில், கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி மயிலாடு துறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெ ண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் லேசான வெயிலும் விட்டு,விட்டு சாரல் மழையும் பெய்து வந்த நிலையில், இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் சீர்காழி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் இருந்ததால் மின்தடை ஏற்பட்டது. மழை விட்டு பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சீரமைத்து ஒவ்வொரு பகுதியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது நள்ளிரவு வரை பரவலாக இடி மின்னலுடன் மழை தொடர்ந்து பெய்தது. இன்று காலை வரை சீர்காழியில் 67 மில்லி மீட்டரும், கொள்ளிடத்தில் 107 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக 312 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கனமழை காரணமாக நேற்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர். ராஜேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதனால் பழையாறு திருமுலைவாசல் பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
- சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
கிள்ளியூர் :
புதுக்கடை அருகே உள்ள இனயம் கடற்கரை பகுதி இனியா நகரில் படகுகள் உருவாக்கும் கம்பெனி உள்ளது. இதை சிதறால் பகுதியை சேர்ந்த ராபர்ட் (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23-ந்தேதி இரவு பணி முடிந்து கம்பெனியை மூடிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை மறுபடியும் வந்து பார்த்தபோது, கம்பெனியின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
கம்பெனியின் உள்ளே சென்று பார்த்தபோது, படகு தயாரிக்க பயன்படுத்தும் கட்டர், மெஷின், சுவிட்ச் போர்டு, வயர் உட்பட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக புதுக்கடை போலீசில் ராபர்ட் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் திருட்டில் ஈடுபட்டவர் கண்டன்விளை பகுதி சித்தன் தோப்பை சேர்ந்த ஜெஸ்டின் ஆன்றோ (36) என்பது தெரியவந்தது. இவர் தற்போது இனயம் மாதா காலனியில் வசித்து வருகிறார். மேலும் இனயம் புத்தன்துறை ஊராட்சியில் ஒப்பந்த முறையில் குப்பை அள்ளும் பணி செய்து வருகிறார் எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை பகுதி கடலோர கிராமங்களில் உள்ள மேலும் பல படகு தயாரிப்பு கம்பெனிகளில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே புதுக்கடை போலீசில் புகார் உள்ளது. அந்த திருட்டு சம்பவங்களிலும் ஜெஸ்டின் ஆன்றோ சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
- இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தங்களுடைய படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்து சரி செய்யும் பணிகள் மற்றும் வண்ணம் தீட்டுவது போன்ற பணி களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று நீரோடி முதல் ராஜாக்கமங்க லம் வரை உள்ள மீனவ கிராமங்களில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இந்த ஆய்வில் மீனவருடைய படகுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா, கட லுக்கு செல்லக்கூடிய அளவுக்கு தரமான முறையில் படகு உள்ளதா, காப்பீடு செய்யப்பட்டுள்ளதா இது போன்ற எல்லா விதமான ஆவணங்களை சரிசெய் பார்த்து அவர்கள் அதற்கான ஒப்புதல் செய்கின்றனர்.
இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ள படங்களுக்கு மட்டும் தான் 100 லிட்டர் மண்எண்ணை மானியத்தில் வழங்கப்படு கிறது. கடலுக்கு சென்ற பிறகு ஏதாவது நேரிட்டால் அவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்குவது போன்றவற்றிற்கு இது ஒரு முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
- விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம்.
- படகுகளின் தரம், உறுதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்தனர்.
பேராவூரணி:
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டு தோறும் நடைமுறைப்படு த்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய மொத்தம் 61 நாட்களுக்கு, பாரம்பரிய மீன்பிடி கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம்.
இந்த தடை காலத்தில் அனைத்து விசைப்படகு களும் கடலில் இருந்து கரைக்கு ஏற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
மீன்வளத்துறை உதவி இயக்குநர், தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் படகுகள் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவர்.
சேதுபாவாசத்திரம், மல்லி ப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் 148 விசைப்பட குகளையும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணி கண்டன், கூடுதல் இயக்குநர் கொளஞ்சிநாதன், ஆய்வாளர் கெங்கேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்து அனைத்து படகுகளும் தகுதியானது என சான்றிதழ் வழங்கினர்.
- 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வங்க கடல் பகுதியில் புதிய மோக்கா புயல் உருவாக இருப்பதால் கடலில் பலத்த காற்ற வீசகூடும் என்பதால் மறு அறிவிப்பு வருவரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் , வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
கடலுக்கு செல்லாததால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்து உள்ளனர்.
- 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு வருடந்தோறும் அறிவித்து அதற்கான உத்தரவுகளை வெளியிட்டது.
- மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்,
கடலூர்:
கடலூர்கடலில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்க வேண்டி ஏப்ரல் 15 -ந்தேதி முதல் ஜூன் 14 -ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு வருடந்தோறும் அறிவித்து அதற்கான உத்தரவுகளை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று அகாலை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர. இதற்கிடையே நேற்று நள்ளிரவு வந்த மீனவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் மீன்களை வாங்குவதற்கு திரண்டு வந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில்
மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கும் பணிகளிலும், வர்ணம் பூசும் பணிகளிலும், தங்களிடம் உள்ள மீன் பிடிக்கும் வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர் . இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தடையை மீறி மீன் பிடிக்க செல்லாமல் இருக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 2023 -ம் ஆண்டு மீன்பிடி தடைகாலத்தில் தமிழக கடலோர பகுதிகளிலுள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடி துறைமுகம் , தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்லாமல் இருக்க வேண்டும். இத்தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மீனவர் சங்கங்கள், கிராமங்கள் பொறுப்பேற்க நேரிடும். அவ்வாறு தவறும் படகுகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீனவளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக கடலூர் துறைமுகம் மற்றும் கடற்கரை ஓரமாக பெரும்பாலான படகுகள் ஓய்வெடுப்பதை காண முடிந்தது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது.
- படகுகள் கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகிறது.
ராமநாதபுரம்
தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை ஆகிய கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மாதங்களில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தடை விதித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று 14-ந் தேதி நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் மாதம் 14-ந் தேதி வரை இந்த தடை நீடிக்கும். மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகுகள் இழுவை படகுகள் ஆகியவை துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூர மிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும்.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள 2 மாதங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைப்பது, வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். பெரும்பாலான மீனவர்கள் குடும்ப சூழல் கருதி மாற்று வேலைகளுக்கும் செல்வது உண்டு.
மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன் கடலோரப் பகுதியில் நேற்று மீன் பிடிக்க சென்று கரைக்குத் திரும்பிய ஏறத்தாழ 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை மீனவர்கள் துறைமுக கடலில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து மீன்பிடி படகுகளில் பயன்படுத்தி வந்த மீன்பிடி சாதனங்களை இறக்கி பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் என ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவைப்படகு மீனவர்கள் மேற்படி மீன்பிடி கலன்களை உபயோ கப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன் பொருட்டு 61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது
- ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி பார்வையிட்டனர்
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்கு வரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதிகை படகு சின்னமுட்டம் துறை முகத்தில் கரையேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் விவேகானந்தா, குகன் ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வந்தனர்.
ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையை யொட்டி கடந்த 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர் விடுமுறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை 22 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
இதில் புனித வெள்ளியான 7-ந்தேதி அன்று 6 ஆயிரத்து 800 பேரும், 8-ந்தேதி அன்று 7 ஆயிரத்து 800 பேரும், ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று 8 ஆயிரத்து 100 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
- 3000 பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த 30-ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை நாகூர், பட்டினச்சேரி நம்பியார்நகர், செருதூர் காமேஷ்வரம். விழுந்த மாவடி ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள் 3000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு கடல் சீற்றம் குறைந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க மீன்வளத் துறையினர் அனுமதித்துள்னர்.
மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3000 பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.
- சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது.
- 3000 பைபர் படகுகள் 4-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது.
இதனால் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது மேலும் நேற்று நாகை துறைமுகத்தில்புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றுடன் கூடிய மழை உள்ள வானிலை பகுதி உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகை மாவட்டத்திலுள்ள நாகூர், அக்கரைப்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், கோடியக்கரை உள்ளிட்ட 25கடலோர மீனவ கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது.
சுமார் 10அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது ஏற்கனவே மீனவர்களுக்கு கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 4வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- கடந்த 7-ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது.
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி காற்றழு த்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த. இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதையடுத்து மீன்வளத்துறை சார்பில் நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடல் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் புயல் சின்னம் வழுவிழந்ததை தொடர்ந்து15 நாட்களுக்குப் பிறகு நேற்று மீன்வளத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடி க்க செல்லலாம் என்று அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து இன்று அதிகாலைமுதல் நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள 700 விசைப்ப டகுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பி டிக்க செல்லும் மீனவர்கள் அதிக அளவு மீன் கிடைக்கும் என நம்பிக்கையில் சென்று ள்ளனர்.இதை போன்று வேதார ண்யம் தாலுகாவை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க பிடிக்க சென்றுள்ளனர்.
- நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது,
- இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை கடற்கரை வெறிச்சோை காணப்படுகிறது.
வேதாரண்யம்:
கோடியக்கரையில் கடல் சீற்றம் கடந்த 5 நாட்களாக 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடத்திற்குகொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுகளை காரணமாக நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இந்தநிலையில் இன்று வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.கடல் சீற்றத்தால் கடற்கரை யில் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மீனவர்கள் படகுகளை இழுவை டிராக்டர் மூலம் படகுகளை மேடான பகுதிகளுக்கு அவசரம் அவசரமாக கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்மற்றும் கடற்கரை ஓரத்தில் மீன்பிடி வலைகள் அடுக்கப்ப ட்டுள்ள நிலையில் தண்ணீர் சூழ்ந்ததால் மீன்பிடிவலைகளையும் வாகனம் மூலம் பாதுகா ப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
புயல் எச்சரிக்கை கார ணமாக மீன்வளத்துறை எச்சரிக்கை அடுத்து கோடிய க்கரை, ஆறுகா ட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணின்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத்தால் கடற்கரை பகுதி வெளிச்சோடி காணப்படுகிறது.