search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை"

    • மருத்துவமனையில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.
    • 'ஆண்ட்ராய்டு போபியோ' பழனிசாமியை ஆட்டிப் படைக்கிறது

    அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    மின்வெட்டு காலங்களில் அரசு மருத்துவமனைகள் முடங்காமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளோ, எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்க போதிய மறுத்துவர்களோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதள பாதாளத்தில் தள்ளியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    விடியா திமுக ஆட்சியில் முதல்வரோ, மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது குறித்த எந்த அக்கறையும் இன்றி கூட்டணி கட்சி கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்; அமைச்சரோ தனக்கொரு துறை இருப்பதையே மறந்துவிட்டு வாரிசுக்கு பிறந்தநாள் விழா எடுப்பதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார்.

    மக்கள் பற்றிய சிந்தனையே இல்லாத விடியா திமுக ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு, தங்கள் துறைசார் பணிகளை இனியாவது கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.

    அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததை தன்னுடைய விளம்பரத்திற்காக எதிர்க் கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்.

    எக்ஸ் தளத்தில் எழுத எதுவும் கிடைக்காதா? எனத் தினமும் ஏங்கும் 'ஆண்ட்ராய்டு போபியோ' வந்து பழனிசாமியை ஆட்டிப் படைக்கிறது போல. எந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகள் செயல்பட ஜெனரேட்டர் உட்பட எல்லா முன்னேற்பாடுகளுடன்தான் அரசு மருத்துவமனைகள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    காலி பணியிடங்கள் ஏற்படும் போதெல்லாம் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். வரும் ஜனவரி 5-ம் தேதி கூட 2,553 டாக்டர்கள் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது.

    கூட்டணிக் கட்சிகள் யாராவது வர மாட்டார்களா? என அல்லாடும் பழனிசாமிக்குக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்றால் அடி வயிறு எரியத்தானே செய்யும். துணை முதல்வர் பிறந்தநாள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்த முடிவு செய்திருந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அதனை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தினோம். அந்த நிவாரண உதவி நிகழ்ச்சியையும் கேலி செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை எள்ளி நகையாடுகிறார் எதிர்க் கட்சித் தலைவர்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

    • விவசாயிகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.
    • இந்த மருத்துவமனைக்கு நடிகர் கார்த்தி சென்று வந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தி. தொடர்ச்சியாக வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வரும் கார்த்தி பல்வேறு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். மேலும் விவசாயிகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.

    சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஜீவன் அறக்கட்டளை நடத்தும் மயோபதி மருத்துவமனையின் குழந்தைகளின் அவசர தேவையை அறிந்து படுக்கை வசதிகளை நடிகர் கார்த்தி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். கொம்பன் திரைப்பட படப்பிடிப்பு சமயங்கள் மற்றும் பல முறை இந்த மருத்துவமனைக்கு நடிகர் கார்த்தி சென்று வந்துள்ளார்.

     


    அப்படியாக மருத்துவமனை குழந்தைகளுக்கு தேவை என்ற தகவல் கிடைத்ததும், நடிகர் கார்த்தி குழந்தைகள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 35 படுக்கைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதற்கு மயோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல் மற்றும் குழந்தைகள் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜேஎன் ரே மருத்துவமனை வங்காள தேச நோயாளிகளுக்கு இனி சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
    • கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் இதை செயல்படுத்த வேண்டும்

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்துக்களைப் போராடத் தூண்டியதாகவும் பேரணியில் வங்கதேச கொடியை அவமதித்ததாகவும் இஸ்கான் இந்துமதத் தலைவர் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரித்தது.

    இந்நிலையில் வங்கதேச மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படாது என்று மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் மருத்துவமனை அறிவித்துள்ளது. வடக்கு கொல்கத்தாவின் மானிக்தலா பகுதியில் உள்ள ஜேஎன் ரே மருத்துவமனை வங்காள தேச நோயாளிகளுக்கு இனி சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

     

    இந்த முடிவு குறித்துப் பேசிய மருத்துவமனையைச் சேர்ந்த அதிகாரி சுப்ரான்ஷு பக்த், நமது தேசியக்கொடி அவமதிக்கப்படுவதைப் பார்த்து, வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அவர்களின் சுதந்திரத்தில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது.

    ஆனால், அங்கு இந்தியாவுக்கு எதிரான மனநிலையையே பார்க்க முடிகிறது. எனவே கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் எங்களுக்கு ஆதரவளித்து வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

    • ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
    • வடக்கு முனையில் உள்ள மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டது

    பாலஸ்தீன நகரமான காசாவின் மருத்துவமனை, குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீது இஸ்ரேல் கடந்த 48 மணி நேரத்தில் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுள் காசாவின் ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் மத்திய காசா மற்றும் தெற்கு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏனையோர் பலியாகினர்.

    மேலும் வடக்கு முனையில் உள்ள மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டது. இதில் மருத்துவ ஊழியர்கள் படுகாயமடைந்ததோடு முக்கிய மருத்துவ உபகரணங்களும் சேதமடைந்தது. வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதி ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

     

    இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் 117 பேரை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த திடீர் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் [சுமார் 30,000 பேர்] பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

    • அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்தனர்
    • மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    குஜராத் மாநிலத்தில் மருத்துவக்கல்லூரியில் சீனியர்களின் ராகிங் கொடுமையால் 18 வயது மாணவன் பரிதமபாக உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள தர்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்துள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள் சிலர் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து, அவர்கள் அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது 18 வயதான அணில் மெதானியா என்ற மாணவர், திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை சக மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடதுக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவனின் மரணத்துக்கு உரிய நீதி  கிடைக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியறுதியள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்ககள் தெரிவித்தனர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவமனையில் இறந்து போன ஒருவரின் இடதுபக்க கண் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நவம்பர் 14 அன்று பன்டூஷ் என்ற நபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 15 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு அவர் உயிரிழந்தார்.

    இதனையடுத்து நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது இடது கண் காணாமல் போனதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை பிளேடு ஒன்று சடலத்துக்கு அருகில் இருந்ததாக உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

    உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி, பன்டூஷ் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.

    இது தொடர்பாக பேசிய நாளந்தா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் வினோத் குமார், "இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யாராவது அவர் கண்ணை வெளியே எடுத்திருப்பார்களோ அல்லது எலி கண்ணை கடித்ததா என்ற 2 கோணத்தில் விசாரித்து வருகிறோம். இது இரண்டில் எது நடந்திருந்தாலும் அது தவறு தான். விசாரணைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.
    • நாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார்

    சினிமாக்களில் வருவதுபோல் வியட்நாமில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தந்தை ஒருவருக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் மகள் இருந்துள்ளார். தனது மகள் வளர வளர அவள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் போலும் இல்லாமல் மிகவும் அழகாக இருந்ததால் அவள் உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.

    எனவே மகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். இதில் அவள் தனது மகள் இல்லை என்று அவருக்கு தெரியவந்தது. இதற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை தனது மனைவியிடம் குழந்தைப்பேறு இல்லாதவள் என்று கூறி தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

    ஆனால் தான் குழந்தை பெற்றதாக சிறுமியின் தாய் உறுதியாக இருந்துள்ளார். சண்டை முற்றிய நிலையில் தனது கணவனை பிரிந்து மகளை அழைத்துக்கொண்டுநாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார். அங்கு மகளை புதிய பள்ளியில் சேர்த்தார்.

    இந்நிலையில் பள்ளியில் மகளின் பிறந்தநாள் விழாவில் அதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அவளது தோழியான லான் என்ற சிறுமியை தாய் பார்த்துள்ளார். லான் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருப்பதை இந்த தாய் உணர்ந்துள்ளார். எனவே மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் அனைத்திற்கும் விடை கிடைத்துள்ளது.

     

    டிஎன்ஏ பரிசோதனையில் லான் - தான் இவரின் மகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு சிறுமிகளுக்கும் ஒரே மருத்துவமனையில் பிரசவம் ஆகியுள்ளது . மருத்துவமனையில் வைத்து இரண்டு பெண் குழந்தைகளும் இடம் மாறி இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராஜ் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மருத்துவமனைக்கு ஷோ - காஸ் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் தரம் சிங் மராவி என்பவரின் குடும்பத்தினருக்கும் இன்னொரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதன் காரணமாக அக்டோபர் 31 அன்று 25 பேர் கொண்ட மர்ம நபர்கள் தரம் சிங் மராவி (65) மற்றும் அவரது 2 மகன்களையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தரம் சிங்கும் அவரது மகன் ரகுராஜும் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராஜ் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியான சிவராஜின் மனைவி, மருத்துவமனை படுக்கையில் உயிரிழந்த சிவராஜின் ரத்த கறையை துடைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ வைரலானதை அடுத்து மருத்துவமனைக்கு ஷோ - காஸ் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து பேசிய மருத்துவர் சந்திரசேகர், "ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் ரோஷனி இரத்தத்தில் நனைந்த துணிகளை சேகரித்தார் எனவும் படுக்கையை சுத்தம் செய்யும்படி நாங்கள் அவரிடம் அறிவுறுத்தவில்லை என்று தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை பதிவு.
    • யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம்.

    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

    இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

    ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனை மீது தடை இருந்தாலும், ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
    • மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு இர்பான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும்போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்பான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.

    பாலினத்தை அறிவித்தது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதனையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தொப்புள் கொடி வீடியோவை தனது யூட்யூபில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார்.

    இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன்பு வரை சுமார் 16 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக் கொண்டிருந்தவரை பார்த்து டாக்டர்கள் திகைத்தனர்.
    • வினோத காட்சியை மக்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

    பீகார் மாநிலம் பாகல்பூரை சேர்ந்த நபரை உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்று கடித்தது. பாம்பு கடிப்பட்ட நபர் அடுத்து செய்த விஷயத்தை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

    பிரகாஷ் மண்டல் என்ற நபர், தன்னை கடித்த விஷ பாம்பின் வாயை பிடித்து, கழுத்தில் சுற்றிக் கொண்டு நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றார். பாம்பு கடித்த நிலையில், அதனை கையில் வைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக் கொண்டிருந்த நபரை பார்த்து டாக்டர்களும், நோயாளிகளும் திகைத்தனர்.

    சிறிது நேரம் காத்திருந்த நபர் வலி தாங்க முடியாமல், கையில் பாம்பை வைத்துக் கொண்டு அங்கேயே படுத்துக் கொண்டு சிகிச்சைக்காக காத்திருந்தார். மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் வினோத காட்சியை மக்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

     

     

    நோயாளிகளின் உதவியாளர்கள் அந்த நபரின் கையிலிருந்து பாம்பு தப்பித்துவிட்டால், எதுவும் நடக்கலாம் என்று பயந்து தூரத்தில் நின்று கொண்டிருந்தனர். வளாகத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கிருந்த வேறொரு நபர் பிரகாஷின் கையைப் பிடித்து அவரை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    கையில் பாம்பை வைத்திருக்கும் நபருக்கு எப்படி சிகிச்சையளிக்க முடியும் என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் மருத்துவர்கள் காணப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு தொடர்ந்து தாமதமானதை அடுத்து பிரகாஷ் அந்த பாம்பை விடுவித்துள்ளார். அவருக்கு அதன்பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டதா, அவரின் தற்போதைய நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

    • குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.
    • டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரியலூர்:

    அரியலூர் நகரின் மையப்பகுதியில் அரசு கல்லூரியும், அரசு மருத்துவக்கலூரிக்கு செல்லும் சாலையில் தனியார் மருத்து வமனை அமைந்துள்ளது. இது குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.

    இந்த சாலையில் இரவு பகலாக மக்கள் மிக அதிகமாக சென்று வருவார்கள். இந்த நிலையில் ஆயுதபூஜை அன்று இரவு பூஜையை முடித்துவிட்டு சீக்கிரமாக மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் காலையில் சுமார் 10 மணியளவில் மருத்துவமனையை திறந்தபோது பின்பக்க கதவு உடைத்து உள்ளே நுழைந்து மேஜையின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த

    விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள், பணத்தை திருடிசென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    தகவல் அறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ×