search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி வாட்ச் 2"

    • தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
    • வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவி ரிப்பா முதலிடம் பெற்றார். இவரது தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வர்த்தகக் கழக தலைவர் கண்ணன் தலைமையில் முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், துணைத்தலைவர் சங்கீதா பிரசாத், நிர்வாகிகள் கிஷோர், அம்பேலா சாகுல் மற்றும் வியாபாரிகள் நேரில் சென்று மாணவி ரிப்பாவுக்கு வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது.
    • மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி. பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் வெள்ளகோவிலில் உள்ள தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகின்றார். இவரது மகன் சிவின்(வயது 17). 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார், தற்போது ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது. அதற்கு இவர்களது பெற்றோர் இந்த படிப்பு படிப்பதற்கு ரூ.72 ஆயிரம் செலவாகும்.அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இந்த படிப்பிற்கு எந்த அளவுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் என்பது தெரியவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் தான் படிக்க விரும்பிய பாடத்தில் சேர முடியாது என நினைத்து மனவிரக்தியில் சிவின் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது மாணவன் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.

     திருப்பூர் :

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி மாணவ-மாணவிகள் உயர் படிப்புக்கு தயாராகி வருகிறார்கள். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275-ம், மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.

    பிளஸ்-2 தேர்வு முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

    பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், தங்கள் பள்ளிக்கென்று வழங்கப்பட்ட யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களை சரிபார்த்து பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொது த்தேர்வு நிறைவடை ந்துள்ளது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

    விடைத்தாள்கள் ஈரோடு மாவட்டத்தில் மாமரத்து பாளையம் இந்து கல்வி நிலையம், கொங்கம்பா ளையம் எஸ்.வி.என். பள்ளி, கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளி யில் சேகரித்து வைக்கப்ப ட்டுள்ளது.

    குலுக்கல் முறை யில் விடைத்தாள்கள் வெவ்வேறு மாவட்டத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்க ப்பட்டு ள்ளது. அதேபோல் பிற மாவட்ட விடைத்தா ள்கள் ஈரோடு மாவட்டத்தி ற்கு வந்துள்ளது.

    இந்து கல்வி நிலையம், எஸ்.வி.என் பள்ளி, பாரதி வித்யாலயா பள்ளி மைய ங்களில் பிளஸ்-2, பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

    இது குறித்து பள்ளி கல்வித்துறை யினர் கூறியதாவது:

    பிளஸ்-2, அதைத்தொ டர்ந்து பிளஸ்-1 விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. 12 நாட்க ளில் ஈரோடு மாவட்டத்தில் விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுமையாக நிறைவு பெறும். இந்த பணியில் ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
    • இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் தொழிற்கல்வி, அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினர்.

    3 நாட்கள் விடுமுறை

    தொடர்ந்து நாளை (18-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (19-ந்தேதி), திங்கட்கிழமை (20-ந்தேதி) ஆகிய 3 நாட்கள் தேர்வு கிடையாது. தேர்வுக்கான பாடங்களை படிக்கும் விதமாக மாணவ- மாணவிகளுக்கு இந்த 3 நாட்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    • 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு நடந்தது.
    • 416 போ் தோ்வில் பங்கேற்கவில்லை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் மொத்தம் 6,852 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதில் முதல்நாள் நடைபெற்ற தமிழ் மொழிப் பாடத் தோ்வை 6436 போ் எழுதினா். 416 போ் தோ்வு எழுத வரவில்லை.

    மலையாளப் பாடத்தில் மொத்தம் 175 பேரில் 170 போ் தோ்வு எழுதினா். பிரெஞ்சு பாடத்தில் மொத்தம் 324 பேரில், 303 போ் தோ்வு எழுதினா். ஹிந்திப் பாடத்தில் மொத்தம் 89 பேரில் 89 பேரும் தோ்வு எழுதினா். தனித்தோ்வா்களில் தமிழ் தோ்வில் மொத்தம் 46 பேரில் 43 போ் தோ்வு எழுதினா். 3 போ் வருகை புரியவில்லை. ஹிந்திப் பாடத்தில் மொத்தம் ஒருவா் தோ்வு எழுதினா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் மொத்தம் 52 போ் அரசுத் தோ்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், மற்றும் சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளைப் பெற்று தோ்வு எழுதினா். நீலகிரி மாவட்டத்தில் 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு எழுதத் தகுதியுடைய தனித்தோ்வா்கள், பள்ளி மாணவா்கள் என மொத்தம் 7,440 பேரில் 6998 போ் தோ்வு எழுதினா். 442 போ் வருகை புரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத் தோ்வை அதிகமானோா் எழுதாமல் உள்ளனா் என்று கல்லித்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    நாகர்கோவில், மார்ச்.14-

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொது தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 10508 மாணவர்களும், 11572 மாணவிகளும் என மொத்தம் 22080 பேர் எழுதுகிறார்கள். இதை யடுத்து தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டது. 84 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதையடுத்து காலையிலேயே மாணவ- மாணவிகள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் அமர்ந்து தேர்வுக்கான இறுதிக்கட்ட படிப்பை மேற்கொண்டனர்.

    பின்னர் தேர்வு மையத்திற் குள் மாணவ-மாணவிகள் சென்றனர். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறி தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைகள் குறித்த விபரம் பள்ளி வளாகத்திற்குள் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றனர். தேர்வு மையத்திற்குள் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் யாரையும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

    தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங் கியது. இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதத் தொடங்கினார்கள். மதியம் தேர்வு முடிவடைந்தது. தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப் பட்டிருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    தேர்வுகள் முடிவடைந்து தொடர்ந்து பலத்த பாது காப்புடன் விடைத்தாள்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத் தாள்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளிக்கும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் படந்தாலுமூடு சேகரட் கார்ட் மெர்டிக் மேல்நிலைப்பள்ளிக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. விடைத்தாள்கள் வைக்கப் பட்டுள்ள மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 11 குழுக்களைக் கொண்ட 33 பறக்கும் படையினர், 215 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தேர்வுப் பணியாளர்கள் என பல்வேறு நிலைகளிலும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்வுகள் அனைத்தும் காலையில் ெதாடங்கி மதியம் வரை நடை பெறுகின்றன.

    தமிழ் முதல்தாள்

    முதல் நாளான, இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. மொழிப்பாட தேர்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வையொட்டி அதிகாலை முதலே மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து மும்முரமாக பாடங்களை படித்தனர். காலை 7 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நோட்டீசு போர்டில் பெயர் மற்றும் பதிவு எண், தேர்வு அறை எண் ஆகியவை கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டது. அவற்றை பார்த்து, மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வை அறையை தெரிந்து கொண்டனர்.

    பின்னர் காலை 9 மணி அளவில் இறை வழிபாடு நடைபெற்றது. அதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று விட்டு தங்களது தேர்வு அறைக்கு புறப்பட்டு சென்றனர்.

    பறக்கும் படையினர், தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று தேர்வுகள் நடைபெறுவதை கண்காணித்தனர். தேர்வையொட்டி பள்ளி களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கலெக்டர் ஆய்வு

    சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    பொதுத்தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். தலைமை ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் அன்றாடம் நம்பிக்கை அளித்து தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் ஒரு தேர்வு முடிந்த பின், அதைப்பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்து அடுத்தடுத்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் தேர்வு நேரங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் போதிய நேரம் தூங்க வைத்து, சத்தான உணவுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத அனுப்பிட வேண்டும். பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.



    மதுரை ஈ.வே.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள்.

     பரமக்குடி

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,920 மாணவர்கள், 8,147 மாணவிகள் என மொத்தம் 16,067 பேர் இன்று தேர்வு எழுதினர். 65 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதி னர். காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் புத்தகங்களுடன் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்களும் தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

    தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டிருந்தது. எனவே மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்குட்படுத்த ப்பட்ட பின்னர் 9.45 மணி யளவில் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரி யைகள் ஈடுபடுத்தப்பட்ட னர். மாவட்டத்தில் தொலை தூரங்களில் இருந்து மாணவ -மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வர அரசு பஸ் வசதிகள் செய்யப் பட்டிருந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்கள், 8,808 மாணவிகள என மொத்தம் 16 ஆயிரத்து 433 மாணவ மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க 46 வினாத்தாள் கட்டுப் பாட்டா ளர்கள், 79 முதன்மை கண்காணிப்பா ளர்கள், துறை அலுவலர்கள் 1239 அறை கண் காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    சிவகங்கையில் உள்ள மையத்திற்கு இன்று மாவட்ட கலெக்டர் மதுசுதன் ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்கள் அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று 10,985 மாணவர்கள், 12,383 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 368 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம், மாநில அளவில் பிளஸ்-2 தேர்வு சதவீதத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதனை தக்க வைக்க மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தினர்.

    3 மாவட்டங்களிலும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தி னர். தமிழ் மொழி பாட ேதர்வுடன் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.


    • நாகர்கோவில் 11 ஆயிரத்து 88 பேரும், மார்த்தாண்டம் 11 ஆயிரத்து 830 பேரும் தேர்வினை எழுதினர்.
    • தீயணைப்பு துறையினரும் தேர்வு மையங்களில் தயார் நிலையில் இருந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதினர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 88 பேரும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 830 பேரும் தேர்வினை எழுதினர்.

    இதற்காக 82 தேர்வு மையங்களும், கல்வி மாவட்டத்திற்கு தலா ஒரு தனித் தேர்வு மையமும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுக்காக மாணவ-மாணவிகள் இன்று காலை தங்களுக்கான தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்களை ஆசிரிய-ஆசிரியைகள் வரவேற்று தேர்வு குறித்து விளக்கினர்.

    பிரார்த்தனை

    தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளி களில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் தேர்வு பற்றி விவாதித்தனர். தேர்வு மையத்திற்குள் செல்லும் வரை சிலர் புத்தகங்களை எடுத்து பாடங்கள் படித்து நினைவூட்டிக் கொண்டனர்.

    ஏற்கனவே தேர்வு மையங்களில், மாணவ-மாணவிகளின் ஹால் டிக்கெட் எண்கள் இருக்கை களில் எழுதப்பட்டு இருந்தது. அதனை பார்த்து மாணவ-மாணவிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தொடர்ந்து வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடந்தன.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 160 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் நிலையான பறக்கும் படையினர் 56 பேரும், பறக்கும் படையினர் 24 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கும் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.பறக்கும் படையினர் இன்று தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து அல்லது அசம்பாவிதம் நேர்ந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினரும் தேர்வு மையங்களில் தயார் நிலையில் இருந்தனர். தேர்வு மையங்களில் முதலுதவி ஏற்பாடுகள், விடைத்தாள் பாதுகாக்கப்படும் பகுதி யில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள் ளிட்ட ஏற்பாடுகளும் செய் யப்பட்டு உள்ளன.

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. மேலும் நாளை (14-ந் தேதி) பிளஸ்-1 தேர்வும் தொடங்குகிறது.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.




    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.




    இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் 30 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்
    • திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் அல் அமீர் (வயது 23).

    இவர் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் அல் அமீர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்பு அவர் தன்மீது வழக்கு தொடர்ந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து சமரசம் பேசியுள்ளார்.

    அப்போது மாணவியை அவரே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அல்அமீருக்கும், மாண விக்கும் கடந்த 18-ந் தேதி திருமணம் நடந்துள்ளது.

    மைனர் பெண்ணை அல்அமீர் திருமணம் செய்த தகவல் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தெரியவந்தது.அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக அல்அமீரை கைது செய்தனர்.மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தந்தை மற்றும் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×