என் மலர்
நீங்கள் தேடியது "யோகா"
- சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.
ஆந்திர மாநிலம் அனகாபல்லியைச் சேர்ந்தவர் கொனத்தலா விஜய், 2012-ம் ஆண்டு முதல் சீனாவில் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராகவும் நடன அமைப்பாளராகவும் உள்ளார்.
சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். 2021-ம் ஆண்டில், யோகா பிரிவின் கீழ் கின்னஸ் உலக சாதனைகளில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.
அஷ்டவக்ராசனம், மயூராசனம் மற்றும் பகாசனம் போன்ற மேம்பட்ட ஆசனங்களை உள்ளடக்கிய மிக நீண்ட யோகா அமர்வுக்கான சாதனையை அவர் பெற்றுள்ளார்.
தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் நோபல் உலக சாதனைகளிலும் சாதனை படைத்துள்ளார்.
அவரது மனைவி, கொனத்தலா ஜோதி, கர்ப்பத்தின்போது 9-வது மாதத்தில் (குழந்தை பிறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு) மேம்பட்ட யோகாசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
விஜய் மற்றும் ஜோதி தம்பதியரின் 14 வயது மகள் கொனத்தலா ஜஸ்மிதா, ஒரு நிமிடத்தில் ஒரே காலில் கயிற்றை வேகமாக இழுத்து சாதனை படைத்துள்ளார்.
இவர்களது 5 வயது மகனான கொனதலா ஷங்கரும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் டிராம்போலைனில் அதிக எண்ணிக்கையிலான கயிறு ஸ்கிப் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தார். இந்த குடும்பத்துக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.
"இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்காக நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
எங்கள் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பிரதமரை சந்திக்க விரும்புகிறோம். இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு கனவு என்றனர்.
- 15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர்.
- கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர்.
கடல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் ஆபத்து நிறைந்தது. பலரும் அதை உணருவதில்லை.
சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட கடல் பகுதிகள் சீற்றமாக இருந்தது. யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் அதை கண்டுகொள்ளாமல் கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்று விளையாடியதை பார்த்தோம். சீற்றம் அதிகமுள்ள நேரத்தில் மட்டுமல்ல, சாதாரண நாட்களிலும் முன்னெச்சரிக்கை இன்றி கடற்கரை பகுதிக்கு செல்வது ஆபத்துதான்.
இதை உணராமல், கடற்கரை பகுதிக்கு சென்ற நடிகை ஒருவர் அலையில் சிக்கி பலியாகியுள்ளார். அந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ரஷிய நாட்டின் பிரபல நடிகை கெமில்லா பெல்யாஸ்டாக்யா. 24 வயதான அவர் தனது காதலனுடன், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தலமான கோசியா மியூய் தீவிற்கு சென்றார்.
யோகா ஆர்வலரான கெமில்லா, கடற்கரையில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து கண்களை மூடியபடி யோகா செய்தார். அப்போது கடல் அலைகள் சீற்றமாக இருந்தது. திடீரென்று ஒரு பெரிய அலை கரைக்கு வந்து யோகா செய்து கொண்டு இருந்த நடிகை கெமில்லாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அலைல் சிக்கிய அவர், கடலுக்குள் உயிருக்கு போராடினார்.
நீண்ட நேரம் கடலில் தத்தளித்து கொண்டு இருந்த அவரை மீட்க யாரும் இல்லாததால், கடலில் மூழ்கினார்.
15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர். கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு, வேறு பகுதியில் கெமில்லாவின் உடல் கரை ஒதுங்கியது.
நடிகை கெமில்லா பாறையில் அமர்ந்து யோகா செய்வதும், அவரை கடல் அலை இழுத்து செல்வதும், கடலில் அவர் தத்தளிப்பதும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Страшные кадры из Таиланда: российская туристка по неосторожности погибла в волнах
— SVTV NEWS (@svtv_news) November 29, 2024
Трагедия разыгралась на одном из пляжей острова Самуи. Утром там объявили штормовое предупреждение, но это не смутило 24-летнюю Камиллу Беляцкую, приехавшую вместе с парнем на отдых ближе к… pic.twitter.com/WwilO7DmrC
- துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதாக கூறி யோகா ஆசிரியையை சதீஷ் ரெட்டி அழைத்து சென்றார்.
- ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான படம் 'கில் பில்'(Kill Bill).
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா திப்புரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிந்துஸ்ரீ. இவரது கணவருக்கும், அதேப்பகுதியில் வசித்து வரும் யோகா ஆசிரியை ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக பிந்துஸ்ரீ சந்தேகித்தார்.
இதையடுத்து அவர் பெங்களூர் கூலிப்படையை சேர்ந்த சதீஷ் ரெட்டி என்பவரை தொடர்புகொண்டு யோகா ஆசிரியையை கொலை செய்ய வேண்டும் என்ற தனது திட்டத்தை தெரிவித்தார்.
அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சதீஷ் ரெட்டி, அந்த பெண் நடத்தி வரும் யோகா வகுப்பில் கலந்துகொண்டார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதாக கூறி யோகா ஆசிரியையை சதீஷ் ரெட்டி அழைத்து சென்றார்.
பின்னர் அங்கிருந்த தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சதீஷ் ரெட்டி யோகா ஆசிரியையை காரில் கடத்தி சென்றார். பின்னர் சிட்லகட்டா அருகே வனப்பகுதியில் வைத்து சதீஷ் ரெட்டி உள்பட 4 பேரும் சேர்ந்து யோகா ஆசிரியையின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி தாக்கி உள்ளனர். பின்னர் கேபிள் வயரால் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்துள்ளனர். அப்போது சமயோசிதமாக செயல்பட்ட யோகா ஆசிரியை, தனது மூச்சை சிறிது நேரம் கட்டுப்படுத்தி மயக்கமடைந்தது போல் நடித்துள்ளார்.
யோகா ஆசிரியை உயிரிழந்துவிட்டார் என நினைத்து, ஆசிரியை அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு, அவரை அங்கேயே அவசர அவசரமாக ஒரு குழியை தோண்டி புதைத்துவிட்டு அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மண்ணுக்குள் புதைந்து கிடந்த யோகா ஆசிரியை, தனக்கு தெரிந்த மூச்சுப்பயிற்சியை பயன்படுத்தி தனது மூச்சை கட்டுப்படுத்தியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மண்ணுக்குள் இருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளார்.
பின்னர் அவர், உடலை மரக்கிளையால் மறைத்தப்படி வனப்பகுதி வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வனப்பகுதியையொட்டி வசிக்கும் ஒரு வீட்டுக்கு சென்ற அவர், நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் வீட்டில் இருந்தவர்கள் யோகா ஆசிரியை அணிய ஆடை கொடுத்தனர். இதையடுத்து அந்த கிராம மக்கள் உதவியுடன் யோகா ஆசிரியை, சிட்லகட்டா போலீசில் புகாா் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், கொலை முயற்சி, கடத்தல், தாக்குதல், கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சதீஷ் ரெட்டி, அவரது நண்பர்கள் ரமணா, ரவி, சந்திரன் ஆகிேயாைரயும், அவர்களை கூலிப்படையாக ஏவிய பிந்துஸ்ரீயையும் போலீசார் கைது செய்தனர்.
ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான படம் 'கில் பில்'(Kill Bill). இந்த படத்தில் கதாநாயகியை சிலர் உயிருடன் மண்ணுக்குள் புதைப்பது போலவும், அவர் தனக்கு தெரிந்த தற்காப்புக் கலையை பயன்படுத்தி மண்ணுக்குள் இருந்து வெளியேறி உயிர்தப்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் அதுபோன்ற சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
- அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் டிவைடரின் மேல் யோகாசனம் செய்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து மதுபோதையில் யோகாசனம் செய்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ட்ரவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் நடுவே உள்ள டிவைடரில் ஏறி அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
- ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
- ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.
வயிறு மற்றும் பிற உடல் பாகங்களில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பல நேரங்களில் தைராய்டு அல்லது பி.சி.ஓ.டி., பி.சி.ஓ.எஸ்., வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிற நோய்களால் எடை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்குகிறது.
அதிக எடை மற்றும் இடுப்பில் சேரும் கொழுப்பு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடல் எடையை குறைக்க ஜிம்மில் மணி கணக்கில் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்து டயட்டை பின்பற்றுகிறோம். ஆனால் இன்னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
உடல் எடையை யோகா பயிற்சி மூலம் குறைக்க முடியும். தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். மேலும் ஆசனங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் மாலை என இருமுறை செய்ய முயற்சிக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் 15 நாட்களுக்குள் உங்களில் வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள். யோகா ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.
புஜங்காசனம்
புஜங்காசனம் என்பது இரண்டு வார்த்தைகளால் ஆனது. புஜங் என்றால் பாம்பு என்றும் ஆசனம் என்றால் தோரணை என்றும் பொருள். இதை செய்யும் போது உடல் பாம்பு போல மாறும். எனவே இது கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. புஜங்காசனம் செய்வதால் வயிற்று தசைகள் விரிவடையும். உடல் எடை மற்றும் தொப்பை குறைய உதவுகிறது.
செய்முறை:
முதலில் தரையை பார்த்து படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தோள்களுக்கு கீழே வைக்க வேண்டும். பாதங்களை ஒன்றாக வைக்க வேண்டும்.
இப்போது மூச்சை உள் இழுத்துக்கொண்டு பின்தலை, தோள்கள் இவர்றை 30 டிகிரி கோணத்தில் உயர்த்த வேண்டும்.
வயிற்றுப்பகுதி தரையில் இருப்பதையும், தோள்கள் அகலமாகவும், தலை சற்று உயர்த்தப்பட்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதன்பிறகு கால் விரல்களுக்கு அழுத்தம் கொடுங்கள். ஆசனத்தை 10 வினாடிகள் வைத்திருந்து பின்னர் மெதுவாக தலையை கீழே கொண்டு வந்து பிறகு மூச்சை வெளியே விட வேண்டும்.
வசிஷ்டாசனம்
இந்த ஆசனம் செய்யும் போது உடலின் சமநிலை ஒரு கை மற்றும் உள்ளங்காலில் செய்யப்படுகிறது. இப்படி செய்வதால் வயிற்று தசைகள் நீட்டப்படும். இது கலோரிகளை எரிக்க உதவுகிறது.
செய்முறை:
சமநிலை ஆசனத்துடன் தொடங்க வேண்டும். இடது உள்ளங்கையை தரையில் உறுதியாக வைத்துக்கொண்டு வலது கையை தரையில் இருந்து உயர்த்த வேண்டும். முழு உடலையும் வலது பக்கம் திருப்ப வேண்டும்.
வலது பாதத்தை தரையில் இருந்து தூக்கி இடது பாதத்தின் மேல் வைக்க வேண்டும். வலது கையை உயர்த்தி, விரல்களை மேல்நோக்கி வைக்க வேண்டும்.
முழங்கால்கள், குதிகால் மற்றும் பாதங்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பில் இருப்பதையும், கைகள் மற்றும் தோள்கள் இரண்டும் நேர் கோட்டில் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் இதே நிலையில் இருக்க வேண்டும். அதேபோன்று இந்த யோகாவை இடதுபக்கம் செய்ய வேண்டும்.
ஷலபாசனம்
இதை செய்யும் போது உடல் ஒரு பூச்சியை போல் மாறும். எனவே இது வெட்டுக்கிளி தோரணை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையும், கொழுப்பும் வேகமாக குறையும். மேலும் தசைகள் வலுவடைந்து மலச்சிக்கல் நீங்கும்.
செய்முறை:
முதலில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தொடைகளுக்கு கீழே வைக்க வேண்டும். மூச்சை முழுமையாக உள்ளிழுத்து மூச்சை பிடித்து பின்னர் கால்களை ஒன்றாக உயர்த்த வேண்டும்.
முழங்கால்கள் நேராகவும், பாதங்கள் ஒன்றாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் கன்னம், நெற்றியை தரையில் வைக்க வேண்டும். 10 வினாடிகள் ஆசனத்தில் இருக்க வேண்டும். கால்களை மெதுவாக கீழே இறக்கி பின்னர் மூச்சை வெளியே விட வேண்டும்.
- பலர் மனம் அமைதியின்றி வாழ்க்கையை போராடி வாழ்ந்து வருகின்றனர்.
- மனதிற்கு அமைதி தரக்கூடிய செயல்களில் ஈடுபடலாம்.
இன்று பல்வேறு காரணங்களால் மனம் அமைதியின்றி வாழ்க்கையை போராடி வாழ்ந்து வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பெரும் அச்சம் பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
சுவாசப்பயிற்சி:
பொதுவாக சுவாசப்பயிற்சி மேற்கொள்வது மனதை திறம்பட நடுநிலையில் செயல்பட வைக்க உதவுகிறது. மேலும் ஆழமாக சுவாசிக்கும் போது நரம்பு மண்டலம் நிதானமாக பாதுகாப்பாக இருக்கத்தொடங்குகிறது. இது பீதியை குறைத்து மனதை மகிழ்ச்சியாக இருக்க உதவிபுரிகிறது.
ஓய்வெடுத்தல்:
தொடர் மன அழுத்தம், கடுமையான சூழ்நிலைகள் இவைகள் யாவும் தினசரி வழக்கமாக மாறும்போது உடல் பீதி அடைவது இயற்கையானது. இந்த் சூழ்நிலைகளில் இருந்து நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள நம் உடலுக்கு சிறிது நேரத்தை ஒதுக்குவது அவசியமாகும்.
இதற்கு நாம் தினமும் ஒரு பயணம் செல்லலாம். இயற்கையை ரசிப்பது, இசையை கேட்பது, பாடல் பாடுவது போன்ற மனதிற்கு அமைதி தரக்கூடிய செயல்களில் ஈடுபடலாம். அதற்கான நேரத்தை ஒதுக்கலாம்.
அமைதியாக இருத்தல்:
நம் மனதில் பழைய கசப்பான அனுபவங்கள், எண்ணங்கள் இருக்கும் போது நம்மிடம் எதுவும் இல்லை என்ற மன அழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படலாம். இந்த மாதிரி நேரங்களில் நாம் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
எனவே யோகா, தியானம் மற்றும் பிற நினைவாற்றல் நுட்பங்களை செய்யலாம். இது மனதை பொறுமையாக நிதானமாக மற்றும் அமைதியாகவும் உணர வைக்கிறது.
நண்பர்கள்:
நம்மை சுற்றி நேர்மறையான நபர்கள் இருப்பது நமக்கு தானாகவே மகிழ்ச்சியை தருவதுடன் நேர்மறை எண்ணங்களையும் வளர்க்க உதவுகிறது. எனவே நாம் நம்மை சுற்றியுள்ளவர்களை தேர்ந்தெடுத்து நம்மை வழிநடத்த அனுமதிக்கலாம். இது வாழ்க்கையை மென்மேலும் உயர வழிவகுக்கும்.
இந்த வழிமுறைகளின் உதவியுடன் நாம் நம்முடைய மனதை பதட்டத்தை ஏற்படக்கூடிய மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றில் இருந்து விடுபட்டு அமைதியான வாழ்க்கையை பெறலாம்.
- பழமையான பயிற்சிகளுள் முக்கியமானது, பிரணாயாமம்.
- ஆழ்ந்த சுவாச முறை மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தையும் தணிக்கும்.
நம்முடைய மூதாதையர்கள் கையாண்ட பழமையான பயிற்சிகளுள் முக்கியமானது, பிரணாயாமம். ஆழ்ந்து சுவாசித்து மூச்சை உள் இழுத்து வெளியிடும் இந்த பயிற்சியானது யோகாவின் ஒரு அங்கமாக விளங்குகிறது.
உடலையும், மனதையும் சமநிலைப்படுத்தக்கூடியது. இவை இரண்டின் நலனையும் மேம்படுத்தக்கூடியது. பிரணாயாமம் பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
மன அழுத்தம் - பதற்றத்தை குறைக்கும்
பிரணாயாமம் பயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது மனதை அமைதிப்படுத்தும் திறனாகும். இந்த ஆழ்ந்த சுவாச முறை மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தையும் தணிக்கும்.
செரிமான பிரச்சனையை போக்கும்
பிரணாயாமம் பயிற்சி மூலம் மேற்கொள்ளப்படும் ஆழ்ந்த சுவாசம் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 'வேகஸ்' நரம்பை தூண்டும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை போக்கவும் உதவும்.
ரத்த அழுத்தத்தை சீராக்கும்
பிரணாயாமம் பயிற்சியை வழக்கமாக தொடர்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரியும். இதயத்துடிப்பு சீராக நடைபெற ஊக்குவிக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும்.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
இந்த பயிற்சியானது சுவாச முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், மன அழுத்த அளவைக் குறைப்பதன் காரணமாகவும் இதய நோய் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைந்துவிடும். ரத்த ஓட்டமும், இதயத் துடிப்பும் சீராக இருக்கும். கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.
சோர்வை போக்கும்
பிரணாயாமம் செல்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க செய்யும். அதனால் உடல் ஆற்றலின் அளவும் அதிகரித்து சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டும்.
சோர்வை நெருங்கவிடாமலும் தடுக்கும். நாள் முழுவதும் அதிக விழிப்புடனும், உற்சாகத்துடனும் செயல்பட வைத்துவிடும்.
மன தெளிவை கொடுக்கும்
பிரணாயாமம் பயிற்சி செய்வதன் மூலம் கவனச்சிதறல்கள் கட்டுப்படும். கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும். மனமும் தெளிவு பெறும். மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் செறிவையும் அதிகரிக்கச் செய்யும். நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், அறிவாற்றல் செயல்பாடு போன்றவையும் மேம்படும்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும்
பிரணாயாமம் பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் செய்திடும். மனதை அமைதிப்படுத்துவதன் மூலமும், எதிர்மறை உணர்ச்சிகளை குறைப்பதன் மூலமும் ஆழ் மன நலனை பேணுவதற்கு வித்திடும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் ஆற்றலையும் கொடுக்கும்.
நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும்
மூச்சை ஆழ்ந்து இழுத்து மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி சுவாச செயல்முறைகளை ஊக்குவிக்கும். சுவாச மண்டத்தை பலப்படுத்தி நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்கவும் செய்யும். குறிப்பாக ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்
இந்த பயிற்சி உடலில் உள்ள ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் உதவிடும். குறிப்பாக தைராய்டு மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ். எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சுவாச பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
நச்சுக்களை நீக்கும்
இந்த பயிற்சிக்காக நன்றாக மூச்சை உள் இழுத்து ஆழ்ந்து சுவாசிக்கும்போது வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும். அப்போது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையும் நடக்கும். இந்த உள்ளுறுப்பு சுத்திகரிப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் வலுப்படுத்தும்.
- இளம் வயதினரும் நியாபக மறதி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
- தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு.
ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். சில எளிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம்.
* தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு. தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்து வருவது மனநலத்துக்கு மட்டுமல்ல ஞாபக மறதி பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும் உதவும். குறிப்பாக நினைவுத்திறனையும், மனநிலையையும் மேம்படுத்தும்.
* மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்க செய்யலாம். பொதுவாக எந்த வேலை செய்வதாக இருந்தாலும் வலது கையைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம். அதற்கு மாற்றாக இடது கையை உபயோகிக்கலாம். அதன் மூலம் மூளையின் செயல்திறன் மேம்படும். ஞாபக மறதியின் வீரியம் குறையும்.
* ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதும் மூளை சிறப்பாக செயல்பட உதவும். அதனால் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் பயிற்சிகளை செய்து வரலாம். யோகாசனங்களும் பலன் கொடுக்கும். அவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவிடும்.
* உணவுக்கட்டுப்பாடும் அவசியமானது. சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவும் புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- கர்நாடகாவில் கேவாலா என்ற அறக்கட்டளையை பிரதீப் உல்லால் என்ற யோகா ஆசிரியர் நடத்தி வருகிறார்.
- வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் கேவாலா அறக்கட்டளையை நடத்தி வரும் பிரதீப் உல்லால் (54) என்ற யோகா ஆசிரியர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். முந்தையை பிறவியில் நாம் இருவரும் உறவில் இருந்ததாக கூறி தன்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அப்பெண் தனது புகாரில், "பஞ்சாப்பை சேர்ந்த நான் 2000 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தேன். பிரதீப் உல்லால் ஆன்லைனில் நடத்திய யோகா வகுப்புகளில் நான் கடந்த 5 ஆண்டுகளாக கலந்து கொண்டேன்.
அப்போது நாங்கள் இருவரும் கடந்த பிறவியில் உறவில் இருந்ததாக என்னை நம்ப வைத்து 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் என்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது நான் கருவுற்றேன், பின்னர் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது" என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
- மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பழமையான பயிற்சியாகும்.
- யோகா குழந்தைகளுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தை பருவத்தில் இருந்தே படிப்புச்சுமை குழந்தைகளின் தோள்களில் விழுகிறது. பல குழந்தைகள் சிறுவயதிலிருந்தே படிப்பு தொடர்பான மன அழுத்தத்தை எடுக்கத் தொடங்குகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளை மன அழுத்தத்தை உணராமல் மகிழ்ச்சியாக இருக்க, வேடிக்கையான செயல்களில் மும்முரமாக வைத்திருப்பது அவசியம். குழந்தைகளும் குழந்தை பருவத்தில் இருந்தே யோகா செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். அதனால் அவர்கள் யோகாவின் சக்தியை அறிந்து, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பழமையான பயிற்சியாகும். யோகா குழந்தைகளுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தடாசனம்
யோகா பயிற்சி குழந்தைகளின் தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. மேலும் இது குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்கிறது. தடாசனா பயிற்சி குழந்தைகளுக்கு நன்மை பயக்கும். இது உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது.
இந்த ஆசனத்தில், குழந்தைகள் நேராக நின்று தங்கள் கால்களை ஒன்றாக இணைத்து கைகளை மேலே உயர்த்துகிறார்கள். இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதால் முதுகுத்தண்டு வலுவடைந்து உடல் சமநிலை மேம்படும். இதனுடன், இந்த ஆசனத்தின் பயிற்சியும் செறிவு அதிகரிக்கிறது.
விருக்ஷாசனம்
குழந்தைகள் விருக்ஷாசனம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். குழந்தைகளுக்கு யோகா கற்பிக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஆசனங்களை வேடிக்கையாக செய்ய வேண்டும். விருக்ஷாசனம் என்பது குழந்தைகளுக்கான ஒரு வேடிக்கையான ஆசனமாகும்.
அதில் அவர்கள் ஒரு காலில் நின்று, மற்றொரு காலை முழங்காலில் வைத்து, நமஸ்காரம் தோரணையில் கைகளை இணைக்கிறார்கள். இந்த ஆசனத்தை பயிற்சி செய்வது சமநிலை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் கால் தசைகளை பலப்படுத்துகிறது.
வீரபத்ராசனம்
யோகா பயிற்சி செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பது மட்டுமின்றி மன அமைதியும், கவனமும் அதிகரிக்கும். வீரபத்ராசனம் பயிற்சி குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை வீட்டில் குழந்தைகளுக்கு எளிதாக கற்பிக்க முடியும். இதற்காக, முதலில் குழந்தையின் ஒரு காலை முன்னோக்கி நீட்டி, மற்றொரு காலை பின்னோக்கி வைத்து, பின்னர் குழந்தையின் கைகளை மேல்நோக்கி உயர்த்தவும்.
இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதன் மூலம், குழந்தைகளின் உடலின் கீழ் பகுதி வலுவடைகிறது. இதைப் பயிற்சி செய்வதன் மூலம், குழந்தைகளின் தோரணை மேம்படும் மற்றும் தசைகள் வலுவடையும்.
மர்ஜாரியாசனம்
மர்ஜாரியாசனம் குழந்தைகளுக்கு பல உடல் மற்றும் மன நலன்களை வழங்குகின்றன. மர்ஜாரியாசனமும் பிட்டிலாசனமும் குழந்தைகளின் முதுகெலும்பை நெகிழ வைக்கும். இந்த ஆசனங்களின் போது முதுகெலும்பை மேலும் கீழும் நகர்த்துவது நெகிழ்வுத்தன்மையையும் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.
இந்த ஆசனங்களின் வழக்கமான பயிற்சி குழந்தைகளின் உடல் நிலையை மேம்படுத்துகிறது. இது அவர்களின் உட்கார்ந்து, நிற்கும் மற்றும் நடக்கும் நிலையை மேம்படுத்துகிறது. இதில், குழந்தைகள் கை மற்றும் முழங்காலில் வந்து பின் மாறி மாறி முதுகை உயர்த்தி இறக்குகிறார்கள்.
சேதுபந்தாசனம்
சேதுபந்தாசனம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல மற்றும் வேடிக்கையான ஆசனம். இது குழந்தைகள் பயிற்சி செய்ய விரும்புவார்கள். இந்த ஆசனத்தில் குழந்தைகள் முதுகில் படுத்து இடுப்பை உயர்த்துவார்கள். சேதுபந்தசனம் முதுகுத்தண்டு மற்றும் முதுகு தசைகளை பலப்படுத்துகிறது, அதன் பயிற்சி குழந்தைகளின் சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது.
- நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- சில எளிய ஆசனங்களை செய்யலாம்.
உலக அளவில் தலைவலி பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் அதற்காக மருத்துவர்களிடம் செல்பவர்கள் மிகக்குறைவு. மருத்துவர்களிடம் செல்லாமலேயே அதனை சமாளித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
மக்கள் ஒற்றைத் தலைவலியை `வெறும் தலைவலி' என்று கருத முனைகிறார்கள், இது சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், நீண்ட காலத்திற்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலியின் கிளாசிக்கல் அறிகுறிகளை மக்கள் புறக்கணித்தால், அவர்கள் நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு ஆளாக நேரிடும். என்று மருத்துவ நிபுணர் தெரிவிக்கிறார்.
மருந்துகள் ஓரளவிற்கு உதவக்கூடும் என்றாலும், யோகா வல்லுநர்கள் யோகா செய்வதன் வழியாக இதற்கான நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒற்றைத் தலைவலி தாக்குதல்களின் தீவிரத்தை நிர்வகிக்கவும் குறைக்கவும் சில எளிய ஆசனங்களை செய்யலாம்.
வஜ்ராசனத்தில் உள்ளங்கைகளை தொடைகளில் ஊன்றி அமரவும். கண்களை மூடிக்கொண்டு உடல் முழுவதும் தளர்த்தி ஓய்வெடுக்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி முழங்கைகள் நேராக இருக்க வேண்டும்.
மூச்சை வெளியேவிட்டு, உடற்பகுதியை மெதுவாக முன்னோக்கி நகர்த்த வேண்டும். முதுகெலும்பில் இருந்து இல்லாமல் இடுப்பு பகுதியில் இருந்து வளைக்க வேண்டும். கைகளை சற்று வளைத்து வைத்து, கைகள், நெற்றி, முழங்கைகளை விரிப்பில் வைக்கவும். கைகள் முழங்கால்களுக்கு முன்னால் இருக்க வேண்டும். இந்த நிலை உங்களுக்கு வசதியாக இருக்கும் வரை இதே நிலையில் சிறிதுநேரம் இருக்க வேண்டும்.
அடிப்படை நிலைக்குத் திரும்ப, மூச்சை வெளிவிட்டு மெதுவாக தலையையும், கைகளையும் செங்குத்தாக உயர்த்த வேண்டும். தொடைகளில் உள்ளங்கைகளை ஊன்றிக் கைகளைத் தாழ்த்தவும். நிதானமாக ஆழ்ந்து சுவாசிக்கவும். முயல் போன்ற அமரும் இந்த ஆசனம் உங்கள் தலைவலியை கட்டுப்படுத்தும்.
- பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினமான நேற்றுமுன்தினம் (ஜூன் 21) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தாங்கள் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
அந்த வகையில், பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வெளியிட்ட வீடியோவுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான அர்ச்சனா மக்வானா என்பவர் பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அப்படி அவர் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோவிலில் யோகா செய்த வீடியோவை பகிர்ந்தார்.
இந்த வீடியோ காட்சிகள் சீக்கிய சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து அர்ச்சனா மக்வானா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அர்ச்சனா மக்வானா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.