என் மலர்
நீங்கள் தேடியது "வாரணாசி"
- வாரணாசியின் கான்ட் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் [இன்று] சனிக்கிழமை அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.
- ரயில் நிலையத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
வாரணாசி ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200 வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் கான்ட் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று [சனிக்கிழமை] அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினரும், காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி), ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) குழுக்களும் தீயை அணைக்க உதவினர்.
தீவிரமான அளவு தீ பரவியபோதும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
Varanasi, UP: A short circuit at Varanasi Cantt station sparked a massive fire, destroying over 200 vehicles in the railway employees' parking area. Six fire brigade vehicles brought the blaze under control pic.twitter.com/n4mJpwSAKT
— IANS (@ians_india) November 30, 2024
#वाराणसी_कैंट_रेलवे_स्टेशन की पार्किंग में अचानक भीषण #आग गई लग गई, जिससे कई गाडियां जलकर राख हो गईं. शॉर्ट सर्किट के कारण आग लगने की आशंका जताई जा रही है. करीब 2 घंटे की कड़ी मशक्कत के बाद आग पर काबू पाया गया। pic.twitter.com/hpNAVkrmAm
— अधिवक्ता जयंत कुमार सिंह (@JaintKumarSing3) November 30, 2024
முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், ரயில் நிலையத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
- வாரணாசி நகரத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- காரின் சன்ரூப் கண்ணாடியை குரங்கு உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கார் மீது குரங்கு விழுந்ததில் காரின் சன்ரூப் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. அப்போது காருக்குள் விரிந்த குரங்கு உடனடியாக வெளியே குதித்து தப்பி ஓடியது.
தொழிலதிபர் முகேஷ் ஜெய்ஸ்வாலின் கார் கண்ணாடியை தான் குரங்கு உடைத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
காரின் சன்ரூப் கண்ணாடியை குரங்கு உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ வாரணாசி நகரத்தில் குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் படும் அவதியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ले बे ये गया तेरा सन रूफ ?? pic.twitter.com/n82LOoJKO4
— Raja Babu (@GaurangBhardwa1) November 19, 2024
- காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் [Saffron Rajesh] மிரட்டியுள்ளான்
- சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கினார்
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சமூக வலைத்தளத்தில் தனக்கு தொடர்ந்து பலாத்கார மிரட்டல் விடுத்த நபரை காங்கிரஸ் உள்ளூர் பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாரணாசியில் லால்பூர் பந்தேபூர் பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் சிங் [Saffron Rajesh Singh] என்ற நடுத்தர வயது நபர் சமூக வலைதளத்தில் தாகாத முறையில் பதிவிட்டு வந்ததுடன் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் கோபத்தில் இருந்த அந்த பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சாப்ரோன் ராஜேஷின் வீட்டுக்கே சென்று அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தாக்கியுள்ளார். சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து சாப்ரோன் ராஜேஷின் தனது வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தப்பித்துளான்.
वाराणसी : सोशल मीडिया पर कमेंटबाजी हुई मारपीट में तब्दील➡कमेंट करने वाले व्यक्ति के घर पहुंची कांग्रेस नेत्री ➡लाइव आकार नेत्री रोशनी कुशल जायसवाल ने किया हंगामा➡कमेंट करने वाले व्यक्ति,उनके परिवार के साथ दुर्व्यवहार का आरोप➡फेसबुक लाइव का वीडियो सोशल मीडिया पर हो रहा… pic.twitter.com/p5b5jcDb3p
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) September 15, 2024
இதனைகோடர்ந்து போலீசில் புகார் அளிக்க சென்ற பெண் பிரமுகர் ஊடகத்தினரிடம் பேசுகையில், சாப்ரோன் ராஜேஷ் கடந்த 4 வருடங்களாக சமூக வலைதளத்தில் தன்னை பற்றி தாகத முறையில் பேசி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டி வந்தான் என்று தெரிவித்துள்ளார்.
- கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
- மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவை நேற்றைய தினம் வாரணாசி கோர்டு தள்ளுபடி செய்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் சமீப காலமாக இந்து அமைப்புகள் கூறிவருகின்றன. மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடந்த தொடரப்பட்ட வழக்கை விசாரித்து மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது.
கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தில் தரையின்கீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட வாரணாசி மாவட்ட கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ணெதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவையும் நேற்றைய தினம் வாரணாசி கோர்டு தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
கோரக்பூரில் நடத்த கருத்தரங்கு ஒன்றில் சிவனின் வடிவமான விஷ்வநாதர் தோன்றிய முன் கதையை கூறிய அவர், ஞானவாபி என்பதே கடவுள் விஸ்வநாதர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக அதை மக்கள் மசூதி என்று அழைக்கின்றனர். இஸ்லாமியர்கள் இந்த வரலாற்று தவறை திருத்திக்கொள்ள வேண்டும். ஞானவாபியின் சுவர்கள் உரத்து கதறுகின்றன. ஞானவாபிக்குள் ஜோதிலிங்கமும் கடவுளர்களின் சிலைகளும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டது.
- தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று[ஆகஸ்ட் 17] [சனிக்கிழமை] அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரணாசியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றுகொண்டிருந்த சபர்மதி விரைவு ரெயில் உ.பியின் கான்பூர் மற்றும் பீம்சென் நிலையத்துக்கு இடையில் தண்டவாளத்தில் இருந்த தடையில் இடித்துள்ளது.
இதில் ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்ததை அறிந்து தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளை பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிறப்பு ரெயிலில் அதிகாரிகள் அகமதாபாத் அனுப்பிவைத்தனர்.
- ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது.
- திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.
பிரபல தொழில் அதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி-நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச் சண்ட் திருமணம்.
மும்பையில் வருகிற ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே நீதாஅம்பானி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு தனது மகன் திருமண அழைப்பிதழை சாமியின் பாதத்தில் வைத்து தரிசனம் செய்தார்.
நீதா அம்பானி, வாரணாசியில் உள்ள ஒரு தெருவுக்குள் நடந்து சென்று பட்டுச்சேலையினை வாங்கினார். அவர் பட்டுச் சேலைகளை பார்த்து கடை ஊழியர்களிடம் விசாரிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லக்கா பூட்டி பனாரசி ரக சேலைகளை வாங்கினார்.
- மோடி சென்ற வாகனத்தில் செருப்பு தூக்கி வீசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை.
தான் போட்டியிட்டு வென்ற தொகுதியான வாரணாசி தொகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றிருந்தார். அப்போது மோடி சென்ற வாகனத்தில் செருப்பு தூக்கி வீசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "பிரதமர் மோடி கான்வாய் மீது காலணி வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும்; ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநட்டே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், மோடியின் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தவறுதான். ஆனால், அவ்வாறு செய்வதற்கு அவர்கள், தங்கள் பிரதிநிதி மீது எவ்வளவு அதிருப்தி அடைந்திருப்பர் என புரிந்துகொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
- பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். இதனால் இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடக்கில் காங்கிரசை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தால் வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளார் ராகுல்.
நேற்று அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் வயநாட்டில் மறு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக பிரியங்கா காந்தி வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதுநாள்வரை உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி பொதுக்கூட்டங்களில் நாட்டின் பிரச்சனைகள் குறித்து தனது துணிகரமான பேச்சுகளால் பாஜகவின் செய்லகளை சரமாரியாக கேள்வி எழுப்புபவராக அறியப்படுகிறார்.
மக்களவைத் தேர்தலில் அவரின் சூறாவளிப் பிரச்சாரம் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவானந்தபுர எம்.பியுமான சசி தரூர் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராகுல் காந்தி ரேபரேலியை தேர்வுசெய்தது காங்கிரசுக்கு அவசியமான நகர்வு. அவர் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நான் ஆரம்பத்தில் இருந்து விரும்பினேன். அதேசமயம் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அங்கு நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறார்.
தற்போது பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாராளுமன்றத்தில் ஒரு சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி இருப்பார். அவர் தேர்தல் பிரச்சரத்தின்போது எப்படி செயல்பட்டார் என்று நாம் அனைவரும் பார்த்திருப்போம். பிரியங்கா ஒரு சிறந்த பேச்சாளர். பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குடும்ப அரசியல் என்று கூறி வரும் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள 15 எம்.பிக்கள் அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
+2
- வாரணாசி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.பி.யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர்.
- 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3-வது மிகப்பெரிய நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும்.
மோடி 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று வாரணாசி சென்றார். 20 ஆயிம் கோடி ரூபாய்களை விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கிற்கு செலுத்துவதை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொணடு பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
கங்கா தேவி என்னை மடியில் ஏந்திக் கொண்டது. இதனால் நான் வாரணாசியின் ஒரு பகுதியாகிவிட்டேன். வாரணாசி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.பி.யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர்.
ஜனநாயக நாடுகளில் 3-வது முறையாக ஒரு அரசை தேர்வு செய்வது அரிதிலும் அரிது. ஆனால் இந்திய மக்கள் அதை செய்துள்ளனர்.
பாபா விஷ்வநாத் மற்றும் கங்கா தேவி ஆசிர்வாதத்துடன், காசி மக்களின் அன்புடன், 3-வது முறையான உங்களுக்கு சேவை செய்ய நாட்டின் பிரதமராகியுள்ளேன்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3-வது மிகப்பெரிய நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும். உங்களின் நம்பிக்கை என்னுடைய மிகப்பெரிய சொத்து. இந்த நம்பிக்கை நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும், கடினமாக உழைக்கவும், உங்களுக்கு சேவை செய்யவும் உத்வேகம் அளித்துள்ளது. நான் இரவு பகலாக வேலை செய்வேன். உங்களுடைய கனவுகளை நிறைவேற்ற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
முன்னேற்ற இந்தியாவின் வலிமையான தூணாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளை கருதுகிறேன். அவர்களின் அதிகாரத்துடன் எனது 3-வது வருட ஆட்சி காலத்தை தொடங்கியுள்ளேன். அரசு அமைந்த உடன் முதல் முடிவு விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்கள் தொடர்பான குறித்து எடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 3 கோடி புதிய வீடுகள் கட்டினாலும் அல்லது பிரதமர் கிசான் சம்மன் நிதியை முன்னெடுப்பதாக இருந்தாலும், இந்த முடிவுகள் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவும்.
இன்றைய திட்டமும் வளர்ந்த இந்தியா என்ற பாதையை வலுப்படுத்தப் போகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் ரூ.20,000 கோடி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
- மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வெப்ப நிலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவதால் மக்கள் சொல்லிலடங்கா இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் பஞ்சம், ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் என நிலைமையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களின் நிலைமை இன்னும் மோசமானது ஆகும்.
நாட்டில் இதுவரை ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அரசியல் போட்டியில் அண்டை மாநிலமான அரியானா யமுனை நதி நீரை அடைத்து வைத்துள்ள நிலையில் தலைநகர் டெல்லி தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் கடந்த ஒன்றரை மாத காலமாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
நீர் வற்றிய நிலையில் கற்பாறைகளும், குப்பைக்கூளங்களும், உடைந்த படகுகளும் நதி மணலில் கிடப்பது காண்போருக்கு வெயிலின் கொடுமையைதெள்ளிதின் உணர்த்துகிறது. வற்றாத ஜீவ நதியான கங்கையின் நிலைமையே இப்படியாக இருக்கும் நிலையில் மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இமய மலையில் உருவாகி வங்கக்கடலில் கடக்கும் கங்கை நதி இந்து மதத்தில் புனத்தமனாதாக பராக்கப்படும் நிலையில் மக்கள் அதிகம் புழங்குவதால் மிகுந்த அழுக்கடைந்த நிலையில் மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
- புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனைத்து மதங்களிலும் வித்தியாசமான வகையில் பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் நிகழ்வது வழக்கும். அந்த வகையில் இந்து மதத்தைப் பின் பற்றும் மக்கள் முக்கியமாக கிராமங்களில் உள்ள மக்கள் தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று நம்புகின்றனர்.
இது சுத்த மூடநம்பிக்கை என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும் இன்றளவும் சில இடங்களில் இந்த சடங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இந்த சடங்கு வழக்கொழிந்தாலும், வட மாநில கிராமங்கள் இந்த சடங்கை கைவிடுவதாக இல்லை.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் சூழ புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
A wedding like no other ? Locals in Varanasi, UP arranged a "wedding" between a male and a female frog, in hopes of appeasing the rain gods and getting respite from the heat. We can't be sure if it works, but it makes for a whimsical tale for sure ?️☀️ pic.twitter.com/GKDOipKp8a
— Khabar Lahariya (@KhabarLahariya) June 13, 2024இதற்கிடையே தாய்லாந்தில் மழை வேண்டி, சிறுவர்களின் விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரமான டோரேமானின் பொம்மையை கூட்டுக்குள் வைத்து ஊர்வலமாக எடுத்துச்சென்று விழா நடத்துவது குறிப்பிடத்தக்கது.
- வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.
- ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வென்றார்.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வென்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று ரேபரேலி தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
எங்களை வெற்றிபெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி, உத்தர பிரதேசம் மற்றும் நாடுமுழுவதும் ஒற்றுமையாக போராடியது. இந்த முறை சமாஜ்வாதி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக போராடினார்கள்.
அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவையும், ரேபரேலியில் என்னையும், உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களையும் வெற்றிபெறச் செய்தீர்கள்.
ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் மாற்றிவிட்டோம் என பொதுமக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். நாட்டின் பிரதமர் அரசியல் சட்டத்தை தொட்டால், மக்கள் அவரை என்ன செய்வார்கள் என்று பாருங்கள்.
பா.ஜ.க. அயோத்தி தொகுதியை இழந்தது. அயோத்தியில் மட்டுமல்ல, வாரணாசியிலும் பிரதமர் பிழைத்தார். வாரணாசியில் என் சகோதரி போட்டியிட்டிருந்தால் பிரதமர் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார் என தெரிவித்தார்.