search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாரணாசியில் பிரியங்கா போட்டியிட்டிருந்தால்... எச்சரிக்கை விடுத்த ராகுல் காந்தி
    X

    வாரணாசியில் பிரியங்கா போட்டியிட்டிருந்தால்... எச்சரிக்கை விடுத்த ராகுல் காந்தி

    • வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.
    • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வென்றார்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வென்றார்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று ரேபரேலி தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    எங்களை வெற்றிபெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி, உத்தர பிரதேசம் மற்றும் நாடுமுழுவதும் ஒற்றுமையாக போராடியது. இந்த முறை சமாஜ்வாதி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக போராடினார்கள்.

    அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவையும், ரேபரேலியில் என்னையும், உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களையும் வெற்றிபெறச் செய்தீர்கள்.

    ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் மாற்றிவிட்டோம் என பொதுமக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். நாட்டின் பிரதமர் அரசியல் சட்டத்தை தொட்டால், மக்கள் அவரை என்ன செய்வார்கள் என்று பாருங்கள்.

    பா.ஜ.க. அயோத்தி தொகுதியை இழந்தது. அயோத்தியில் மட்டுமல்ல, வாரணாசியிலும் பிரதமர் பிழைத்தார். வாரணாசியில் என் சகோதரி போட்டியிட்டிருந்தால் பிரதமர் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார் என தெரிவித்தார்.

    Next Story
    ×