என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜனநாயக நாடுகளில் 3-வது முறை தொடர்ந்து வெற்றி என்பது அரிதிலும் அரிது: வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு
- வாரணாசி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.பி.யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர்.
- 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3-வது மிகப்பெரிய நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும்.
மோடி 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று வாரணாசி சென்றார். 20 ஆயிம் கோடி ரூபாய்களை விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கிற்கு செலுத்துவதை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொணடு பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
கங்கா தேவி என்னை மடியில் ஏந்திக் கொண்டது. இதனால் நான் வாரணாசியின் ஒரு பகுதியாகிவிட்டேன். வாரணாசி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.பி.யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர்.
ஜனநாயக நாடுகளில் 3-வது முறையாக ஒரு அரசை தேர்வு செய்வது அரிதிலும் அரிது. ஆனால் இந்திய மக்கள் அதை செய்துள்ளனர்.
பாபா விஷ்வநாத் மற்றும் கங்கா தேவி ஆசிர்வாதத்துடன், காசி மக்களின் அன்புடன், 3-வது முறையான உங்களுக்கு சேவை செய்ய நாட்டின் பிரதமராகியுள்ளேன்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3-வது மிகப்பெரிய நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும். உங்களின் நம்பிக்கை என்னுடைய மிகப்பெரிய சொத்து. இந்த நம்பிக்கை நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும், கடினமாக உழைக்கவும், உங்களுக்கு சேவை செய்யவும் உத்வேகம் அளித்துள்ளது. நான் இரவு பகலாக வேலை செய்வேன். உங்களுடைய கனவுகளை நிறைவேற்ற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
முன்னேற்ற இந்தியாவின் வலிமையான தூணாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளை கருதுகிறேன். அவர்களின் அதிகாரத்துடன் எனது 3-வது வருட ஆட்சி காலத்தை தொடங்கியுள்ளேன். அரசு அமைந்த உடன் முதல் முடிவு விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்கள் தொடர்பான குறித்து எடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 3 கோடி புதிய வீடுகள் கட்டினாலும் அல்லது பிரதமர் கிசான் சம்மன் நிதியை முன்னெடுப்பதாக இருந்தாலும், இந்த முடிவுகள் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவும்.
இன்றைய திட்டமும் வளர்ந்த இந்தியா என்ற பாதையை வலுப்படுத்தப் போகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் ரூ.20,000 கோடி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்