என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆப்கானிஸ்தான்
- சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் போராட்டம்
- ஐ.நா. சபையில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டன தீர்மானம் கொண்டு வந்தது
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் இதுகுறித்த முழு விவரம் சரியாக தெரியவரவில்லை. இதுகுறித்து சுவீடன் தூதுரக அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அது தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.
இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் கல்லூரி செல்ல தடைவிதித்துள்ளது
- சினிமா, பார்க் போன்ற இடங்களிலும் வேலை செய்யவும் தடை
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடைவிதித்தது. அதன்பின் என்.ஜி.ஓ.-வில் பணிபுரிய தடைவித்தது. பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் வேலை செய்ய தடைவித்தது.
அந்த வரிசையில் தற்போது காபூல் மற்றும் நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு (பியூட்டி பார்லர்) தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்கள் உரிமை பறிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதுவும் ஒன்றாகிறது.
ஏற்கனவே ஆண்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். ஆண்கள் வீட்டு சுமையை ஏற்கமுடியாத நிலையில், பெண்கள் அதனை ஏற்க அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தற்போது அழகு நிலையத்திற்கு தடைவிதித்தால், நாம் என்ன செய்ய முடியும்'' என மேக்கப் கலைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
மேலும், ''ஆண்களுக்கு வேலை இருந்தால், நாங்கள் வீட்டில் இருந்து வெளியே வரமாட்டோம். நாங்கள் தற்போது என்ன செய்யும்?. பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?. நாங்கள் சாக வேண்டும் என விரும்புகிறீர்களா?'' என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.
காபூலில் வசித்து வரும் நபர் ஒருவர் ''தலிபான் அரசாங்கம் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது இஸ்லாம் மற்றும் நாடு ஆகியற்றை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்'' என்றார்.
ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
- உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.
- ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.
அதன்பின் தலிபான்கள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியது. அந்நாட்டுக்கு 50 ஆயிரம் மெட்ரிக்டன் கோதுமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது.
இந்த நிலையில் உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் 10 ஆயிரம் மெட் ரிக் டன் உணவு தானியங்களுடன் சேர்த்து கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் என 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் அனுப்பப்படுகின்றன.
இந்த தானியங்கள் ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பப்படுகிறது. இதில் 2,500 மெட்ரிக் டன் கோதுமையின் முதல் தவணை இந்த வாரம் ஆப்கானிஸ்தானின் ஹெ ராத் நகருக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா உதவி வருகிறது.
- ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி கொலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு.
- குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதில் அகமது உள்பட அவரது கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்
இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- விபத்துக்கு மினிபஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றச்சாட்டு.
- ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அடிக்கடி விபத்து.
வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.
சார்-இ-புல் மாகாணத்தில் தரமற்ற சாலைகள் கொண்ட மலைப் பகுதியில் மினி பஸ் சென்றுக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உள்ளூர் காவல்துறைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் தின் முகமது நசாரி, விபத்துக்கு மினிபஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அடிக்கடி போக்குவரத்து விபத்துக்கள் நடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
- ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பைசாபாத்தில் இருந்து தென் கிழக்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவானது. 120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
- ஆப்கானிஸ்தானில் 2021, ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது.
- அன்று முதல் பெண்களின் சுதந்திரம் பல்வேறு வழிகளில் தலிபான்களால் பறிக்கப்பட்டுள்ளது.
காபுல்:
ஆப்கானிஸ்தானில் 2021, ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் கல்வி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களின் சுதந்திரம் பல்வேறு வழிகளில் தலிபான்களால் பறிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உலகம் முழுவதும் இஸ்லாமிய மத பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மதத்தினர் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
அந்நாட்டின் பஹ்லன் மற்றும் தக்ஹர் மாகாணங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையான இன்று பெண்கள் வீட்டை விட்டு வெளியே குழுவாக செல்லக்கூடாது என தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஏற்கனவே பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொது இடங்கள், பூங்காக்களுக்கு செல்லக் கூடாது என்றும், கருத்தடை மாத்திரைகளை பெண்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் தலிபான்கள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
- ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அரசு, பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
- பெண்களுக்கு மேலும் ஒரு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அரசு, பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு மேலும் ஒரு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் சரியாக ஹிஜாப் அணியாததால் தடை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளை கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
- தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
காபூல்:
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா., மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.
இது குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா. அமைப்பில் ஆப்கான் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் காக்கும் கருவிகளை இயக்க முடியாது" என கூறப்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ஆப்கானிஸ்தான் போரில் வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
- மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்கின்றனர்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலிபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய அரசின் கட்டுப்பாடுகளும் அவர்களை இன்னலுக்கு ஆளாக்கி இருக்கின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யூனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என வேதனை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் உயிரிழந்தனர். அவற்றை எடுத்து அவர்கள் விளையாடியபோதும், உலோகத் துண்டுகளை எடுத்து விற்பதற்காக சேகரித்தபோதும் இச்சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கும் இதுபற்றிய போதிய விவரங்கள் தெரிவதில்லை. நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், நாட்டில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
- ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே தாக்குதல் நடந்தது.
- இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளது. மாலிக் அசார் சதுக்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார்.
அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்புப் படையினர் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச் செய்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்புப் படையினர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்