search icon
என் மலர்tooltip icon

    ஆப்கானிஸ்தான்

    • நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்கவும் தடை விதித்துள்ளனர்.
    • நங்கர்ஹார், காந்தஹாரில் மாணவர்கள் தலிபான்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம், பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க இடைக்கால தடை விதித்தது. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் நவ்கர்ஹார் பல்கலைக்கழகத்தில் தலிபான்கள் பெண் கல்விக்கு தடை விதித்ததை எதிர்த்து மாணவர்கள் தேர்வு எழுதாமல் புறக்கணித்தனர்.

    மேலும் நங்கர்ஹார், காந்தஹாரில் மாணவர்கள் தலிபான்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து இஸ்லாமிய சட்டத்தில் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளனர். நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்கவும் தடை விதித்துள்ளனர்.

    பெண்கள் வேலைக்கு செல்லவும், பூங்காக்கள், ஜிம்களுக்கு செல்லவும் தடை உள்ளது. பொது இடங்களில் தலை முதல் கால் வரை மூடியபடி ஆடைகள் அணிய உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும் பெண்கள், ஆண்களின் துணை இல்லாமல் வெளியே பயணம் செய்யவும் தடை விதித்து உள்ளனர்.

    இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    • ஆப்கானிஸ்தால் பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்.

    அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    • தாக்குதலின் போது பயங்கரவாதிகள் 2 பைகளில் வெடிபொருட்களை ஓட்டலுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர்.
    • சீனர்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷார்-இ-நவ் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே பயங்கரவாத கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை சுட்டுக் கொன்றனர்.

    சீனர்கள் வழக்கமாக தங்கும் விடுதி அருகே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும் போது, 'தாக்குதலின் போது பயங்கரவாதிகள் 2 பைகளில் வெடிபொருட்களை ஓட்டலுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர். சீனர்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த தலிபான் அதிகாரிகள் மீதும் கையெறி குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர்.

    ஓட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டினர் பயத்தில் அலறினர். தப்பிக்க நினைத்து பால்கனியில் இருந்து குதித்த 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

    இந்த பயங்கரவாத தாக்குதல் சீன தூதர் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு மந்திரியுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்திய மறுநாள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • கொலை குற்றம் சாட்டப்பட்ட நபர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியதால் அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கைப்பற்றினார்கள்.

    அதன்பிறகு அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண் கல்விக்கு தடை, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்று தெரிவித்தனர்.

    அதேபோல் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தடைகளை கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடந்த தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா பொது மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி, திருடர்களின் கை, கால்களை வெட்டுதல் உள்ளிட்ட சட்டங்களை முழுமையாக அமல்படுத்துமாறு நீதிபதிகளுக்கு உத்தரவிட்டேன்.

    இதையடுத்து கொலை குற்றம் சாட்டப்பட்ட நபர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நபர் கடந்த 2017-ம் ஆண்டு ஒருவரை கொன்று மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திருடி சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த மரண தண்டனை மேற்கு மாகாணத்தின் தலைநகரான பாராவில் நிறைவேற்றப்பட்டது.

    இதுதொடர்பாக தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹில்லா முஜாகித் கூறும்போது, 'மேற்கு பாரா மாகாணத்தில் 2017-ம் ஆண்டு ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆப்கானிஸ்தானில் பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் மூலம் 1990-ம் ஆண்டுகளில் இருந்த தலிபான்கள் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான தண்டனைகள் மீண்டும் திரும்பியுள்ளது.

    • வெடிகுண்டு வெடித்ததில் பேருந்து, அருகில் உள்ள வாகனம் மற்றும் கடைகள் சேதமடைந்தன.
    • கொராசன் மகாண ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் இன்று காலையில் அரசு ஊழியர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பால்க் மாகாணத்தின் மசார்-இ ஷரிப் நகரில் சாலையோரம் இருந்த வண்டிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. ஹியரடன் எரிவாயு மற்றும் பெட்ரோலியத் துறை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அப்பகுதியை கடந்தபோது, வெடிகுண்டு வெடித்தது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. மேலும் அருகில் உள்ள வாகனம் மற்றும் அங்கிருந்த கடைகளும் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன.

    இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் அமைப்பின் துணை அமைப்பான கொராசன் மகாண ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலிபான்களின் போட்டி அமைப்பான இந்த ஐஎஸ் அமைப்பானது, ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் தூதரை கொல்லும் முயற்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
    • ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரின் அலுவலகம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூதரக தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பது யார் என்பது உடனடியாக தெரிய வில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் தூதரை கொல்லும் முயற்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. தூதர் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரின் அலுவலகம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஹெக்மத்யாரை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

    • பள்ளியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
    • அனைத்து ஆப்கன் குழந்தைகளுக்கும் பயமின்றி பள்ளிக்குச் செல்ல உரிமை உண்டு.

    ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் நகரில் உள்ள மதரசா பள்ளியில் திடீரென்று குண்டு வெடித்தது. அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

    இதில் 19 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.

    இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா- கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானிஸ்தான் குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்ற பிறகு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மசூதிகள், மக்கள் கூடும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார்.
    • 2 நாடுகளிலும் நடந்து வரும் போராட்டங்களால் அங்கு வசித்து வரும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு.

    ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதையடுத்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தலிபான்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதால் பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.

    தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை தொடர்ந்து ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதேபோல பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். இதிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்த 2 நாடுகளிலும் நடந்து வரும் போராட்டங்களால் அங்கு வசித்து வரும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

    ஈரான் மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் போராட்டங்கள் அந்நாட்டு பிரச்சினை. இதனால் ஆப்கானிஸ்தானியர் யாரும் இதில் பங்கேற்க கூடாது என்று தலிபான் துணை மந்திரி அப்துல் ரகுமான் ரசித் தெரிவித்து உள்ளார்.

    • குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்க தலிபான்கள் முடிவு செய்தனர்.
    • ஒவ்வொருவருக்கும் 21 கசையடி முதல் 39 கசையடி வரை கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் சட்ட திட்டங்களையும் மாற்றியுள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள தலிபான்கள் 1990ம் ஆண்டுகளில் கடைபிடித்த அதே வகையான தண்டனை முறையை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர்.

    அதன்படி ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்க தலிபான்கள் முடிவு செய்தனர்.

    குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் நிகழ்ச்சியை காண வருமாறு முஜாகிதீன் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் பழங்குடி தலைவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு லோகார் மாகாண கவர்னர் அலுவலகம் அறிவிப்பு விடுத்தது.

    அதன்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 21 கசையடி முதல் 39 கசையடி வரை கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    • ஷரியா சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்கும் தலிபான்களின் நோக்கத்தை இந்த தண்டனை காட்டுகிறது.
    • 1990களின் பிற்பகுதியில் பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி போன்ற தண்டனை நிறைவேற்றப்பட்டது

    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தில் கள்ளத்தொடர்பு, திருட்டு மற்றும் வீட்டை விட்டு ஓடுதல் போன்ற குற்றத்திற்காக 19 பேருக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை உச்ச நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். தக்கார் மாகாணம் தலோகன் நகரில் தண்டனை விதிக்கப்பட்ட 10 ஆண்கள் மற்றும் 9 பெண்களுக்கு 39 முறை கசையடி வழங்கப்பட்டதாகவும், இந்த தண்டனை கடந்த 11ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நகரின் பிரதான மசூதியில் பெரியவர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் நீதிமன்ற அதிகாரி கூறியுள்ளார்.

    தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கசையடி மற்றும் பிரம்படி தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கான முதல் அதிகாரப்பூர்வ தகவல் இது என கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு, 1990களின் பிற்பகுதியில் தலிபான்களின் முந்தைய ஆட்சியின்போது, தலிபான் நீதிமன்றங்களில் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்களுக்கு பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி மற்றும் கல்லெறிதல் ஆகியவற்றை மேற்கொண்டது.

    அனைத்து ஷரியா சட்டங்களையும் அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக சமீபத்தில் தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தால் பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    காபூல்

    ஆப்கானிஸ்தானை கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    6-ம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் தற்போது தடை விதித்துள்ளனர். முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர்.

    ஆனால் தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை விதித்துள்ளனர். அதேபோல் பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த தடைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது.
    • பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தனர். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவிகளை தலிபான்கள் தாக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

    வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவுன் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு மாணவிகள் பலர் காத்து இருக்கிறார்கள். அவர்களை பல்கலைக்கழகத்துக்குள் நுழைய விடாமல் தலிபான்கள் தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் ஒரு அதிகாரி மாணவிகளை தாக்கி விரட்டியடிக்கிறார். இதனால் மாணவிகள் அங்கிருந்து ஓடுகிறார்கள்.

    பர்தா அணியாததால் பல்கலைக் கழகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் மாணவிகள் அனைவரும் சரியாக பர்தா அணிந்து இருந்தனர். ஆனாலும் அவர்களை வகுப்புக்கு செல்ல விடாமல் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.

    மாணவிகளை தாக்கிய அதிகாரி தலிபான் அரசாங்கத்தின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அதிகாரி என்பது தெரிய வந்தது.

    ×