ஆன்மிக களஞ்சியம்

மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

Published On 2023-07-30 05:26 GMT   |   Update On 2023-07-30 05:26 GMT
  • துவார பாலகர்களுக்கு அபிஷேகம் செய்து வணங்கிய பின்பே விநாயகருக்கு அபிஷேகம்.
  • மணக்குள விநாயகர் கோவிலில் படிகலிங்கம் உள்ளது.

காலசந்தி பூஜை:-

மணக்குள விநாயகர் கோவிலில் இந்த பூஜை காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு எண்ணை, பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பால விநாயகர், பால முருகன், உற்சவ மூர்த்திகள், துவார பாலகர்கள், சண்டிகேஷ்வரர் ஆகியோருக்கும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. துவார பாலகர்களுக்கு அபிஷேகம் செய்து வணங்கிய பின்பே விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

உச்சிக்கால பூஜை:-

இந்த பூஜை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பக்தர்கள் பணம் செலுத்தி இந்த பூஜையை செய்கின்றனர். இந்த பூஜை 1 மணி நேரம் நடைபெறுகிறது.

சாயரட்சை பூஜை:-

இந்த பூஜை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு எண்ணை, பால் போன்ற பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பூஜை 1 மணி நேரம் நடைபெறுகிறது.

அர்த்த சாம பூஜை:-

இந்த பூஜை இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு எண்ணை, பால் போன்ற பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பூஜை 15 நிமிடம் நடைபெறுகிறது. பூஜை முடிந்ததம் நடை சாத்தப்படுகிறது.

படிகலிங்க பூஜை:-

மணக்குள விநாயகர் கோவிலில் படிகலிங்கம் உள்ளது. இங்கு விநாயகருக்கு மட்டுமல்லாமல் படிக லிங்கத்திற்கும் தினமும் பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜை காலை 11 மணிக்கு நடத்தப்படுகிறது. படிக லிங்கத்திற்கு பால், எண்ணை, விபூதி, பழ வகைகள் போன்ற பொருள்களால் 1 மணிநேரம் அபிஷேகம் செய்யப்படுகிறது.

திரு பள்ளி எழுச்சி

மணக்குள விநாயகர் கோவிலில் காலை 6 மணிக்கு திருபள்ளி எழுச்சி பாடப்படுகிறது. திருப்பள்ளி எழுச்சி 15 நிமிடம் ஓதப்படுகிறது.இந்த திரு பள்ளி எழுச்சிக்கு பிறகுதான் கோவிலில் ஆராதனை தொடங்குகிறது. அபிஷேக நேரங்கள் விஷேச காலங்களில் மாறுபடுகிறது.

Tags:    

Similar News