பதினெட்டாம் படி பூஜை ஏன் நடத்தப்படுகிறது?
- பதினெட்டு படிகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு புராணம் என்று 18 புராணங்கள் உண்டு என்பது ஐதீகம்.
- ஒவ்வொரு படியையும் ஒரு மலை தெய்வம் என்று சங்கல்பித்து படி பூஜை நடத்தப்படுகிறது.
சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலின் சிறப்பானதும் தலைமயானதுமான பூஜை, பதினெட்டாம் படி பூஜை தான் அதிகம் செலவு ஆகும் பூஜையும் இதுதான்.
மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த பூஜை, வேறு எந்த கோவில்களிலும் இல்லாத ஒன்று.
பதினெட்டு படிகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு புராணம் என்று 18 புராணங்கள் உண்டு என்பது ஐதீகம்.
ஒவ்வொரு படியையும் ஒரு மலை தெய்வம் என்று சங்கல்பித்து படி பூஜை நடத்தப்படுகிறது.
சபரிமலை பொன்னம்பலமேடு சௌண்டல் மலை, நாகமலை, சுந்தரமலை, சிற்றம்பலமேடு, கல்கிமலை, மாதாங்கமலை, மைலாடும்மேடு, ஸ்ரீபாதமலை, தேவர் மலை, நிலய்க்கல்மலை, தலப்பாலைமலை, நீலிமலை, கரிமலை, புதுசேரி, காளகெட்டி, இஞ்சிப்பாறை என்னும் பதினெட்டு மலைகளின் தெய்வங்களை சாந்திபடுத்தவே பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.
சபரிமலையில் இரவு அத்தாழ பூஜைக்கு முன்பு பதினெட்டாம்படி பூஜை நடக்கும்.
விசேஷமுள்ள இந்த பிரதான பூஜையை, சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமைப் புரோகிதர் மட்டுமே செய்ய வேண்டும்.