ஆண்டு முழுவதும் கந்தனுக்கு எண்ணெய் அபிஷேகம்
- நவகிரகங்கள் ஒன்றையன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
- கி.பி. 11&ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும் நடுவில் இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமசகந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.
தீபாவளி நீங்கலாக ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. (தேன் அபிஷேகம் பிரியமானதாம்)
முருகன் இத்தலத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால், வள்ளி-தெய்வானை பிரகாரத்தில் தனித்திருக்கின்றனர்.
முருகன், கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு, "திகடச் சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து கந்தபுராணம் எழுத பணித்த தலம்.
கச்சியப்பருக்கு பெருமைசேர்க்கும் பீடம் எதிரே முருகப்பெருமான் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.
நவகிரகங்கள் ஒன்றையன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
கி.பி. 11&ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது.
வள்ளலாருக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள குமரக்கோட்டம் கோவிலில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
அன்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும்.
பின்னர் காலை 8 மணிக்கு உற்சவ சுவாமிகளாக சுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வாணை கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால் காவடி மற்றும் புஷ்ப காவடி எடுத்து வந்து சுவாமியை வலம் வந்து தரிசிப்பர்.
கந்தபுராணம் அரங்கேறிய இடம் இக்கோவில் வளாகத்தில் உள்ளதால் இக்கோவில் சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.