ஆன்மிக களஞ்சியம்

எல்லா சிலைகளும் மரகத பச்சை கல்லில் உள்ள அதிசயம்

Published On 2024-11-20 12:00 GMT   |   Update On 2024-11-20 12:00 GMT
  • இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.
  • முருகன் சிலை கூட முன்பு மரகத பச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டு இருக்கலாம்.

இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.

முருகன் சிலை கூட முன்பு மரகத பச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டு இருக்கலாம்.

இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரகத பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த ஸ்தலத்தை பாடியுள்ளார். திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார்.

மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனை திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு "சீதளவாரிஜ பாதா நமோ நம" என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.

இந்த தலத்தில் முருகன் பிரம்ம சாந்த மூர்த்தி தோற்றத்தில் உள்ளார். பிரம்மனின் செருக்கை அடக்கி, படைத்தல் தொழிலை மேற்கொண்டு அடைந்த உருவமாகும்.

ஒரு முகமும், நான்கு கரங்களும் விளங்கும்படியாக மூலவர் உள்ளார். வலது கரத்தில் அபயம் அளித்து பின்பக்க வலது கரத்தில் ஜபமாலையும் முன்பக்க இடது கரம் இடுப்பிலும் பின்பக்க இடது கரத்தில் கமண்டலமும் ஏந்தி தம்மைத் தொழுவோர்க்கு அபயம் அளித்துக் காக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ளார்.

சூரனை அழித்து வெற்றி பெற்ற முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்யச் செல்லும் வழியில் சிறுவாபுரியில் சற்று இளைப்பாறி பிறகு இப்பசுமைச் சோலையில் பாலசுப்பிரமணியராய் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான். இத்தலத்து சுப்பிரமணியரை வழிபட நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.

Similar News