ஆன்மிக களஞ்சியம்
- சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள்.
- சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.
ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்க படுகிறார்.
இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஐயர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள்தான் ஐயன் அய்யனார்.
சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள்.
சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.
அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது.
ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.