வேறு எங்கும் இல்லாத மிகப்பெரிய மரகத லிங்கம்
- முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.
- பின்புறத்தில் இருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார்.
சந்ததமும், அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப் பெருமான், நம் சிந்தையைக் கவர்கிறார். கலியுகத்தின் பேசும் கடவுளான பாலசுப்பிரமணியப் பெருமானின் அருட்பார்வை நம்மை நோக்கிப் பாய்ந்துவர, சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள் நாம் வேண்டும் வரங்களை அள்ளி அளித்தர, உடலும் உள்ளமும் லேசாகி மிதந்து வர, நம்மை நாம் இழந்து அவன் திருவடிகளில் சரணாகிறோம்.
முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.
முருகப் பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப் பச்சையில் கரும்பச்சை வைரம்போல் பிரகார ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.
அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு 'மயிலுமாடி நீயுமாடி வரவேணும்' என்று பாடியதற்கு இணையாக, இங்கு மைந்துமயில் உடன் ஆடிவர வேணும்' என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள்.
அருணாசலேசுவரர், அபீத குஜாம்பகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம் பயிர்புடன் கூடிய வள்ளி நங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை தைத் தலம் பற்றும் திருமண காட்சியாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண் மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக்கண் கோடி வேண்டும்.
பின்புறத்தில் இருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார்.
மிக நேர்த்தியான வேலைப்பாடு, இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச் சிறப்பாக வள்ளி மணவாளப் பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.