ஆன்மிக களஞ்சியம்

அனைத்தையும் நடைமுறைப்படுத்தும் சூரியன்

Published On 2024-02-19 12:26 GMT   |   Update On 2024-02-19 12:26 GMT
  • சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும், தாமரையை மலரச் செய்யும்
  • மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான் சூரியன்.

மாறிக்கொண்டே இருக்கிற உலகில், அதனை நடைமுறைப்படுத்துபவனே சூரியன்!

சூரியனின் கிரணம், பனியை உருக வைக்கும்.

சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும், தாமரையை மலரச் செய்யும், ஆம்பலை வாட வைக்கும்.

இலைகளை காயச் செய்யும், ஈரத்தை உலரவைக்கும், வெப்பம் ஏறிய புழுக்கத்தில், ஈசல் போன்ற உயிரினங்களைத் தோற்றி வைக்கும்.

பொருளின் இயல்புக்கு உகந்தபடி, மாறுபாட்டை ஏற்படுத்தும், கர்மவினையின் இயல்பை ஒட்டி, மாறுபாட்டை நடைமுறைப்படுத்தும்.

மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான் சூரியன்.

அவனுடைய வெப்பம், குளிச்சியை சந்தித்த சந்திர கிரணத்துடன் இணைந்து ஆறு பருவ காலங்களை உருவாக்குகிறது.

தட்பவெட்பங்கள் தான் உலகச் சூழல் என்கிறது சாஸ்திரம், இடைவெளியை நிரப்பும் இந்த இரு பொருள்களின் மூலாதாரம் அவன் என்கிறது வேதம் மோட்சத்தின் நுழைவாயில் சூரியன் என்கிறார் வராகமிஹிரர்.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களைப் படிப்படியே அடையச் செய்பவன் சூரியன்!

கர்மத்தை முற்றிலும் துறந்த துறவியும், கர்மமே கடவுள் என அதில் ஒட்டிக் கொண்டு போராடும் வீரனும் சூரிய மண்டலத்தைப் பிளந்து, வீடுபேறு அடைகின்றனர் என்கிறது புராணம்.

Tags:    

Similar News