null
ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?
- "கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போவோம் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.
- பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.
"கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போவோம் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.
பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர்.
இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
அய்யப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள்.
அவர்களின் வழி பின்பற்றி அய்யப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.
அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும்.
அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும்.
கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.