கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-06-25 04:07 GMT   |   Update On 2024-06-25 04:08 GMT

24.6.2024 முதல் 30.6.2024 வரை

எந்த செயலையும் யோசித்து திட்டமிட்டு செயல்படும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சுக்ரன் சேர்க்கை. ஆன்ம பலம் பெருகும். மனதில் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். ஆன்மீகத் தலைவர் அல்லது மூத்த அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நல்லவர்கள் நட்பால் நன்மை உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். ஜென்மச் சனியின் தாக்கம் குறைவதால் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.தொழில், வேலையில் இருந்த இழுபறி நிலை நீங்கும். பாக்கித் தொகை வசூலாகும். கடன் தொகை வசூலாகும். இதனால் கடன் சற்று குறையும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள்.

தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் செயல் வடிவம் பெறும். சக ஊழியர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான அங்கீகாரம் உண்டு. உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ்ந்த நிலை இனி இருக்காது. பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையில் கணிசமான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் புரிதல் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் அலுப்பு சிறு சிறு அசதி இருக்கும். வீர பத்திரரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News