கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-07-15 02:39 GMT   |   Update On 2024-07-15 02:40 GMT

15.7.2024 முதல் 21.7.2024 வரை

குதூகலமான வாரம். குடும்ப ஸ்தான ராகுவின் தாக்கம் குறைவதால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப்புள்ளியாகும். கணவன், மனைவி குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் நிலவும்.மனக் கவலைகள் அகலும். வீண் விரயங்கள் குறையும்.அதிக முதலீடு செய்ய வேண்டிய புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சில்லரை வணிகர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம்.

வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய சொந்த தொழில் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்சியை அதிகரிக்கும். வைத்தியச் செலவு குறையும். சிலர் உடன் பிறப்புகளுக்காக சொத்தை விட்டுக் கொடுப்பார்கள்.சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகவும்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரணச் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு, வாகனம், வயல்வெளி, தோட்டம் வாங்கும் யோகம் உள்ளது. கண்ணணூர் மாரியம்மனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News