ரூ. 23 லட்சம் விலையில் புது பைக் அறிமுகம் - பிஎம்டபிள்யூ அதிரடி
- பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் புது பைக் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது.
- இந்த மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்த மாதத்திலேயே துவங்குகிறது.
பிம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் 2022 R 1250 RT டூரிங் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 23 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த மாடலின் வினியோகம் இந்த மாதத்திலேயே செய்யப்படுகிறது.
புதிய R 1250 RT மோட்டார்சைக்கிள் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. அதன்படி இந்த மாடல் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், டூரிங்கிற்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி லக்கேஜ் ராக், பேனியர் கேஸ்கள், ஹீடெட் க்ரிப், சீட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கிளட்ச், பிரேக் மற்றும் கியர் லீவர் உள்ளிட்டவைகளை ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளது. எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், ஸ்டீரிங் ஸ்டேபிலைசர், குரூயிஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ R 1250 RT மாடலில் 1254சிசி, பாக்சர் ட்வின், லிக்விட் கூல்டு DOHC என்ஜின், பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 132.2 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் அலுமினியம் கேஸ்ட் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.