சினிமா செய்திகள்

சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு

Published On 2024-08-28 02:56 GMT   |   Update On 2024-08-28 06:51 GMT
  • சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது.
  • ரேவதி சம்மத் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது முதல், பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

பின்னர் முதன்முறையாக பெயர் குறிப்பிட்டு மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா பாலியல் தொல்லை புகார் கூறினார். மலையாள சினிமாவில் நடிக்க வந்த தன்னை பாலியல் ரீதியாக அணுகினார் என்று சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித்-மீது புகார் கூறியிருந்தார்.

இந்த புகாரை அடுத்து சினிமா அகாடமி தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு மேலும் ஒரு மலையாள நடிகை, நடிகர் சித்திக் ஹோட்டலில் வைத்து அத்துமீறியதாக புகார் கூறினார். இதைத்தொடர்ந்து நடிகர் சித்திக் மலையாள சினிமா அசோசியேசன் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஹேமா கமிஷன் அறிக்கையைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், ராஜினாமாக்களும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது என்று ரேவதி சம்பத் கூறி இருந்தார். அதில் சித்திக் ரேவதி சம்மத்திடம் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பில் பேசியதாகவும் படம் குறித்து பேசுவதற்கு ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் புகார் அளித்தார்.

இந்த நிலையில் நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில் கேரள போலீசார் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News