நியூஸ்18 இந்தியா வழங்கும் அம்ரித் ரத்னா விருதை வென்ற நடிகர் தனுஷ்
- தனுஷ் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
- அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார்.
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பாடலான கோல்டன் ஸ்பாரோ மற்றும் காதல் ஃபெயில் ஆகிய இரண்டு பாடல்களும் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
இதை தொடர்ந்து தனுஷ் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நியூஸ் 18 இந்தியா வழங்கும் கௌரவ விருதான அம்ரித் ரத்னா 2024 விருதை வென்றார் நடிகர் தனுஷ். இந்த விருதை தனுஷுக்கு விளையாட்டு வீராங்கனையான பிடி உஷா வழங்கினார்.
மேடையில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு " நியூஸ் 18 இந்தியா நிறுவனத்திற்கு நன்றி இந்த விருதை எனக்கு அழங்கியதற்கு . why this kolaver di ? பாடல் உருவான விதத்தை பற்றி கூறினார். அதன் பின் அப்பாடலின் இரண்டு வரிகளும் மேடையில் பாடினார். இந்த காணொளி தற்பொழுது சமுருக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.