ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட ரஷிய நடிகை - அதிர்ச்சி வீடியோ
- ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலருடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
- கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கமிலா தியானம் செய்துள்ளார்.
தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் தீவுக்கு சென்ற ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சச அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
ரஷிய நடிகை ராட்சச அலையில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலருடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து அவர் தியானம் செய்துள்ளார்.
அப்போது திடீரென வந்த ராட்சச அலை அவரை கடலுக்குள் இழுத்து சென்றது. அப்போது அருகில் இருந்த நபர் நடிகையை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் சில கி.மீ. தொலைவில் ரஷிய நடிகை சடலமாக மீட்கப்பட்டார்.
அந்த தீவில் கனமழை பெய்து வருவதால், கடற்கரைக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.