சினிமா செய்திகள்

ப்ரெக்னன்சி பைபிள் புத்தகத்திற்கு எதிரான வழக்கு: கரீனா கபூருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2024-05-11 14:24 GMT   |   Update On 2024-05-12 10:59 GMT
  • பாலிவுட் நடிகை கரீனா கபூர் ப்ரெக்னன்சி பைபிள் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
  • கரீனா கபூர் மலிவான விளம்பரத்திற்காக பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்துள்ளார். கரீனா கபூர் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அந்த சமயத்தில் அவர் ப்ரெக்னன்சி பைபிள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில், கர்ப்பத்தின் அனுபவம் குறித்தும், தனது சவால்களைப் பற்றியும் குழந்தையை எதிர்பார்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ஆரோக்கியமாக இருப்பது பற்றியும் அவர் எழுதியுள்ளார்.

இந்நிலையில், கரீனா கபூர் புத்தகத்தின் தலைப்பில் பைபிள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக கரீனா கபூர் மீதும் புத்தக விற்பனையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களின் புனித நூலாக பைபிள் உள்ள நிலையில், கரீனா கபூர் தனது கர்ப்பத்தை பைபிள் உடன் ஒப்பிடுவது தவறு என்றும், கரீனா கபூர் மலிவான விளம்பரத்திற்காக பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரீனா கபூரின் புத்தகத்தின் உடைய தலைப்பில் பைபிள் என ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதை குறித்து கரீனா கபூர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆண்டனி தனது மனுவில் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரியதை அடுத்து, புத்தக விற்பனையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News