`அப்பா இனிமே உங்க வாழ்க்கைல குறுக்கிட மாட்டேன்' - நடிகர் பாலாவின் உருக்கமான பதிவு
- அஜித்துடன் ‘வீரம்’ என்ற படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலா.
- இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
அஜித்துடன் 'வீரம்' என்ற படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலா. ரஜினியுடன் அண்ணாத்த, காதல் கிசு கிசு, கலிங்கா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாடகி அம்ருதாவை திருமணம் செய்து கொண்ட பாலாவுக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற பெண் மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பாலா மகள் வெளியிட்டுள்ள வீடியோவில், " என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாக கூறி வருகிறார். அவர் என்னை நேசிக்க சின்ன காரணம் கூட இல்லை. என்னையும், என் அம்மாவையும் குடித்து விட்டு டார்ச்சர் செய்ததுதான் கண் முன் வருகிறது. அந்த நேரத்தில் குழந்தை என்பதால் என்னால் அம்மாவுக்கு உதவ முடியவில்லை. என் மீது உண்மையில் பாசமிருந்தால் என் வாழ்க்கையில் குறுக்கிடாதீங்க" என கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்து பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், "மகளே என்னை அப்பா என்று அழைத்ததற்காக நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. மகளுடன் வாக்குவாதம் செய்பவன் மனிதனே இல்லை. உனக்கு 3 வயதாக இருக்கும் போது நான் பாட்டிலை வீச முயன்றதாகவும், 5 நாட்கள் பட்டினி போட்டதாகவும் கூறி இருக்கிறாய். உன்னுடன் வாக்குவாதம் செய்யாமல் சரணடைகிறேன். இனி நான் உன் வாழ்க்கையில் வர மாட்டேன். நன்றாக படித்து வளர வாழ்த்துக்கள்" என்று கூறி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.