சினிமா செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா.. ஓடிடிலாம் கிடையாது டைரக்டா தியேட்டர்தான் 'இந்தியன் 3' ரீ - ஷூட்?

Published On 2024-11-15 14:39 GMT   |   Update On 2024-11-15 14:39 GMT
  • நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
  • கதைக்கு தேவையான காட்சிகளை ரீ -ஷூட் எடுக்க கமல்ஹாசன் கூறியுள்ளாராம்

ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான கிளாசிக் ஹிட் படம் "இந்தியன்". இந்த படம் கடந்த தொடர்ச்சியாக இந்தியன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியானப்பிறகு உலகம் முழுவதும் உள்ள மக்கள் படத்தை ட்ரோல் செய்ய தொடங்கினர். இந்தியன் தாத்தா தோற்றம் முதல், பிரியா பவானி சங்கர் நடிப்பு, ஷங்கர் இயக்கம் வரை இணையத்தில் கலாய்த்துத் தள்ளினர். இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலை இப்படம் பெற்றது.

 

இந்தியன் 2 படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 படத்திற்கு மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இல்லை என்பதால் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

ஆனால் இதற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் உடன்படவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் சில காட்சிகளை ஷூட் செய்து படத்தை தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்று அவர்கள் உறுதியாக உள்ளார்களாம்.

இந்தியன் 2 போல இந்தியன் 3 ஆகிவிடக்கூடாது என்பதால், அந்த கதைக்கு தேவையான காட்சிகளை ரீ -ஷூட் எடுக்க கமல்ஹாசன் கூறியுள்ளாராம். எனவே தற்போது சங்கர் தான் ராம் சரணை வைத்து இயக்கியுள்ள கேம் செஞ்சர் புரமோஷன் பணிகள் முடிந்த உடன் இந்தியன் 3 ரீ - சூட் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த ரீ - சூட்டிற்கு பட்ஜட்டாக 100 கோடி ரூபாய் வரை ஷங்கர் லைகாவிடம் கூறியுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. கேம் செஞ்சர் அடுத்த வருடம் பொங்கலை ஒட்டி ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News