சினிமா செய்திகள்

உரிமைக்குரல் எழுப்பிய பத்திரிகையாளர்கள்.. தெறித்து ஓடிய ஜாலியோ ஜிம்கானா இயக்குநர்

Published On 2024-11-19 14:04 GMT   |   Update On 2024-11-19 14:04 GMT
  • ஜாலியோ ஜிம்கானா படத்தில் இடம்பெற்ற போலிஸ் காரனா கட்டிக்கிட்டா' பாடல் இணையத்தில் வைரலானது.
  • இந்த பாடலை சினிமா பத்திரிகையாளரான ஜெகன் எழுதியுள்ளார்.

பிரபு தேவா கடைசியாக நடித்து வெளியான பேட்ட ராப் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வசூலை பெறவில்லை.

இதனையடுத்து இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடலான `போலிஸ் காரனா கட்டிக்கிட்டா' பாடல் ஆண்ட்ரியாவின் குரலில் டபுள் மீனிங் வரிகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை சினிமா பத்திரிகையாளரான ஜெகன் எழுதியுள்ளார்.

இதனிடையே இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் பாடல் வரிகளை எழுதியது ஜெகன் என்று இல்லாமல் இயக்குநர் சக்தி சிதம்பரம் என்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜாலியோ ஜிம்கானா படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து படம் தொடர்பாக பேசினர். இந்த நிகழ்வில் அப்படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரத்திடம் பாடலாசிரியர் ஜெகனுக்காக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனால் கடுப்பான இயக்குநர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அரங்கத்தில் இருந்து வெளியேறினார்.

பின்னர் பிரபு தேவா பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி ஜெகனை மேடையேற சொன்னார். இதனால் அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேடை ஏறி பேசிய ஜெகன், "இந்தப் படத்தை 8 கோடி ரூபாய் பட்ஜெட் என்று  ஆரம்பித்தோம். ஆனால் 15 கோடி ரூபாய் வரை செலவு ஆனது. இதுதொடர்பாக எங்கள் தயாரிப்பாளரிடம் நான் சில விஷயங்களை கூறினேன். அது இயக்குநர் சக்தி சிதம்பரத்தை கோபப்படுத்திவிட்டது. அப்போதே அவர் தயாரிப்பாளரிடம், பாடலில் ஜெகனின் பெயரை போடமாட்டேன் என்று கூறிவிட்டார. எங்கள் தயாரிப்பாளரோ ஜெகன்வளர்ந்து வரும் பையன், அவர் பெயரை போடுங்கள் என்று கோரிக்கை வைத்தார்" என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News